Showing all 4 resultsSorted by popularity
மருதம் பட்டை – Marudham Pattai
₹30.00 – ₹145.00Price range: ₹30.00 through ₹145.00மருதம் பட்டை சிறிது துவர்ப்பு சுவை உடையது. வைட்டமின் சி மருதம்பட்டையில் மிகுதியாக அடங்கி உள்ளது. மருதம் பட்டையை அரைத்துப் பொடியாகவும், மருதம் பட்டையை தண்ணீரில் ஊறவைத்து குடிநீராகவும் பயன்படுத்தலாம்.
மருதம் பட்டை உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தருகிறது. குடல் தொடர்பான எல்லா நோய்களுக்கும் இது சிறந்த மருந்து என்று சொல்லலாம். மருதம் பட்டை குடிநீர் பயன்படுத்தினால் உடலில் ரத்தக்கொதிப்பு, இதய படபடப்பு, தூக்கமின்மை, நீரிழிவு பிரச்னை, கல்லீரல் பிரச்னை போன்றவைகள் கட்டுக்குள் வரும்.
ஆன்டி ஆக்சிடென்ட் என்ற புத்துணர்வு தரும் சக்தி மருதம்பட்டையில் அதிகமாக இருக்கிறது. கல்லீரல், நுரையீரல், மார்பு, வாயில் ஏற்படும் புற்றுநோய்கள் போன்றவைகளை வராமல் தடுக்கும் திறன் மருதம் பட்டைக்கு உண்டு.
மருதம் பட்டை – 200 கிராம், சீரகம் – 100 கிராம், சோம்பு – 100 கிராம், மஞ்சள் – 100 கிராம் அனைத்தையும் ஒன்றாக எடுத்து, நன்றாகப் பொடித்து தூள் செய்து வைத்திருந்து, தினமும் கொதிக்க வைத்த தண்ணீரில் 5 கிராம் அளவு தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குணமடையும்.
தூக்கமின்மை, மன உளைச்சல், படபடப்பு நீங்க மருதம் பட்டை தூளுடன் சிறிது கசகசா வறுத்து அரைத்து பாலில் கலந்து அருந்தினால் மாற்றத்தை உணர முடியும்.
ஹார்மோன் குறைபாடு, அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் போன்ற பிரச்னைகள் கொண்ட பெண்கள் மருதம் பட்டை கஷாயத்தைப் பயன்படுத்தலாம்.
மருதம் பட்டை – 100 கிராம் அளவிலும், சீரகம் – 25 கிராம் அளவிலும் சேர்த்து கொதிக்கவைத்து ஆறிய நிலையில் குடிநீராக தினமும் குடித்து வந்தால் இதயம் வலுவாகும். மன அழுத்தம் நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும். இதன்மூலம் ரத்த குழாய்களில் கொழுப்பு அதிகமாக படிவதும் தடுக்கப்படும்.
நன்கு உலர்ந்த மருதம்பட்டையை மாவாக அரைத்து, அதை 5 கிராம் அளவு எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல், ஆஸ்துமா தொந்தரவுகள் குறையும்.
அரை லிட்டர் நல்லெண்ணெய் அடுப்பில் கொதிக்க விட்டு அதில் 100 கிராம் மருதம்பட்டையை போட்டு கொதிக்கவிடவும். 30 நிமிடம் கொதித்த பிறகு ஆற விட்டு அந்த எண்ணெய்யை முகவாதம், பக்கவாதம் ஏற்பட்ட இடத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். இந்த எண்ணெய்யை மூட்டுவலி, இடுப்புவலி உள்ளவர்களும் பயன்படுத்தலாம்.
இந்த மருதம்பட்டையை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
Marutham bark helps to relax blood vessels and reduce blood flow resistance.
This reduces blood pressure.
Stimulates heart functionகடுகு ரோகிணி – Kadugu Rogini
₹80.00 – ₹270.00Price range: ₹80.00 through ₹270.00கடுகு ரோகிணி என்பது ஒரு மூலிகை, இது ஆயுர்வேத மருத்துவத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இது பல மருத்துவ பயன்களைக் கொண்டுள்ளது, குறிப்பாக மன அழுத்தம், தூக்கமின்மை, தசை பலவீனம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றுக்கு. கல்லீரலை எந்த சேதாரமும் இல்லாமல் பாதுகாக்கும் ஆயுர்வேத மூலிகை கடுகு ரோகிணி !
- மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை:கடுகு ரோகிணி மன அழுத்தத்தை குறைக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
- தசை பலவீனம்:இது தசை பலவீனத்தை குறைத்து, தசை வலிமை மற்றும் ஆற்றலை மேம்படுத்துகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தி:கடுகு ரோகிணி நோய் எதிர்ப்பு சக்தியை வலுவடையச் செய்து, உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
- சர்க்கரை நோய்:இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- செரிமானம்உடல் பலவீனம் போக்கி செரிமானத்தை தூண்டுகிறது. செரிமானத்தை தூண்டி உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்கிறது. எடை இழப்புக்கும் இதை முக்கிய மூலிகையாக பயன்படுத்தலாம்.
- கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துதல்:கடுகு ரோகிணி கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
- உடலின் வெப்பநிலையை சீராக்குதல்:இது உடலின் வெப்பநிலையை சீராக்கி, தசைப்பிடிப்பு மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகளைத் தடுக்கிறது.
- உயர் இரத்த அழுத்தம்:கடுகு ரோகிணி உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.கபம் மற்றும் பித்தம் சமநிலைப்படுத்தும். கல்லீரலை பாதிக்கும் மோசமான கிருமிகளை வெளியேற்றி அதை சுத்தப்படுத்தும்.இது ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடுகு ரோகிணி எவ்வாறு பயன்படுத்தலாம்?
- காபி:ஒரு ஸ்பூன் கடுகு ரோகிணி பொடியை காபி அல்லது பாலில் கலந்து குடிக்கலாம்.
- கெட்டி:கடுகு ரோகிணி கெட்டி செய்து, அதை மெதுவாக விழுங்கலாம்.
- வெங்காயம்:வெங்காயத்துடன் கடுகு ரோகிணி கலந்து சாப்பிடலாம்.
- பல்:கடுகு ரோகிணியை பயன்படுத்தி பல் துலக்கலாம்.
- சமையல்:கடுகு ரோகிணியை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம்.
- கடுகு ரோகிணி உட்கொள்ளும் போது, உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
- கடுகு ரோகிணி உட்கொள்ளும் போது சில பக்கவிளைவுகள் ஏற்படலாம், எனவே கவனமாக இருக்க வேண்டும்.
- கடுகு ரோகிணி உட்கொள்ளும் போது, அதிக அளவு உட்கொள்ளக்கூடாது.
எலும்பு ஒட்டி இலை – Elumbu Otti leaf
எலும்பொட்டி இலையின் அற்புத மருத்துவ பலன்கள்…
எலும்பொட்டி செடியை அனைவருமே வீட்டில் வளர்க்கலாம். சுக்குநூறாக உடைந்த எலும்பை கூட சேர்க்கும் ஆற்றல் நிறைந்தது இந்த எலும்பொட்டி இலைகள். கை, கால், இடுப்பு எலும்புகளில் வீக்கம், வலி, மூட்டுத்தேய்மானத்தால் ஏற்படும் வலி, குதிங்கால் வலி போன்றவற்றுக்கு மிகவும் நல்லது
இந்த எலும்பொட்டி இலைகளை எடுத்து அரைத்து பாலில் கலந்து குடிக்கலாம். அல்லது இந்த இலைகளை அரைத்து ஒரு சிறிய உருண்டைகளாக உருட்டி தினமும் சாப்பிட்டு வர எலும்பினால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்,
மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகித்த மூலிகை தான் அருகாம்பச்சை என்றும், சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி. இதன் இலைகள் முருங்கை இலைகள் போல, சின்னதாக தண்டுகளில் இணைந்து காணப்படும். இந்த செடியில் மஞ்சள் நிறத்தில் பூவும் பூக்கும். இதன் இலைகள், வேர்கள், காய்கள் அனைத்தும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது.
மருத்துவ பயன்கள்:
இந்த இலைக்கு எலும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றலும் உண்டு. முதுகு தண்டு பாதிப்பை குணமாக்கும்முதுகுத்தண்டுவட வலி மற்றும் முதுகு வலி பாதிப்புகளையும் இது குணமாக்கும். சிறுநீர் கழிக்கும் போது வரும் எரிச்சலைப்போக்கும். சிறுநீர்த்தாரை அடைப்பை சரியாக்கும். கருப்பை பாதிப்புகளையும் அகற்றும். இந்த இலைகளுக்கு மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மையும் உண்டு. மன அழுத்தத்தினால் உருவாகும் நரம்பு பாதிப்புகளை குணப்படுத்தி ரத்தத்தை தூய்மைப்படுத்தி வயிற்றுப் புழுக்களை அழிக்கும்.
பெண்களுக்கு மாதவிலக்கில் ஏற்படும் இரத்தப் போக்கு பாதிப்புகளை சரி செய்யும். உடல் சூட்டையும் போக்கும். மேலும் அதனால் ஏற்படும் வாத உடல் வலி, வயிற்று வலியையும் போக்கும். சுளுக்கைக், கூட இந்த இலை.போக வைத்துவிடும். மூலவியாதி, உடல் அணுக்களை பாதிக்கும் புற்றுவியாதி ஆகியவற்றையும் சரி செய்யும். சுவாச பாதிப்பை போக்கும்.
இந்த இலைகளை பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, கீரையைப் போல் கடைந்து உணவில் சேர்த்து சாப்பிடலாம். இதனால் மூட்டு வலி, சிறுநீர்ப்பை அடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை ஓடிவிடும்.
அமுக்கரா (அசுவகந்தி) பொடி – Amukkara Powder
Amukkura improves sexual health and sperm count for men.
Reduces internal heat and boosts weight.