Filter by price
By Brand
Stock status
Showing all 6 resultsSorted by latest
கை குத்தல் அரிசி – Kai Kuthal Arisi
இந்த அரிசியில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இதய நோய்கள், புற்றுநோய் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். உடல் எடையை குறைக்கிறது.
கை குத்தல் அரிசி என்பது, இயந்திரங்கள் மூலம் அரைக்காமல், மர உரல் அல்லது கல்லுரலில் மர உலக்கையால் அடித்து எடுக்கப்படும் அரிசி வகை ஆகும். இதில் நெல்லின் மேலுள்ள உமி மட்டும் நீக்கப்பட்டு, தவிடு நீக்கப்படாமல் இருக்கும்.
-
சத்துக்கள்:
கை குத்தல் அரிசியில் வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
-
நார்சத்து:
இதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது, இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
-
புரதம்:
கை குத்தல் அரிசியில் புரதமும், கொழுப்பும் உள்ளது, இது உடலுக்குத் தேவையான சத்துக்களை அளிக்கிறது.
குதிரை வாலி அரிசி – Banyard Millet Rice
குதிரைவாலி அரிசிக்கென்று தனிச் சிறப்புக் குணம் உண்டு. இந்த சிறு தானியம் எல்லா வயதினருக்கும் ஏற்ற சத்துமிகுந்த உணவாகும். இதை ஏன் குதிரைவாலி என்று அழைக்கப்படுகிறது தெரியுமா? கதிர் விட்ட பின் தானியங்கள் கொத்தாகக் குதிரைக்கு வால் முடி தொங்குவது போலக் காட்சி தருவதால் இதற்குக் குதிரைவாலி என்ற காரணப் பெயர் உண்டானது.
மானாவாரி பயிர் என்பதால் நச்சுத்தன்மை இருக்காது. அதே நேரத்தில் உமி நீக்கி நீண்ட நாட்கள் வைத்திருக்கவும் முடியாது. இது புற்கள் வகையைச் சேர்ந்த தாவரம் ஆகையால் இதை புல்லுச்சாமை என்றும் அழைப்பதுண்டு.
மற்ற சிறுதானிய வகைகளை விட அளவில் மிகமிகச் சிறியது. சிறியதானாலும் இதில் கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பச்சையம் இல்லாத சிறுதானியமாகும். மேலும் இதில் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளது. குதிரைவாலியில் கோதுமையில் இருப்பதை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. கால்சியம், பி-கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின் ஆகிய சத்துக்களும் இருக்கிறது. குறிப்பாக இதில் மாவுச் சத்து மற்றும் கொழுப்புச் சத்தும் அதிகமாகக் காணப்படுகிறது.
சராசரியாக 100 கிராம் குதிரைவாலியில் புரதச் சத்து 6.2 கி, கொழுப்புச் சத்து 2.2 கி, தாது உப்புகள் 4.4 கி, நார்ச்சத்து 9.8 கி, மாவுச்சத்து 65.5 கி, கால்சியம் 11 மி.கி, பாஸ்பரஸ் 280 மி.கி அடங்கியுள்ளது.
குதிரைவாலி அரிசியின் பயன்கள்! உணவாகவும், தீவனமாகவும் பயன்படும் சிறுதானியங்களில் விசேஷமான வகையைச் சேர்ந்தது குதிரைவாலி. இது ஊட்டச்சத்து அதிகமுள்ள க்ளூட்டன் இல்லா உணவாகும். இதன் மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக சமீப காலமாக இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இந்தியாவை பூர்விகமாக கொண்ட குதிரைவாலி அரிசியை பல நூற்றாண்டுகளாக நம் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஊட்டச்சத்து நிறைந்தது: மிகவும் சிறிய தானிய வகையைச் சேர்ந்த குதிரைவாலி அரிசியில் பல முக்கியமான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளது. வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட் என பலவும் குதிரைவாலி அரிசியில் உள்ளது. இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி அடங்கிய குதிரைவாலி அரிசியை அவசியம் நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
க்ளூட்டன் இல்லா உணவு : குதிரைவாலி அரிசியில் க்ளூட்டன் இல்லாதது மிகப்பெரிய பலனைக் கொடுக்கும். ஆகையால் கோதுமை, பார்லி போன்ற செலியாக் நோய்களை உருவாக்கும் தானியங்களுக்குப் பதிலாக குதிரைவாலி அரிசியை பயன்படுத்தலாம்.
குறைவான க்ளைசைமிக் குறியீடு : குதிரைவாலி அரிசியில் குறைவான க்ளைசைமிக் இருப்பதால், இதை சாப்பிட்டதும் உடனே சர்க்கரை அளவு அதிகரிக்காது. இதனால் டயாபடீஸ் நோயாளிகளுக்கு இது மிகச்சிறந்த உணவாகும்.
செரிமான ஆரோக்கியம் : சீரான இடைவெளியில் மலம் கழிப்பதை ஊக்கப்படுத்தி மலச்சிக்கலை போக்க உதவுகிறது குதிரைவாலி அரிசி. அதற்கு முக்கிய காரணம் இதிலுள்ள நார்ச்சத்து. இது நம் குடலை ஆரோக்கியமாக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது.
உடல் எடை பராமரிப்பு : உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் குதிரைவாலி அரிசியை தங்கள் உணவில் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். குதிரைவாலி அரிசியில் அதிகளவு நார்ச்சத்தும் குறைவான கலோரிகளும் இருப்பதால், இதை சாப்பிட்ட உடனே வயிறு நிறைந்த திருப்தி கிடைக்கிறது. இதனால் அதிகமான கலோரிகள் உண்பது தடுக்கப்படுகிறது. இது உடல் எடையை பராமரிப்பதற்கு உதவியாக இருக்கிறது.
இதய நலன் : அடிக்கடி தங்கள் உணவில் குதிரைவாலி அரிசியை சேர்த்துக் கொள்வதன் மூலம் இதயம் ஆரோக்கியம் பெறும். குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை உணவில் சேர்ப்பதன் மூலம் இதய நோய் வரும் ஆபத்தைக் குறைக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. குதிரைவாலி அரிசியில் உள்ள நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் ரத்த அழுத்த்த்தை கட்டுப்படுத்தி கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
கொள்ளு குடம்புளிச் சாறு – Horsegram Malabar Tamarind Extract
Weight Loss supplement
மாம்பருப்பு பொடி – Maamparuppu Powder
Diarrhea, flatulence, constipation, menorrhagia and stomach worms will decrease.
லவங்கம் பட்டை பொடி – Cinamon Powder
ஆல்பகோடா பழம் – AalPakkoda Fruit
₹30.00 – ₹500.00இரும்புச்சத்து இதில் அதிகமாகக் காணப்படும் காரணமாக இரத்த சோகையை எளிதில் குணமாக்கவல்லது. செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதுடன் மலச்சிக்கலையும் போக்குகின்றது. ஆல்பக்கோடா பழத்தில் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை காணப்படுவதால் இதனை வாயில் போட்டு மென்றால் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.