Showing all 4 resultsSorted by popularity
பிரசவ லேகியம் – Prasava legiyam
₹180.00 – ₹210.00Price range: ₹180.00 through ₹210.00பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்களின் கருப்பையைச் சுத்தப்படுத்தவும், உடல் வலிமையைப் மீட்கவும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் பிரசவ லேகியம் (Prasava Legiyam) உதவுகிறது.
- கருப்பை தூய்மை: பிரசவத்தின் போது கருப்பையில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றி, கருப்பையை பழைய நிலைக்குத் திரும்பச் செய்கிறது.
- உடல் வலிமை: பிரசவத்தால் ஏற்படும் சோர்வு, முதுகு வலி மற்றும் தசை வலிகளை நீக்கி உடலுக்குப் புதிய ஆற்றலைத் தருகிறது.
- தாய்ப்பால் சுரப்பு: தாய்மார்களுக்குப் பால் சுரப்பை அதிகரிக்கச் செய்து, குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்க உதவுகிறது.
- செரிமானம்: ஜீரண சக்தியை மேம்படுத்தி, வாயு தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கிறது.
- சளி, இருமல் தடுப்பு: பிரசவ காலத்தில் ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகளில் இருந்து பாதுகாத்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
இந்த லேகியத்தை மருத்துவர் அல்லது அனுபவம் வாய்ந்த பெரியவர்களின் அறிவுரையின்படி, பிரசவத்திற்குப் பிறகு சுமார் 3 மாதங்கள் வரை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். இது போன்ற பாரம்பரிய மருந்துகளை வாங்க தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
Ingredients
Chukku, Thippili, Na. Amukkara Kizhangu, Adhimadhuram, Sitharathai, Mavilangapattai, Thalisapathiri, Valmilagu, Vaividangam, Vellai milagu, Sathakuppai, Omam, Karunjeeragam, Parangipattai, Perarathai, Siruthekku, Thippili, Vellai vettiver, Kadugu rohini, Perunkayam, Kirambu Syzygium, Sadamanjil, Sathaveri, Malli, Sirunagapoo, Seeragam, Elam, Korai kizhangu, Panai vellam, Thein, Nei.
Indications
Pandu (Anaemia), Sobai (Oedema), Soolvanthi (Vomiting). Prasava Allukku (Removes the unwanted contents of the uterus after delivery), Palaveenam (Weakness), Thaipaal Enmai (Poor secretion of mothers milk) it is a very good. lactogogue. Yoni Noikal (Disorders of Vaginal tract), Seerana Kolarukal (Digestive disorders). It strengthens the uterus. After delivery can be used for six months to one year.
கருங்காலி – Karungali
₹40.00 – ₹175.00Price range: ₹40.00 through ₹175.00கருங்காலி கட்டை பல நன்மைகளை வழங்குகிறது. இது நரம்புத் தளர்ச்சியை போக்கி புத்துணர்வு கொடுக்கும். உடலுக்கு வலிமைத்தரும் , குளிர்ச்சி தன்மை கொண்டது, பற்களுக்கு வலிமைவூட்டும். துவர்ப்புத் தன்மை மிக்கது.
கருங்காலி கட்டையின் பயன்கள்:
இதனை பயன்படுத்த ரத்தம் தொடர்பான அனைத்து ஆரோக்கிய கேடும் நீங்கும். சர்க்கரையின் அளவு குறையும். இரும்புச்சத்து அதிகரிக்கும். ரத்தக் கொதிப்பு முற்றிலும் அகலும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும். சுவாச,காச நோய்கள் தீரும். குடிப்பழக்கம் சரியாகும். பல், ஈறுகளில் ரத்தக் கசிவு சீராகும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.
பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும். மாதவிடாய் கோளாறை சீராக்கி குழந்தை பாக்கியம் ஏற்படுத்தும். வெள்ளைப்படுதல், அதிக உதிர போக்கிற்கு சிறந்த மருந்தாகும்.
ஆண்களுக்கு உடல் பலமடையும்.
ஆண்மை பெருகும்.நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.
சித்தர்கள், முனிவர்கள் போன்றோர் தங்கள் பயன்பாட்டிற்கு கருங்காலி கட்டைகளை பயன்படுத்தியுள்ளனர். கருங்காலி கட்டை வீடுகளில் உலக்கை, மரப்பாச்சி பொம்மைகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. மேலும், கோவில்களில் கும்பாபிஷேகத்தின் போது கலசத்தின் உள்ளே வைக்கப்பட்டு, நல்ல ஆற்றலை ஈர்க்கிறது.
- புத்துணர்வு:நரம்புத் தளர்ச்சியை போக்கி புத்துணர்வு அளிக்கிறது.
