Swelling

Showing all 8 resultsSorted by popularity

கொடிவேலி எண்ணை – Kodiveli Oil

Original price was: ₹248.00.Current price is: ₹225.00.
உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பிரச்சினைகள், சரும நோய்கள் மூட்டு வலி மற்றும் தசைகளில் இருக்கும் கொழுப்புக் கட்டிகளைக் கரைத்து வெளியேற்றவும் இந்த கொடிவேலி தைலத்தைப் பயன்படுத்தலாம்.
சருமத்தில் அங்கங்கே கொழுப்புக் கட்டிகள் இருக்கும். இதை லிப்போமா என்று அழைக்கிறோம். இந்த கட்டிகளில் வலி இருக்காது. ஆனால் கரையாமல் இருக்கும். இந்த கொழுப்பு கட்டியை கரைக்கவும் மூட்டு வலி உள்ளிட்டவையும் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பிரச்சினைகளையும் சரிசெய்ய சித்திர மூலம் என்று அழைக்கப்படுகிற கொடிவேலி மூலிகை பயன்படுகிறது.
முக்கிய பயன்கள்:
  • கொழுப்பு கட்டிகள் (Lipoma): உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் மற்றும் சிறிய வீக்கங்களைக் கரைக்க இது தோலில் தடவி மசாஜ் செய்யப்படுகிறது. எவ்வளவு மோசமான கொழுப்பு கட்டிகளாக இருந்தாலும் அதை ஒரே வாரத்தில் சரிசெய்யும் தன்மை இந்த சித்திர மூலத்துக்கு உண்டு.
    சித்திர மூல ஆயிலை கொழுப்புக் கட்டி உள்ள இடத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்து வர கொழுப்புக் கட்டிகள் கரைந்து மறைய ஆரம்பிக்கும்.

  • மூட்டு வலி மற்றும் வீக்கம்: வாத வலிகள், மூட்டு வலி மற்றும் தசைப் பிடிப்பு உள்ள இடங்களில் இந்த எண்ணெயைத் தடவி வர வலி குறையும்.
  • தோல் புண்கள்: ஆறாத நாள்பட்ட புண்கள் மற்றும் காயம் உள்ள இடங்களில் வெளிப்பூச்சாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • கால்களில் ஏற்படும் ஆணியை சரிசெய்யும்.
  • அடிப்படையில் உடல் உஷ்ணத்தைப் போக்கி உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.
  • சருமத்தில் ஏற்படும் எல்லா வகையான சரும நோய்களையும் சரிசெய்ய உதவி செய்யும்.
  • ஜவ்வு விலகல் மற்றும் மூட்டு வலிகளுக்கு இந்த கொடி வேலி தைலம் மிகச்சிறந்த தீர்வைக் கொடுக்கும்.
கவனத்திற்கு:
  • இது முற்றிலும் வெளி பயன்பாட்டிற்காக மட்டுமே (Topical use). மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதைக் குடிக்கவோ அல்லது உட்கொள்ளவோ கூடாது.
  • கொடிவேலி மூலிகை மிகவும் வீரியமானது என்பதால், உணர்திறன் வாய்ந்த தோல் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தும் முன் ஒவ்வாமை பரிசோதனை (Patch test) செய்து கொள்வது நல்லது. கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

Indications

Veekam (glandular swellings), Puttrunoi Kattigal (cancerous tumours)

Add to cart

மயனத் தைலம் – Mayana Thailam (30 ml)

Original price was: ₹220.00.Current price is: ₹215.00.
மயன தைலம் என்பது ஒரு சித்த மருத்துவ எண்ணெய் ஆகும். இது மூட்டு வலி கோளாறுகள் முக்கியமாக கீல்வாதம் போன்றவற்றில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தசைகள், தலை மற்றும் முட்டு வலி நரம்புகளை வலுப்படுத்துதல் மற்றும் நரம்பியல் பிரச்சனைகளை குணப்படுத்த பெரிதும் பயன்படுகிறது.
மயன தைலம் குறி வாதம் நீங்க
சிலருக்கு ஆண்குறி விரைந்து விம்மும் போது குறியில் வலி ஏற்படும். இன்னும் சிலருக்கு விறைப்பு நிலையில் வளைந்து காணப்படும். வேறு சிலருக்கு விறைப்பு என்பதே இல்லாமல் தாம்பத்தியத்திற்கு தகுதியற்றவர்களாக இருப்பார்கள்.

