Showing all 7 resultsSorted by popularity
மலர் கற்பூரவல்லி தைலம் – Malar Karpooravalli Thailam
- மார்புச் சளி, இருமல், தலைவலி மற்றும் தசை வலிகளைப் போக்க பெரிதும் உதவுகிறது.
- கற்பூரவல்லி தைலம் பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.
- தசைபிடிப்பு, ருமட்டாய்டு தொடர்பான முட்டி வலி, எலும்பு இணைப்புகளில் உண்டாகும் வலி போக்க செய்கிறது.
- தசை பிடிப்பு மற்றும் இறுக்கம் இருந்தால் அதை போக்கவும் இவை உதவுகிறது.
- சளி தொடர்பான பிரச்சனைகளின் போது இது நெஞ்சு சளி குறைக்க உதவுகிறது. தும்மல், மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனையின் போது அதை கட்டுப்படுத்த இவை உதவுகிறது.
- இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய உதவுகிறது. உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவுகிறது.
- உடலில் எங்கு வலிகள் இருந்தாலும் அதை சரி செய்ய இவை உதவுகிறது.
- தசைப்பிடிப்பு, உணர்ச்சியின்மை போன்ற நிலையில் சிகிச்சை அளிக்கவும் இவை உதவுகிறது.
Best Result for : Headaches, Neck Pain, All Joint Pain, Cold , Sinus, Nose Block, Wheezing, Throat Infections & you can Streaming
அகில் கட்டை – Akil Kattai
₹25.00 – ₹120.00Price range: ₹25.00 through ₹120.00அகில் கட்டை, அகில் மரத்தின் ஒரு பகுதியாகும், இது பல ஆரோக்கிய நன்மைகளுக்காகவும், பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது. இது ஆயுர்வேதம், திபெத்திய மற்றும் பாரம்பரிய கிழக்கு ஆசிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
- காய்ச்சலைத் தணிக்க:
அகில் கட்டை கடுமையான காய்ச்சலின் போது அதன் தாக்கத்தை குறைக்க உதவுகிறது.
- வலி நிவாரணி:
இது வலி நிவாரணி பண்புகளைக் கொண்டுள்ளது, இதனால் தொண்டை தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
- சரும நோய்களுக்கு:
அகில் கட்டை தூள் சரும நோய்களான படை, அரிப்பு, வறண்ட சருமம் போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம்.
- வீக்கத்தை குறைக்க:
அகில் உடலில் எந்தப் பகுதியில் வீக்கம் இருந்தாலும் அதை குறைக்க உதவுகிறது.
- வாந்திக்கு:
வாந்தி ஏற்படும் போது அகில் கட்டை புகை பிடித்து வாந்தியை கட்டுப்படுத்தலாம்.
- காயங்களுக்கு:
உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தால், அகில் கட்டை புகைபிடித்து காயங்கள் விரைவில் குணமாகும்.
- மன அமைதி:
அகில் கட்டையின் வாசனை மனதை அமைதிப்படுத்துகிறது.
- சோர்வை போக்க:
அகில் கட்டை உடல் சோர்வை போக்க உதவுகிறது.
- ஒற்றைத் தலைவலி, சிலவகை காய்ச்சல், பொதுவான வாத நோய்கள், படை மற்றும் சரும நோய்கள், வாந்தி போன்ற நோய்களை குணப்படுத்தவும் அகில் கட்டை பயன்படுகிறது
.
- கல்லீரல் நோயை குணமாக்கும்:
அகில் மரபுகை கல்லீரல் நோயை குணமாக்க உதவுகிறது.
- புகை:அகில் கட்டையை எரித்து அதன் புகையை சுவாசிப்பதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம்.
- தூள்:அகில் கட்டை தூள் சரும நோய்களுக்கு பயன்படுத்தலாம்.
- எண்ணெய்:அகில் கட்டை எண்ணெயை தயாரித்து பயன்படுத்தலாம்.
- மரம்:அகில் மரத்தை அலங்காரப் பொருளாகவும், வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.
- தூள்:
அகில் கட்டை தூளை வாசனைக்காகவும், சில மருந்துகளில் கலவையாகவும் பயன்படுத்தலாம்.
அதிமதுரம் மாத்திரை – Athimathuram Tablets – 500mgm (100 Nos)
சுவாசப் பிரச்னை மற்றும் கோளாறுகளுக்கு மிகச் சிறந்த ஒரு நிவாரணி.
Ingredients
| 1 Athimadhuram | Glycyrrhiza glabra | 91% |
| 2 Velampisin | Acacia nilotica | 9% |
Indications
Varattu Brumal (Dry Cough), Throat Soothenar, Akkaram (Oral ulcers), Gunmam (Peptic ulcer). Gives good relief when used like throat lozengers.
