Piles Care

Showing 1–12 of 13 resultsSorted by popularity

மூக்கிரட்டை பவுடர் – Mookkirattai Powder

Original price was: ₹80.00.Current price is: ₹75.00.
மூக்கிரட்டை எனும் மூலிகை இதயநோய், சைனஸ், ஆஸ்துமா, சளித் தொல்லை, ரத்த சோகையால் ஏற்படும் உடல்வீக்கம், தொப்பை, வாதக் கோளாறு, மஞ்சள்காமாலை, மலச்சிக்கல், மூலக்கோளாறு உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாகிறது.
பயன்படுத்துவது எப்படி?
மூக்கிரட்டை வேர் பொடியை , விளக்கெண்ணெய் விட்டு காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மலம் இளகும். உடலில் தங்கியிருக்கும் நச்சு நீர், கிருமிகள் வெளியேறி சரும நோய்கள், வாத நோய்கள் விலகும். எடை குறைந்து அழகு மிளிரும்.
மூக்கிரட்டை கீரை பொடி மற்றும் அதன் வேர் பொடி நீரில் கொதிக்க வைத்து ஆற்றி குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுகள், கழிவுகள் எல்லாம் நீங்கி ரத்தம் சுத்தமாகும்.
மூக்கிரட்டை கீரை செடியின் வேர் பொடியை இளம் சூடான நீரில் கலந்து, பருகி வந்தால் கண்கள் சம்பந்தமான அத்தனை குறைகளையும் நீக்கும்.
மூக்கிரட்டை இலை பொடி, பொன்னாங்கண்ணி இலை பொடி மற்றும் கீழாநெல்லி இலை பொடி சம அளவு எடுத்து நன்றாக கலந்து, மோரில் கலந்து குடிக்கலாம். தொடர்ந்து இதை குடித்துவந்தால் மங்கலான பார்வை, வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்.
மூக்கிரட்டைக் கீரை பொடியை சிறிது அளவு எடுத்து அரிசி மாவுடன் கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து அடைபோல தட்டி சாப்பிடலாம். காலை, மாலை தொடர்ந்து ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூல நோய்களும், குணமாகும்.
உணவால் ஏற்படும் அலர்ஜிக்கு, மூக்கிரட்டை வேர் பொடியை , ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி, சிறிது விளக்கெண்ணெய் கலந்து குடிக்கலாம். தினமும் இரண்டு வேளை குடித்தால் அலர்ஜி விலகி சருமம் புதுப்பொலிவு பெறும்.
மூக்கிரட்டை வேர் பொடியுடன் சிறிது பெருஞ்சீரகம் பொடி சேர்த்து, நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அதை தினமும் அருந்தினால், சிறுநீர் அடைப்பு விலகுவதுடன் சிறுநீரகக்கற்கள் கரைந்து வெளியேறும்.
மூக்கிரட்டை இலை பொடி மற்றும் மூக்கிரட்டை வேர் பொடி எங்களிடம் கிடைக்கும்.
இந்த மூக்கிரட்டை பொடியை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – வழியாக டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
Add to cart

கடுக்காய் தோல் – Kadukkai Thol

Price range: ₹30.00 through ₹130.00

கடுக்காய் தோலின் பயன்கள் பல. கடுக்காய் தோல் மலச்சிக்கலை போக்கி, குடல் சக்தியை அதிகரிக்கும். மேலும், வயிற்றுப்புண், குடல் புண், வாய் துர்நாற்றம் போன்றவற்றுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. கடுக்காய் பொடி தூங்க செல்வதற்கு முன் வெந்நீரில் கலந்து குடித்தால் சர்வ நோய்களும் நீங்கும். 

கடுக்காய் தோலின் பிற பயன்கள்: 

