Showing all 7 resultsSorted by popularity
கிச்சிலிக் கிழங்கு பவுடர் – Kichali Kizhangu Powder
₹90.00 – ₹340.00Price range: ₹90.00 through ₹340.00கிச்சிலி கிழங்கு, வெள்ளை மஞ்சள் அல்லது பூலாங்கிழங்கு என அழைக்கப்படும் இந்தக் கிழங்கு பல மருத்துவ பயன்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல் போன்றவற்றை குணமாக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும், சுவாச மண்டலத்தை பலப்படுத்தவும் உதவுகிறது.
- வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல்:
கிச்சிலி கிழங்கு தூள் தேனில் கலந்து சாப்பிடலாம். அல்லது கொதிக்க வைத்த நீரில் கிச்சிலி கிழங்கு, மஞ்சள் சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.
- ஜீரண சக்தி:
ஜீரண சக்தியை அதிகரிக்க கிச்சிலி கிழங்கு உதவுகிறது.
- சுவாச மண்டலம்:
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள கிச்சிலி கிழங்கு, சுவாச மண்டலத்தை பலப்படுத்துகிறது.
- வாதவலி:
கிச்சிலி கிழங்கு பொடியை நீரில் கலந்து பற்றுப்போட்டால் வாதவலிகள் குறையும்.
- சருமம்:
காயங்கள் மற்றும் சரும பிரச்சினைகளுக்கு தீர்வாக கிச்சிலி கிழங்கு பயன்படுகிறது.
- உடற் நாற்றம்:
கிச்சிலி கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம் மற்றும் வியர்வை நாற்றம் குறையும்.
- புற்றுநோய்:
சில ஆய்வுகள் கிச்சிலி கிழங்கில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் இருப்பதாக கூறுகின்றன.
- ஆஸ்துமா:
ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு கிச்சிலி கிழங்கு தீர்வாக அமைகிறது.
- சளி, மலச்சிக்கல், வாயு தொந்தரவு:
இந்த கிழங்கு சளி, மலச்சிக்கல், வாயு தொந்தரவு போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது.
கிச்சிலி கிழங்கை பயன்படுத்துவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த கிச்சிலி கிழங்கு பொடியை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
கிச்சிலிக் கிழங்கு – Kichili kilangu
₹70.00 – ₹620.00Price range: ₹70.00 through ₹620.00பூலாங்கிழங்கு: கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.
வடமாநிலங்களில் இதை ஊறுகாய் போட பயன்படுத்துவார்கள். ஒரு சில வெளிநாடுகளில் மசாலா பொருளாக பயன்படுத்துகிறார்கள்.
தோற்றத்தில் பார்ப்பதற்கு இஞ்சி போலவே ஆரஞ்சு நிறத்தில் இந்த கிழங்கு காணப்படும். இதன் வாசனை மாம்பழம் போலவே இருக்கும். சுவை கசப்புத் தன்மையுடன் இருக்கும்.
முன்பெல்லாம், குழந்தைகளை குளிக்க வைக்க இந்த கிச்சிலி கிழங்கை தான் பயன்படுத்தி உள்ளனர். இப்போதும் கூட நாட்டு மருந்து கடைகளில் இந்த கிழங்கு கிடைக்கிறது.
இதிலுள்ள ‘குர்குமின்’ என்ற பொருளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அடங்கியிருப்பதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துகிறது. அத்துடன், புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கவும் இந்த கிச்சிலி கிழங்கு பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, பெண்களை தாக்கக்கூடிய மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவற்றை நெருங்க விடாமல் காக்கிறது.
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. மிகச்சிறந்த கிருமி நாசினியாக கிச்சிலி கிழங்குகள் பயன்படுகின்றன.
இதைக்கொண்டு டீ தயாரித்து குடிக்கலாம், சூப் செய்தும் குடிக்கலாம். இவ்வாறு செய்வதனால் மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படும் அத்தனை கோளாறுகளும் நீங்குகிறது.
இந்த கிழங்கை காயவைத்து, இடித்து தூள் செய்து, சலித்து எடுத்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
நுரையீரலில் ஏற்படும் கோளாறுகள், ஆஸ்துமா, சளி, இருமல், போன்றவற்றுக்கும், அஜீரணம், மலச்சிக்கல், வாயு தொந்தரவு போன்ற அத்தனை பிரச்சனைக்கும் இந்த கிச்சிலி கிழங்கு பொடி அருமருந்தாகிறது.
அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் கூட தாராளமாக இந்த பொடியை பயன்படுத்தலாம்.
இந்த தூளிலிருந்து சிறிது எடுத்து தேனில் கரைத்து சாப்பிட்டு வர இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல் ஆகியவவை காணாமல் போகும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கிச்சிலி கிழங்கையும், சிறிது மஞ்சளையும் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால் இருமல், சளி, காய்ச்சல் எதுவாக இருந்தாலும் ஓடிவிடும்.