சித்த மருத்துவ முறையில் தயாராகும் சாஸ்திரிய மயன தைலம் மேற்காணும் குறைகளுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
இத்தைலத்தை லிங்கத்தின் மீது சிறு அளவில் தேய்த்து வர ஆண்குறியில் உள்ள நரம்பு துவளல் குறி வாதம் குறி வளைவு ஆகியவை நீங்கும்.
மயன தைலம் முழு மருத்துவ பயன்கள்
நரித்தலை வாதம்
அண்ட வாதம் (விந்தணு வீக்கம்)
பாரிச வாதம் வலி(பக்க வாதம்)
சன்னி வாதம்
வலி (நரம்பியல் வலி)
கீல் வாயு (மூட்டு வலி)
எலும்பு, தசை நரம்புகளில் ஏற்படும் வாயு (வாத நோய்)
சன்னி பாதம்
குழந்தைகளின் இசிவு (குழந்தைகளின் டெட்டனஸ் வலிப்பு)
வீக்கங்கள் (வீக்கம்)
ரத்தம் வழியும் வெட்டு காயம் (ரத்தம் வழியும் காயங்கள் வெட்டுகள்)
விதை வீக்கம்
ஆண்குறித்தளர்ச்சி
பெண்குறி தளர்ச்சி
கை கால் சோர்வு
நரம்பு தளர்ச்சி
பக்கவாதம் வலி
முட்டுவலி
எலும்பு ஆரோக்கியம்
நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகளுக்கு சிறந்தது.
Add to cart

கிச்சிலிக் கிழங்கு பவுடர் – Kichali Kizhangu Powder

Price range: ₹90.00 through ₹340.00

கிச்சிலி கிழங்கு, வெள்ளை மஞ்சள் அல்லது பூலாங்கிழங்கு என அழைக்கப்படும் இந்தக் கிழங்கு பல மருத்துவ பயன்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல் போன்றவற்றை குணமாக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும், சுவாச மண்டலத்தை பலப்படுத்தவும் உதவுகிறது. 

கிச்சிலி கிழங்கு பொடியின் மருத்துவ பயன்கள்:
  • வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல்:

    கிச்சிலி கிழங்கு தூள் தேனில் கலந்து சாப்பிடலாம். அல்லது கொதிக்க வைத்த நீரில் கிச்சிலி கிழங்கு, மஞ்சள் சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.

  • ஜீரண சக்தி:

    ஜீரண சக்தியை அதிகரிக்க கிச்சிலி கிழங்கு உதவுகிறது.

  • சுவாச மண்டலம்:

    ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள கிச்சிலி கிழங்கு, சுவாச மண்டலத்தை பலப்படுத்துகிறது.

  • வாதவலி:

    கிச்சிலி கிழங்கு பொடியை நீரில் கலந்து பற்றுப்போட்டால் வாதவலிகள் குறையும்.

  • சருமம்:

    காயங்கள் மற்றும் சரும பிரச்சினைகளுக்கு தீர்வாக கிச்சிலி கிழங்கு பயன்படுகிறது.

  • உடற் நாற்றம்:

    கிச்சிலி கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம் மற்றும் வியர்வை நாற்றம் குறையும்.

  • புற்றுநோய்:

    சில ஆய்வுகள் கிச்சிலி கிழங்கில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் இருப்பதாக கூறுகின்றன.

  • ஆஸ்துமா:

    ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு கிச்சிலி கிழங்கு தீர்வாக அமைகிறது.

  • சளி, மலச்சிக்கல், வாயு தொந்தரவு:

    இந்த கிழங்கு சளி, மலச்சிக்கல், வாயு தொந்தரவு போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது.

    கிச்சிலி கிழங்கை பயன்படுத்துவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.

     

இந்த கிச்சிலி கிழங்கு பொடியை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

கிச்சிலிக் கிழங்கு – Kichili kilangu

Price range: ₹70.00 through ₹620.00

பூலாங்கிழங்கு: கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.

வடமாநிலங்களில் இதை ஊறுகாய் போட பயன்படுத்துவார்கள். ஒரு சில வெளிநாடுகளில் மசாலா பொருளாக பயன்படுத்துகிறார்கள்.