  • சருமம்:
    அக்கி, படை, சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு கடுக்காய் நல்ல தீர்வாக அமைகிறது. ஹோமியோபதியில் இதை சிகிச்சைக்காக பயன்படுத்தலாம்.
  • சிறுநீர் கோளாறுகள்:
    கடுக்காய் சிறுநீர் குழாய்களில் ஏற்படும் புண், எரிச்சல், கல்லடைப்பு, நீரடைப்பு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
  • உடல் உஷ்ணம்:
    உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க கடுக்காய் உதவுகிறது.
  • சர்க்கரை நோய்:
    சர்க்கரை நோயாளிகளுக்கு கடுக்காய் நல்ல தீர்வாக அமைகிறது.
  • மூட்டு வலி:
    மூட்டு வலிக்கு கடுக்காய் சிறந்த மருந்தாக உள்ளது.
  • உடல் பலவீனம்:
    உடல் பலவீனத்தை போக்கி உடலை பலமாக்குகிறது.
  • ரத்தக் கோளாறுகள்:
    ரத்தக் கோளாறுகளை சரிசெய்ய கடுக்காய் உதவுகிறது.
  • வயிற்றுப் புண்:
    கடுக்காய் வயிற்றுப்புண், குடல் புண் போன்றவற்றுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.
  • பல் ஈறு வலி:
    பல் ஈறு வலிக்கும் போது, கடுக்காயை பயன்படுத்தலாம்.
  • இருமல்:
    இருமலுக்கு கடுக்காய் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
  • மலச்சிக்கல்:
    கடுக்காய் மலச்சிக்கலை போக்கி குடல் சக்தியை மேம்படுத்துகிறது.
  • சிறுநீரக கோளாறுகள்:
    கடுக்காய் சிறுநீரக கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.
  • உடல் பருமன்:
    கடுக்காய் உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது.
கடுக்காயை உட்கொள்வதற்கும், பயன்படுத்துவதற்கும், மருத்துவ நிபுணரின் ஆலோசனை பெறுவது நல்லது.
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

ஆவாரம் பட்டை – Aavaram Pattai

Original price was: ₹50.00.Current price is: ₹40.00.

ஆவாரம் பட்டை கஷாயம் சாப்பிட சருமத்திற்கு ஒளி தரும். நீரிழிவுத் தீரும். இதன் பூவைக் கூட்டுச் செய்துச் சாப்பிட மூத்திர சம்பந்தமான நோய்கள் குணமாகும். வெள்ளை வெட்டைத் தீரும். குளிர்ச்சியைத் தரும்.

மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து அதை தண்ணீரில் போட்டு காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.

சருமத்தில் வீக்கம் இருந்தால் பட்டை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கப்பட்டு சுத்தம் செய்து வந்தால் படிப்படியாக வீக்கம் குறைக்கும்.

ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.

ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்  கொள்ள உதவுகிறது. ஆவாரம் பட்டையை நீரில் இட்டுக் காய்ச்சிக் காலை தோறும் வாய் கொப்பளிக்கப் பயன்படுத்துவதால் வாய்ப்புண்கள் எவ்விதமானதாயினும் விரைவில் ஆறிவிடும்.

ஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.

இதன் கஷாயம் நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Add to cart

ஹிங்குவாச்சாடி மாத்திரை – Hinguvachaadi Gulika

Original price was: ₹30.00.Current price is: ₹20.00.
  • ஹிங்குவாச்சாடி குலிகா என்பது நாகார்ஜுனா ஆயுர்வேதக் குழுவின் ஆயுர்வேத மருந்து.
  • இது வாய்வு, பெருங்குடல் வலி, வயிற்று கட்டி, இரத்த சோகை சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
  • அஜீரணத்தை நீக்குகிறது.
  • உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்குகிறது.
  • நச்சுகள் குவிவதைத் தடுக்கிறது.
  • வயிற்றுப் பிடிப்பு, வாய்வு மற்றும் வாயுவை நீக்குகிறது.
  • உணவை உறிஞ்சுவதில் உதவுகிறது.
  • பசியின்மை மற்றும் அனைத்து வாத கோளாறுகளுக்கும் சிகிச்சையளிக்கிறது.
  • இது அமில வயிற்றுப் பிரச்சினைகள், வாய்வு மற்றும் இரைப்பை அழற்சிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

முத்து சிப்பி பற்பம் – Muthu chippi Parpam

Original price was: ₹32.00.Current price is: ₹30.00.
By this, the problems of pauthram, chronic dysentry and convulsions will be solved.

.

Add to cart

கடுக்காய் லேகியம் – Kadukai Legiyam

Original price was: ₹155.00.Current price is: ₹148.00.
Excellent remedy for constipation, hot gas, irritation of soles, hemorrhoids.
Add to cart

கருணை லேகியம் – Karunai Legiyam

Original price was: ₹240.00.Current price is: ₹230.00.

கருணை லேகியம் (Karunai Legiyam) மூலநோய் மற்றும் மலச்சிக்கல் போன்ற இரைப்பை குடல் தொடர்பான பிரச்சனைகளுக்குப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய சித்த மருந்து ஆகும்.

