Showing all 2 resultsSorted by popularity
காட்டுச் சீரகம் – Kaattu Jeeragam
₹50.00 – ₹180.00Price range: ₹50.00 through ₹180.00உடல் எடை, புற்றுநோய் தடுக்கும் காட்டு சீரகம்
காட்டுசீரகம் வயிறு உபாதைகள், உடல் பருமன், சயாடிகா என்று கூறப்படும் நரம்புகள் இழுத்து வலிக்கும் பிரச்சனை போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.
உடல் எடை குறைப்பு
உடலில் ஏற்படும் சிறுநீரக பிரச்சனையால் கால்கள் வீக்கத்தை குறைக்க ஒரு தேக்கரண்டி காட்டு சீரக சூரணம் எடுத்து, அதைத் தேனில் குழைத்து சாப்பிடலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள் தேன் சேர்க்காமல், வெந்நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். இது தைராய்டு சீராக சுரக்கவும் உதவுகிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காட்டு சீரகத்தை மருந்தாக சாப்பிட்டு வரலாம். சிலருக்கு வயிறு மட்டும் பானை போல இருக்கும். வாயு தொந்தரவுகள் அதிகம் இருக்கும். இதுபோன்ற பிரச்னையை எதிர்கொள்ளும் மக்கள், காட்டு சீரகம் சூரணம் ஒரு சிட்டிகை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை பருகி வந்தாலே வயிறு குறைய ஆரம்பித்து வாயு பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அதோடு உடல் எடையும் குறையும்.
புற்றுநோய் தடுப்பு மருந்து
காட்டு சீரகத்துக்கு புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி உண்டு. ரத்த குழாய் சுருக்கம், ரத்த குழாய் அடைப்பு, வெரிகோஸ் வெயின் பிரச்சனைகள் என்று எல்லாவற்றுக்கும் இது தீர்வு தரக்கூடியதாக இருக்கிறது.
மூட்டு வலி கால்களில் வீக்கம் என்றால் காட்டு சீரகத்தை மருந்தாக எடுத்துக்கொள்ளும்போது ரத்த குழாய் மண்டலத்தின் ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தி, ரத்த குழாயின் பிரச்சனைகளைத் தீர்க்கிறது.
காட்டு சீரகத்தை தகுந்த மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்தாக எடுத்துக்கொள்வது தவறு. எனவே, உங்களுக்கு தெரிந்த ஆயுர்வேத மருத்துவரிடம் இதுபற்றிய ஆலோசனைகளை பெறுவது நல்லது.
இந்த காட்டு சீரகத்தை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
பற்படாகம் – Parpadagam
₹25.00 – ₹45.00Price range: ₹25.00 through ₹45.00பற்பாடகம் (அ) பற்படாகம் முழுத் தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. மலமிளக்கும்; பசியைத் தூண்டும்; வியர்வையைப் பெருக்கும்.
உடலைத் தேற்றும்; காய்ச்சல் தணிக்கும்; உடல் வெப்பத்தைக் குறைக்கும்; அழுகலகற்றும்; தாகம், பித்த நோய்களை போக்கி கண்களுக்கு குளிர்ச்சி உண்டாக்கும்.
காடுகள் அழிக்கப்பட்ட சமவெளிப் பகுதிகளில் அபரிதமாக வளர்கின்றது. முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. இது காய்ந்த நிலையில் எமது பாண்டி ஹெர்பல்ஸ் – நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் சுரத்துடன் கூடிய பேதி குணமாக 2கிராம் பற்பாடகத்தைப் பசுமையானதாகச் சேகரித்துக் கொள்ள வேண்டும். அதனைத் தண்ணீரில் நன்றாகக் கழுவி அம்மியில் அரைத்து 200 மிலி மோரில் கலக்கி உள்ளுக்கு கொடுக்க வேண்டும். தினமும் காலை, மாலை வேளைகளில் 3 நாள்களுக்கு இவ்வாறு கொடுத்து வரவேண்டும்.
காய்ச்சல் குணமாக பற்பாடகம் முழுத் தாவரம், கண்டங்கத்திரி இலைகள், ஆடாதோடை இலைகள், தோல் நீக்கிய சுக்கு, விஷ்ணுகிரந்தி முழுத் தாவரம், வகைக்கு 10 கிராம் சுத்தம் செய்து நன்றாக நசுக்கி ஒரு லிட்டர் நீரில் போட்டு ¼ லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு வேளைக்கு 50 மிலி வீதம் நான்கு வேளைகள் குடிக்க வேண்டும்.
கீல் வாயு குணமாக காய்ந்த பற்படாகம் வேர் 100 கிராம் நசுக்கி ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வரவேண்டும்.
கண் எரிச்சல் குணமாக முழுத் தாவரத்தையும் அரைத்து பசையாக்கி பாலில் கலந்து தலை, உடலில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.
- காய்ச்சலுக்கு சிறந்த சிகிச்சை.
- தைராய்டு நோய்க்கு சிகிச்சை அளிக்கிறது.
- இதயத் துடிப்பைக் குறைக்கிறது.
- PMS அறிகுறிகளை விடுவிக்கிறது.
- ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது.
- மூக்கில் இரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- இருமல் மற்றும் நெரிசலைக் குறைக்கிறது.
- தூக்கமின்மையை நீக்குகிறது.
இந்த மூலிகையை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.