தோற்றத்தில் பார்ப்பதற்கு இஞ்சி போலவே ஆரஞ்சு நிறத்தில் இந்த கிழங்கு காணப்படும். இதன் வாசனை மாம்பழம் போலவே இருக்கும். சுவை கசப்புத் தன்மையுடன் இருக்கும்.

முன்பெல்லாம், குழந்தைகளை குளிக்க வைக்க இந்த கிச்சிலி கிழங்கை தான் பயன்படுத்தி உள்ளனர். இப்போதும் கூட நாட்டு மருந்து கடைகளில் இந்த கிழங்கு கிடைக்கிறது.

இதிலுள்ள ‘குர்குமின்’ என்ற பொருளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அடங்கியிருப்பதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துகிறது. அத்துடன், புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கவும் இந்த கிச்சிலி கிழங்கு பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, பெண்களை தாக்கக்கூடிய மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவற்றை நெருங்க விடாமல் காக்கிறது.

இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. மிகச்சிறந்த கிருமி நாசினியாக கிச்சிலி கிழங்குகள் பயன்படுகின்றன.

இதைக்கொண்டு டீ தயாரித்து குடிக்கலாம், சூப் செய்தும் குடிக்கலாம். இவ்வாறு செய்வதனால் மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படும் அத்தனை கோளாறுகளும் நீங்குகிறது.

இந்த கிழங்கை காயவைத்து, இடித்து தூள் செய்து, சலித்து எடுத்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

நுரையீரலில் ஏற்படும் கோளாறுகள், ஆஸ்துமா, சளி, இருமல், போன்றவற்றுக்கும், அஜீரணம், மலச்சிக்கல், வாயு தொந்தரவு போன்ற அத்தனை பிரச்சனைக்கும் இந்த கிச்சிலி கிழங்கு பொடி அருமருந்தாகிறது.

அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் கூட தாராளமாக இந்த பொடியை பயன்படுத்தலாம்.

இந்த தூளிலிருந்து சிறிது எடுத்து தேனில் கரைத்து சாப்பிட்டு வர இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல் ஆகியவவை காணாமல் போகும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கிச்சிலி கிழங்கையும், சிறிது மஞ்சளையும் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால் இருமல், சளி, காய்ச்சல் எதுவாக இருந்தாலும் ஓடிவிடும்.

இந்த பொடியில் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து, காயங்கள், வலிகள், வீக்கங்கள், சரும அலர்ஜி, புண்கள் இருக்கும் இடத்தில் தடவினால், அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

அதுமட்டுமல்லாமல் தோல் பிரச்சனை, முகப்பரு, கரும்புள்ளிகளுக்கு தரப்படும் சிகிச்சைகளிலும் இந்த கிழங்கு பயன்படுகிறது. குறிப்பாக, இந்த கிழங்கின் வேர்ப்பகுதிகள் தான் மருந்தில் சேர்க்கப்படுகின்றன.

கிச்சிலி கிழங்கை பயன்படுத்துவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.

 

இந்த கிச்சிலி கிழங்கை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.

Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

காயத்திருமேனி தைலம் – Kayathirumeni Thailam

Original price was: ₹130.00.Current price is: ₹120.00.

It can be used as a poultice for swelling, pain, blood clots, verma pain, internal injuries, shortness of breath.

Add to cart

கற்பூர தைலம் – Karpoora Thailam

Original price was: ₹100.00.Current price is: ₹90.00.

Karpoora Thailam is an Ayurvedic herbal oil, prepared in sesame oil Kapoora base. It is used in muscular pain, rheumatic complaints, muscle cramps etc. This oil is based on Kerala Ayurveda principles. Swellings and removes pain and inflammation in joints.

ஒற்றை தலைவலி மற்றும் பீனிச தலைவலி தீரும்.