- ஆற்றல்:பிரபஞ்சத்தில் உள்ள நல்ல ஆற்றலை ஈர்க்கிறது.
- பயன்பாடு:சித்தர்கள், முனிவர்கள், குறி சொல்பவர்கள் போன்றோர் தங்களது பயன்பாட்டிற்கு கருங்காலி கட்டைகளை பயன்படுத்துகிறார்கள்.
- வீட்டுப் பயன்பாடு:வீடுகளில் உலக்கை, மரப்பாச்சி பொம்மைகள் போன்றவற்றுக்கு கருங்காலி கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
- கோவில் பயன்பாடு:கோவில்களில் கும்பாபிஷேகத்தின் போது கலசத்தின் உள்ளே கருங்காலி கட்டைகள் வைக்கப்படுகின்றன.
தொழில் கூடத்தில் வைத்து வழிபட்டால் தொழில் விருத்தி அடையும், லாபம் பெருகும். செல்வ வளமும், நிம்மதியும் நிலைக்கும். வாகனங்களில், கைப்பையில் வைக்க விபத்து ஏற்படாது. மாலையாக அணிந்து கொண்டு தியானம் மந்திர ஜபம் செய்ய காரிய சித்தி கிடைத்து வீட்டில் நிம்மதி, அமைதி நிலைக்கும். அன்னை வாராகி மற்றும் லட்சுமி நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அமுக்கரா சூரணம் – Amukkara Choornam
- இந்த அமுக்கரா சூரணம் சிக்குன்குனியா, டெங்கு, எய்ட்ஸ் போன்ற வைரஸ் நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
இந்த அமுக்கிரா சூரணம் தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
அத்தி பட்டை – Aththi pattai (Fig Bark)
₹25.00 – ₹50.00Price range: ₹25.00 through ₹50.00அத்தி மரத்தின் பட்டை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், அதிகப்படியான ரத்தப்போக்கு மற்றும் வெள்ளைப்படுதலைத் தடுக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் பாரம்பரிய மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகிறது.
- சர்க்கரை நோய்: ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் இன்சுலின் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
- பெண் நலன்: பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு (பெரும்பாடு) மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற தொல்லைகளைக் குறைக்கக் கஷாயம் செய்து குடிக்கலாம். மேக நோய், புண்களை குணமாகும். கர்ப்பப்பை கோளாறுகளை நீக்கும்.
சிறுநீர் கட்டுப்படுத்த: சிலருக்கு சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறும். சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு வரும் போதே சிறுநீர் வெளியேறிவிடும். இதைக்கட்டுக்குள் வைக்க அத்திமரப்பட்டை 20 கிராம் எடுத்து அம்மியில் வைத்து நசுக்க வேண்டும். இதை சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும். இதை இறக்கி வடிகட்டி இளஞ்சூடாக இருக்கும் போதே அரைடம்ளர் குடிக்க வேண்டும். இதை காலையிலும் மாலையிலும் என ஐந்து நாள்கள் தொடர்ந்து குடித்துவந்தால் சிறுநீர் கட்டுப்பாடு இயற்கையாகவே கட்டுப்படும்.
- வயிற்றுப் பிரச்சனைகள்: வயிற்றுப் போக்கு மற்றும் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்ய உதவுகிறது.
- புண்கள் மற்றும் தோல்: வாய் புண்கள், தோல் வீக்கம் மற்றும் பருக்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. புண்கள் ஆறுவது தாமதமாகிறது. புண்கள் தீவிரமாகிறது என்பவர்கள் அத்திப்பட்டையை 4 அல்லது 5 எடுத்து கொள்ளவும். புண்களின் தன்மைக்கேற்ப எடுத்து சிறிய மண்சட்டியில் சேர்த்து சிறிது நீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கவும். இதை வடிகட்டி இளஞ்சூடாக இருக்கும் போது புண்களின் மீது ஊற்றி கழுவி பிறகு மருந்து போடலாம்.
மூலம்: ரத்தமூலத்துக்கு அத்திமரப்பட்டை சிறந்த மருந்தாகும். ரத்தமூலம், ஆசனவாய்க்கடுப்பு, ரத்த பேதியும் நிற்கும்.
சீதபேதி, ரத்தபேதி: சிலருக்கு உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும் போது அல்லது வயிற்றுக்கோளாறுகளால் ரத்தபேதி சீதபேதி உண்டாகும். இவர்களுக்கு அத்திப்பட்டை நல்ல பலன் தரும்.
அத்திமரப்பட்டை மருத்துவகுணங்கள் மிக்கது. ஆனால் இதை கைவைத்தியமாக எடுத்துகொள்ளும் போது சித்த மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
இந்த அத்திமரப்பட்டை – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.