- Dosage: Typically 1 to 2 tablets, twice a day after meals, or as directed by an Ayurvedic or Siddha physician. They can generally be taken with warm water or milk.
- Safety: While safe for most, individuals with high blood pressure or diabetes should consult a doctor before long-term use.
Legal Disclaimer: *This statement has not been evaluated by the Food and Drug Administration. This product is not intended to diagnose, treat, cure, or prevent any disease.
தேன் நெல்லி – Sweet Amla
₹95.00 – ₹400.00Price range: ₹95.00 through ₹400.00தேன் நெல்லி (தேனில் ஊறவைத்த நெல்லிக்காய்) வைட்டமின் ‘சி’ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒரு சிறந்த ஆரோக்கிய உணவு. இதை தினமும் சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன.
நோய்த்தடுப்பு சக்தி:
உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை பலப்படுத்தி, சளி, இருமல் மற்றும் தொண்டைப்புண் போன்ற பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது.
சருமப் பொலிவு:
தினமும் காலையில் சாப்பிட்டு வர, ரத்தத்தை சுத்திகரித்து சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தரும். ரத்தம் சுத்தமாவதோடு, ரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.
முடி வளர்ச்சி:
இதில் உள்ள சத்துக்கள் முடி உதிர்வதைத் தடுத்து, முடி ஆரோக்கியமாக வளர உதவுகிறது.
செரிமானம் மேம்படும்:
அல்சர் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும். பசியின்மை நீங்கி, செரிமான மண்டலம் சீராக இயங்கும்.
-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/-*/
இதயத் தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.
கண் பிரச்சினை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.
தேனில் நெல்லிக்காயை ஊற வைத்துச் சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும், அப்பிரச்சினைகள் இருந்தாலும் குணமாகி விடும்.
அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் தேனில் ஊறிய நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
செண்பக பூ – Shenbaga Poo
₹80.00 – ₹375.00Price range: ₹80.00 through ₹375.00செண்பகப் பூவின் பயன்கள் மருத்துவ ரீதியாகவும், நறுமணப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. இது தலை நீர்க்கோர்வை, கண் நோய், தொண்டை வீக்கம் மற்றும் வயிற்று உப்புசம் ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுகிறது. மேலும், இதில் இருந்து எடுக்கப்படும் அத்தர் மற்றும் பன்னீர் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. செண்பகப் பூக்களைக் கஷாயமாக்கிப் பருகுவதன் மூலம் நரம்புத் தளர்வு போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.
- தலை நீர்க்கோர்வை:
செண்பகப் பூக்கள் தலை நீர்க்கோர்வையைக் குணப்படுத்த உதவும்.
- கண் நோய்கள்:
பூக்களை நீரில் ஊறவைத்து அந்தத் தண்ணீரால் கண்களைக் கழுவினால் கண் நோய்கள் நீங்கும்.
- தொண்டை வீக்கம்:
தொண்டை வீக்கத்தைக் குணப்படுத்த செண்பகப் பூ உதவுகிறது.
- வயிற்று உப்புசம்:
வயிற்று உப்புசம் மற்றும் குன்மம் (வயிற்றுப்புண்) ஆகியவற்றைக் குணப்படுத்த இதன் பூ மற்றும் மரப்பட்டை பயன்படுகிறது.
- நரம்புத் தளர்வு:
செண்பகப் பூவை கஷாயமாக்கி, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகுவது நரம்புத் தளர்வை நீக்க உதவும்.
- வாசனைத் திரவியங்கள்:
செண்பகப் பூக்களிலிருந்து எடுக்கப்படும் அத்தர், பன்னீர் போன்ற நறுமணப் பொருட்கள் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
- பூச்சித் தடுப்பு:செண்பகப் பூவில் நறுமண எண்ணெய் இருப்பதால், பூ உலர்ந்த பின்னரும் பூச்சிகள் அரிக்காது.
செண்பகப் பூவை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
அக்ரகாரம் – Agrakaram
₹50.00 – ₹100.00Price range: ₹50.00 through ₹100.00பல் பிரச்சனைகள் தீரும்
சிறிது அக்கரகாரத்தை அரைத்து, அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இது கால் லிட்டர் அளவு ஆனவுடன், அதை எடுத்து ஆற வைத்து கொள்ள வேண்டும். தினமும் அதில் சிறிதளவு வாயில் போட்டு அதக்கிக் கொண்டு, சிறிது நேரம் கழித்து கொப்பளிக்கவும். இதுபோன்று, தினமும் இரண்டு முறைகள் வீதம், மூன்று நாட்கள் கொப்பளித்து வந்தால் வாய் புண், தொண்டைப் புண், பல் வலி போன்ற பாதிப்புகள் விலகும்.