Add to cart

மாவிலங்க பட்டை – Maavilangu Pattai – 250g

Original price was: ₹120.00.Current price is: ₹100.00.
முக்கிய மருத்துவ பயன்கள்:
  • சிறுநீரகக் கற்கள் மற்றும் கல்லடைப்பு: மாவிலங்கப் பட்டையைக் கஷாயம் வைத்துக் குடித்து வர, சிறுநீரகக் கற்கள் மற்றும் கல்லடைப்புப் பிரச்சினைகள் குணமாகும்.
  • உடல் வீக்கம் மற்றும் வலி: கை, கால் வீக்கங்கள் மற்றும் உடல் வலிகளைக் குறைக்க இதன் இலை மற்றும் பட்டை சார்ந்த மருத்துவ முறைகள் உதவுகின்றன.
  • செரிமானம் மற்றும் வாயுத் தொல்லை: பட்டை கஷாயம் அஜீரணம் மற்றும் வாயுத் தொல்லையைப் போக்கப் பயன்படுகிறது
  • கட்டிகள் மற்றும் புண்கள்: பட்டையைச் சிதைத்து வீக்கம் அல்லது கட்டிகள் உள்ள இடங்களில் பற்று போல வைக்கக் கட்டிகள் கரையும். நாள்பட்ட புண்களுக்கும் இது நல்லது
  • மாதவிடாய் கோளாறுகள்: பட்டைப் பொடி அல்லது பட்டை விழுது (நெல்லிக்காய் அளவு) உட்கொள்வது தாமதமான மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை கோளாறுகளைச் சரிசெய்யும்.
  • நரம்பு மற்றும் முகவாதம்: சில மூலிகைக் கஷாயங்களுடன் மாவிலங்கப் பட்டையைச் சேர்த்துப் பயன்படுத்தி முகவாதம் போன்ற நரம்புச் சிக்கல்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது

பட்டைக் குடிநீர் கல்லடைப்பைப் போக்கும். பட்டையைச் சிதைத்து உட்புறமாக வைத்துக் கட்ட, கட்டிகள் கரையும். இதன் பட்டையை வட்டமாக வெட்டி அரையாப்புக் கட்டியில் வைத்து அதன் மீது ஓர் ஈயத்தகட்டைப் பொருத்திக் கட்ட, கட்டி அமுங்கிவிடும். பட்டை 170 கிராம், மூக்கிரட்டை 65 கிராம் இவற்றை 1400 மி.லி நீரிலிட்டுக் குடிநீரிட்டு அதில் 17-35 கி. தர நாட்பட்ட புண், விரை வீக்கம் நீங்கும்.

மாவிலங்கப்பட்டை, மிளகு, வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொட்டைப் பாக்களவு காலை உணவிற்கு முன் சாப்பிட்டு வரச் சூதக வாயு காரணமாகப் பெண்களுக்கு மாதவிடாய் தடைப்பட்டால் சீராகும். சீரகம் சுக்குடன் இலையைக் குடிநீரிட்டுக் குடிக்க காய்ச்சல், செரியாமை, வலி நீங்கும். இலையை அரைத்து உள்ளங்காலில் பற்றிட வீக்கம், எரிச்சல் நீங்கும். மாவிலங்க இலை முடக்குவாதத்தையும் போக்கும்.

• Diabetic people face the shoulder friction problem. If they take Maavilanga Pattai powder, it will heal the problem.
• Many people have kidney-related problems. The Maavilanga Pattai powder will work effectively for kidney-related problems. If they take Maavilanga Pattai powder, it will help to pass stones with urine. It will also help to heal urinary disorders caused by inflammation of the bladder, urethral obstruction, etc.
• If we take bath with Maavilanga Pattai powdered water, it will help to get relief from body pain and inflammation .
• Many women face menstrual problems. If they take Maavilanga Pattai powder, it will help to correct menstrual and uterus-related problems
• The Maavilanga Pattai powder helps with the indigestion problem. If they take Maavilanga Pattai powder with hot water, it would allow for digestion and avoids constipation problem too.
Ingredients:
● 1 teaspoon of Maavilanga Pattai powder
● 1 glass of  water
● Honey or jaggery (optional).
 
Methods:
● Add 1 teaspoon of Maavilanga Pattai powder to the water.
● Mix well until the powder is fully dissolved.
● Optionally, add a teaspoon of honey or jaggery for sweetness.
● Drink this mixture on an empty stomach in the morning for best results.
 
தேவையான பொருட்கள்:
● மாவிலங்கப் பட்டை பொடி 1 தேக்கரண்டி
● 1 கிளாஸ் தண்ணீர்
● தேன் அல்லது வெல்லம் (விரும்பினால்).
 