இந்த பொடியில் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து, காயங்கள், வலிகள், வீக்கங்கள், சரும அலர்ஜி, புண்கள் இருக்கும் இடத்தில் தடவினால், அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
அதுமட்டுமல்லாமல் தோல் பிரச்சனை, முகப்பரு, கரும்புள்ளிகளுக்கு தரப்படும் சிகிச்சைகளிலும் இந்த கிழங்கு பயன்படுகிறது. குறிப்பாக, இந்த கிழங்கின் வேர்ப்பகுதிகள் தான் மருந்தில் சேர்க்கப்படுகின்றன.
கிச்சிலி கிழங்கை பயன்படுத்துவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த கிச்சிலி கிழங்கை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
வேப்ப எண்ணை – Neem Oil
₹35.00 – ₹285.00Price range: ₹35.00 through ₹285.00வேப்ப எண்ணெய் சிறந்த கிருமி நாசினியாகவும், தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது. இது முகப்பரு, தோல் அழற்சி, அரிப்பு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகளைக் குணப்படுத்துகிறது, சருமத்தை மென்மையாக்கி, காயங்களை விரைவாக ஆற்றுகிறது. மேலும், இது கொசு விரட்டியாகவும், பூச்சிக் கொல்லியாகவும், வறண்ட சருமப் பராமரிப்பிலும் சிறந்தது.
- சருமப் பராமரிப்பு: வேப்ப எண்ணெய் முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் அரிக்கும் தோலழற்சி (Eczema) போன்ற தோல் தொற்றுகளை நீக்கி, சருமத்தை சுத்தமாகவும் பொலிவாகவும் மாற்றுகிறது.
- தலைமுடி ஆரோக்கியம்: பொடுகுத் தொல்லை, பேன் மற்றும் வறண்ட உச்சந்தலை பிரச்சனைகளுக்குத் தீர்வு அளிக்கிறது.
- காயங்களை ஆற்றுதல்: நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் (Antimicrobial properties) உள்ளதால், உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் தோல் வெடிப்புகளை விரைவாகக் குணமாக்க உதவுகிறது.
- கொசு மற்றும் பூச்சி விரட்டி: தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவுவதன் மூலம் கொசு மற்றும் பூச்சி கடிகளில் இருந்து பாதுகாப்பைப் பெறலாம்.
- இயற்கை பூச்சிக்கொல்லி: விவசாயத்தில் தாவரங்களைப் பாதுகாக்கவும், வீட்டில் உள்ள பூச்சிகளை விரட்டவும் இது ஒரு சிறந்த இயற்கை பூச்சிக்கொல்லியாகப் பயன்படுகிறது.
குறிப்பு: வேப்ப எண்ணெய் மிகவும் வீரியமானது, எனவே சருமத்தில் பயன்படுத்தும் போது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்துவது நல்லது.
பூஜை/விளக்கு நோக்கத்திற்காகவும் மற்றும் மேற் பூச்சுக்காகவும் உபயோகபடுத்தப் படுகிறது.
இந்த வேப்ப எண்ணெயை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
எப்சம் சால்ட் – Epsom Salt
₹35.00 – ₹65.00Price range: ₹35.00 through ₹65.00எப்சம் உப்பு பல வழிகளில் பயன்படுகிறது. சருமத்தை மென்மையாக்கவும், தசைப் பிடிப்புகளைத் தணிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், நல்ல தூக்கத்தை பெறவும் இது பயன்படுகிறது. மேலும், இதை குளிக்கும் நீரில் கலந்து குளிப்பதன் மூலம் உடல் தளர்ச்சி பெற உதவுகிறது.
எப்சம் உப்பு (Epsom Salt), நாம் உணவில் பயன்படுத்தும் சாதாரண சோடியம் குளோரைடு அல்ல. இது மக்னீசியம், சல்பேட் போன்றவற்றின் கலவை. இதன் வேதியியல் அமைப்பின் காரணமாகவே `உப்பு’ எனப்படுகிறது.
இங்கிலாந்தில் உள்ள எப்சம் என்ற ஊரில் கண்டறியப்பட்டதால், `எப்சம் உப்பு’ என்று அழைக்கப்படுகிறது. கணுக்கால் வலி முதல் மனஅழுத்தம் வரை பல பிரச்னைகளுக்குத் தீர்வு தருவது இந்த உப்பு.
- கணுக்கால் வலி
வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எப்சம் உப்பைக் கலந்து முழங்கால் வரை நீர் படும்படி முக்கி வைக்கவேண்டும். இதனால் கணுக்கால் வலி குறையும்.