காய்ச்சலை கட்டுபடுத்தும்
அக்காரகாரம், அதி மதுரம், சுக்கு மற்றும் சித்தரத்தை சேர்த்து அரைத்து, பேரிச்சம் பழ விழுதைக் கலந்து தேன் சேர்த்து கொள்ள வேண்டும். கடும் காய்ச்சல் மற்றும் குளிர் காய்ச்சல் உள்ள நேரங்களில், நம் உடலில் உள்ள நீர்ச்சத்து எல்லாம் ஆவியாகி விடும். இதனால் நா வறட்சி ஏற்படும். அப்போது இந்த அரைத்த விழுதை சிறிதளவு நாக்கில் தடவினால், நாவில் ஏற்பட்ட வறட்சி நீங்கி, உமிழ்நீர் சீராக சுரக்க ஆரம்பிக்கும், காய்ச்சலும் குறைய ஆரம்பிக்கும்.
தொண்டை பிரச்சனைகள் தீர்க்கும்
அக்கரகார சூரணத்துடன் இந்துப்பு கலந்து, புளித்த நீர் அல்லது எலுமிச்சை சாறு விட்டு நன்கு அரைத்து, அதை உள் நாக்கில் தடவி வந்தால், தொண்டைக் கட்டிக்கொண்டு பேச முடியாமல், தண்ணீர் பருக முடியாமல், உணவு உண்ண முடியாமல் இருப்பவர்கள் அந்த பாதிப்புகள் விரைவில் நீங்கி நலம் பெறுவார்கள்.
குரலின் இனிமை கூடும்
அக்கரகாரம், அதி மதுரம் மற்றும் கரிசலாங்கண்ணி ஆகிய இம்மூன்று மருந்துகளையும் தனித்தனியே இடித்துத் தூளாக்கி, பின்னர் அவற்றை சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து காலை நேரங்களில் தினமும் சாப்பிட்டு வந்தால் குரலின் இனிமை கூடும்.
மயக்கத்தை போக்கும்
திடீரென மயங்கி விழுந்து பற்கள் கட்டிக் கொண்டவர்களுக்கு, அக்கிரகார சூரணத்தை, மூக்கில் வழியாக செலுத்தினால், உடனே மயக்கம் விலகி, சுய நினைவை அடைவார்கள். காக்கா வலிப்பு வியாதியும் சரியாகும்.
மலச்சிக்கலை தீர்க்கும்
நா வறட்சி ஏற்படும் சமயங்களில் சிலருக்கு, மலச்சிக்கல் ஏற்படும். அதற்கு மேற்சொன்ன அக்கரகார தேன் மருந்தில், கடுக்காய் சூரணம் சேர்த்து பயன்படுத்தினால் நாவறட்சி நீங்கி மலச்சிக்கல் தீரும்.
வாய் பிரச்சனைகளை தீர்க்கும்
சிலருக்கு உள்நாக்கு வளர்ந்து, பேச முடியாமல் தொண்டை கட்டிக்கொண்டு வலிக்கும். அப்படிப்பட்டவர்கள் சிறு அக்கரகார வேர்த் துண்டை, வாயில் போட்டுக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கி வந்தால், தொண்டை உள்நாக்கு பாதிப்பு, குரல் கம்முவது, அதீத தாகம் போன்றவை சரியாகும்.
மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்
உடலின் சீரான இயக்கத்துக்கும், மனதின் ஆற்றலுக்கும் கட்டுப்பாட்டு மையமாக விளங்கும் மூளையானது சரியாக இயங்காவிட்டால், சரியாக சிந்திக்க முடியாது, ஞாபக மறதி அதிகரிக்கும், மேலும் உடலில் சோர்வு உண்டாகும். இதற்கு அக்கரகார வல்லாரை மருந்து உதவி புரியும். அக்கரகாரம், வல்லாரை மற்றும் பூனைகாலி இவை மூன்றையும் சமமாக கலந்து தினமும், இருவேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், மூளையின் செயல்பாடு சீராகும். மேலும் உடலின் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து, சிந்திக்கும் திறனை மேம்படும்.
Disclaimer:
The content provided here is for informational purposes only. Pondy Herbals is not intended to substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of a qualified healthcare provider for any questions or concerns you may have regarding a medical condition. Pondy Herbals does not endorse or recommend any specific tests, physicians, procedures, opinions, or other information mentioned on the site.