முறை:
● ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் மாவிலங்கப் பட்டை பொடியை சேர்க்கவும்.
● தேவைப்பட்டால், ஒரு தேக்கரண்டி தேன் அல்லது வெல்லம் சேர்க்கவும்.
● இதை தினமும் ஒரு முறை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

Add to cart

அதிமதுரம் – Athimathuram Raw

Price range: ₹45.00 through ₹210.00

அதிமதுரம்

குரலில் சிறிதும் பிசிறு இல்லாமல், மதுரமான ஒலியை வழங்க உதவும் அதிமதுரம், பித்த, கப நோய்களுக்கான கசப்பில்லா இன்சுவை மருந்து!

இலேசான மஞ்சள் நிறத்தில், கடுமையான வாசனையுடன் உள்ள இதில் கால்சியம், கிளைசிரைசின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. அதிமதுரம் சக்திவாய்ந்த மூலிகைகளில் ஒன்றாகும், இது அழற்சியைக் குறைத்தல், முகப்பருக்களை எதிர்த்துப் போராடுதல், சருமத்தை பிரகாசமாக்குதல் மற்றும் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுதல் உள்ளிட்ட நன்மைகளை சருமத்திற்கு வழங்குகிறது.

ஹைப்பர்பிக்மென்டேஷனுக்குச் சிகிச்சையளிக்கிறது

இது ஒரு தோல் பிரச்சினையாகும், இதன் காரணமாகத் தோலில் கருமையான திட்டுகள் அல்லது புள்ளிகள் உருவாகின்றன, இது தோலின் நிறம் மற்றும் அமைப்பைச் சீரற்றதாக மாற்றும். அதிமதுர சாறு நிறமிகளை மாற்றியமைக்கும் அதிசயத்தைச் செய்து, சூரிய ஒளி அல்லது ஹார்மோன் மாற்றங்களால் உருவாகும் மெலஸ்மாவையும் குறைக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் அதிமதுரப் பொடியைப் பூசுவதால், இயற்கையாகவே கரும்புள்ளிகள் மற்றும் திட்டுகள் மறைந்து, உங்கள் சருமத்தைப் பிரகாசமாக்கும்.

சூரிய ஒளியின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது

சூரிய ஒளியில் தொடர்ந்து இருப்பதால் சருமம் கருப்பதோடு, வயது முதிர்ந்த தோற்றமும் ஏற்படும். அதிமதுரத்தில் கிளாப்ரிடின் என்ற பைட்டோ கெமிக்கல் கலவை உள்ளது, இது நிறமாற்றத்தைத் தவிர்க்க உதவுகிறது மற்றும் சருமத்தின் நிறத்தையும் அமைப்பையும் மேம்படுத்துகிறது.

தழும்புகளை குணப்படுத்துகிறது

அதிமதுர சாற்றில் உள்ள சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் குணப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்துகிறது. இது வீக்கம் மற்றும் சிவத்தல் ஆகியவற்றைக் குறைக்கிறது மற்றும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் சருமம் விரைவாக குணமடைகிறது.

அழற்சியைக் குறைக்கிறது

அதிமதுரத்தின் இயற்கையான சரும தணிப்பு விளைவு அழற்சியைக் குறைக்க உதவுகிறது. கிளைசிரைசின் நிறைந்துள்ள அதிமதுரம் சிவத்தல், எரிச்சல் மற்றும் வீக்கம் ஆகியவற்றைக் குறைக்கும்.

கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

அதிமதுரம் மூலிகைப் பொடியைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் உச்சந்தலையில் இரத்த ஓட்டம் மேம்படுகிறது மற்றும் மயிர்க்கால்களுக்கு முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் வேர்களை வளர்ச்சியடைய செய்கிறது. இது கூந்தல் உதிர்வதைத் தடுக்கவும், முடியை நிலைநிறுத்தவும் உதவுகிறது, கூந்தலைப் பளபளப்பாகவும் வலுவானதாகவும் மாற்றுகிறது.

 

வீட்டு மருந்தாக: அதிமதுரம், அக்கரகாரம், சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கம் ஆகியவற்றைப் பொடித்து நாட்டுச் சர்க்கரை, தேன்  கலந்து செய்யப்படும் ‘அதிமதுர ரசாயனம்’ பருவமழைக் காலத்துக்கே உரித்தான மருந்து. கீச்…கீச்… எனக் குரலுடைந்து பேசுபவர்களுக்கும் கம்பீரக் குரலை விரைவில் வழங்கும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும்.

 

 

சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம். சைனஸ் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம்.

இந்த மூலிகையை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page