- சருமம்:
எப்சம் உப்பு சருமத்தின் வீக்கத்தைக் குறைத்து, வடுக்கள் மற்றும் தழும்புகளை மறையச் செய்கிறது.
- உடலையும் மனதையும் தளர்வடையச் செய்கிறது:எப்சம் உப்பு குளியலறையில் கலந்து குளிக்கும்போது, உடல் மற்றும் மனம் ரிலாக்ஸ் ஆகி, நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
- தசைப் பிடிப்பு:எப்சம் உப்பு தசைப் பிடிப்புகளைத் தணித்து, வலியைப் போக்க உதவுகிறது.
- மலச்சிக்கல்:எப்சம் உப்பு மலத்தை மென்மையாக்கி, குடல் இயக்கத்தை அதிகரிக்க உதவுகிறது.
- மன அழுத்தம்:எப்சம் உப்பு மன அழுத்தத்தைக் குறைத்து, தளர்வை ஊக்குவிக்க உதவுகிறது. இது நமது மனநிலையை சிறப்பாக வைத்திருக்க உதவும்.
- தேனீக் கடி
தேனீக் கடி, கொசுக் கடி போன்றவற்றால் ஏற்படும் வீக்கத்தை எப்சம் உப்பு குறைக்கும்.
- முகப்பரு
நமது முகத்தில் சேர்ந்திருக்கும் அழுக்கை அகற்ற, எப்சம் உப்பு பயன்படும். இது, முகப்பரு போக்க சிறந்த மருந்து.
- வறண்ட உதடுகள்
இதை உதட்டில் தடவிவந்தால், உதடு மென்மையாக மாறும். வறண்ட உதடுகள் எப்சம் உப்பால் சரியாகும்.
- முடிப் பாதுகாப்பு
சிறிது எப்சம் உப்பை ஹேர் கண்டிஷனரில் கலந்து தலைக்குத் தேய்த்து இருபது நிமிடங்கள் பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ உச்சந்தலை தூய்மையாகும். முடி வளர்ச்சி அதிகமாகும்.
- குளியல்:வெதுவெதுப்பான நீரில் எப்சம் உப்பை கலந்து குளிப்பது, உடல் தளர்ச்சி பெற உதவுகிறது.
- உடம்பில் தடவுதல்:தசைப் பிடிப்புள்ள இடத்தில் எப்சம் உப்பை நீரில் கலந்து தடவுவது, வலியைப் போக்க உதவுகிறது.
- காலைக்கு பதிலாக எப்சம் உப்பு:எப்சம் உப்பு மெக்னீசியத்தை விரைவாக உறிஞ்ச உதவுகிறது, இது சரும அழற்சி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.
- மலச்சிக்கலுக்கு:
3 தேக்கரண்டி எப்சம் உப்பை தண்ணீரில் கலந்து குடிப்பது, மலத்தை மென்மையாக்கி, குடல் இயக்கத்தை அதிகரிக்க உதவுகிறது.
எப்சம் உப்பை உட்கொள்வதற்கும், பயன்படுத்துவதற்கும், மருத்துவ நிபுணரின் ஆலோசனை பெறுவது நல்லது.
எப்சம் உப்பை Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
சந்தனம் பொடி – Sandal Powder
ஆரஞ்சு தோல் – Orange peel
₹35.00 – ₹70.00Price range: ₹35.00 through ₹70.00- ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது.மேலும் இதன் தோலில் பாலிபினால்கள், தாவர கலவை உள்ளதால், நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடவும், உடல் பருமனை பராமரிக்கவும் உதவுகிறது பழத்தை விட தோலில் பாலிபினால்கள் அதிகளவில் காணப்படுகிறது. ஆரஞ்சு தோல்களில் இருக்கும் எண்ணெய்கள் போன்ற பொருள் தோல் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. சுவையான இந்த பழத்தின் தோல்களில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால்,செரிமான சம்பந்தமான பிரச்சணைகளுக்கும் உதவுகிறது.
- ஆரஞ்சு தோலை பயன்படுத்துவதால் உண்டாகும் சரும பலன் :ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு, ஆரஞ்சு பழத்தின் தோல் பயன்படுகிறது. இதில் அதிக அளவுள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தை மிளிரச் செய்கிறது. வீட்டிலேயே ஆரஞ்சு பழத்தோலை வைத்து பொடி தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் இந்த பொடி சருமத்தை இயற்கையாக பிரகாசமாக்கும். இந்த தூளை தினமும் முகத்தில் தேய்த்து வந்தால், கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் குறையும். ஆரஞ்சு தோல்கள் சிலவற்றை வெயிலில் காயவைத்து, தோலை நன்றாக தூளாக மாறும் வரை மிக்சியில் அரைக்கவும். இந்த ஆரஞ்சு தோல் பொடியை தயிருடன் சேர்த்து பேஸ் பேக்காக பயன்படுத்தலாம்.