முக்கிய பயன்கள்
  • மூலநோய் தீர்வு: உள் மற்றும் வெளி மூலநோய் (Piles), ஆசனப் பகுதியில் ஏற்படும் முளைகள் மற்றும் ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  • மலச்சிக்கல் நீக்கி: மலத்தை மிருதுவாக்கி, மலச்சிக்கல் பிரச்சனையைச் சரிசெய்து எளிதாக மலம் கழிக்க உதவுகிறது.
  • எரிச்சல் குறைப்பு: ஆசன வாயில் ஏற்படும் வலி, எரிச்சல் மற்றும் வீக்கத்தைக் குறைப்பதில் சிறந்தது.
  • செரிமான மேம்பாடு: செரிமானத் திறனை அதிகரித்து, குடல் இயக்கத்தைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது.
  • வயிற்று வீக்கம் மற்றும் வலியை குறைக்கும். • உடலுக்கு சக்தி மற்றும் பலம் தரும் 🌿

 

உட்கொள்ளும் முறை
  • பொதுவாக உணவு சாப்பிட்ட பிறகு அல்லது மருத்துவரின் அறிவுரைப்படி, 1 முதல் 2 தேக்கரண்டி அளவு காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீர் அல்லது பாலுடன் உட்கொள்ளலாம்.

 

All types of Pliles complaints curation

Add to cart

மாசிக்காய் எண்ணை – Maasikkai Oil

Original price was: ₹275.00.Current price is: ₹250.00.

மாசிக்காய் எண்ணெய் மருத்துவ குணங்கள் நிறைந்தது, வாய்ப்புண், தொண்டைப்புண் மற்றும் குடல்புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. மேலும், நீரிழிவு நோயால் ஏற்பட்ட புண்களையும் ஆற்றும். மூல நோய், ரத்தப்போக்கு, வயிற்று கோளாறுகள் போன்றவற்றுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று இணையதளம் ஒன்று கூறுகிறது. 

மாசிக்காய் எண்ணெயின் முக்கிய பயன்கள்:
    • புண்களை ஆற்றும்:
      வாய்ப்புண், தொண்டைப்புண் மற்றும் குடல்புண்களை குணமாக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது.
    • ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும்:
      மூல நோய் மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் இரத்தப்போக்கை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • வயிற்று கோளாறுகள்:
    வயிற்றுப்போக்கு மற்றும் பிற வயிற்று பிரச்சனைகளை குணமாக்கும்.
  • துவர்ப்பு தன்மை:

    சிறந்த துவர்ப்புப் பொருளாகவும் செயல்படுகிறது. 

மாசிக்காய் எண்ணெயை பயன்படுத்துவது எப்படி?
  • வாய்ப்புண் மற்றும் தொண்டை வலிக்கு:

    மாசிக்காய் எண்ணெயை தேனுடன் கலந்து குடிக்கலாம் அல்லது துணியில் நனைத்து புண்கள் உள்ள இடத்தில் வைக்கலாம். 

  • உள்ளுக்குள்:

    மாசிக்காய் எண்ணெயை மருத்துவரின் ஆலோசனைப்படி, குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்ளலாம். 

எச்சரிக்கை: ஏதேனும் உடல்நல பிரச்சனைகளுக்கு பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது.
மாசிக்காய் எண்ணெயை – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

நில ஆவாரை பவுடர் – Nila Aavaarai Powder

Original price was: ₹35.00.Current price is: ₹30.00.

மூல வாயு, மலச்சிக்கல் மற்றும் ஆசன வாய் எரிச்சல் தீரும்.

Add to cart

நில ஆவாரை இலை – Nila Aavaarai ilai

Original price was: ₹35.00.Current price is: ₹30.00.
Relieves flatulence, constipation and anal irritation.
Add to cart

எலும்பு ஒட்டி இலை – Elumbu Otti leaf

Original price was: ₹30.00.Current price is: ₹25.00.

எலும்பொட்டி இலையின்  அற்புத மருத்துவ பலன்கள்…

எலும்பொட்டி செடியை அனைவருமே வீட்டில் வளர்க்கலாம். சுக்குநூறாக உடைந்த எலும்பை கூட சேர்க்கும் ஆற்றல் நிறைந்தது இந்த எலும்பொட்டி இலைகள். கை, கால், இடுப்பு எலும்புகளில் வீக்கம், வலி, மூட்டுத்தேய்மானத்தால் ஏற்படும் வலி, குதிங்கால் வலி போன்றவற்றுக்கு மிகவும் நல்லது

இந்த எலும்பொட்டி இலைகளை எடுத்து அரைத்து பாலில் கலந்து குடிக்கலாம். அல்லது இந்த இலைகளை அரைத்து ஒரு சிறிய உருண்டைகளாக உருட்டி தினமும் சாப்பிட்டு வர எலும்பினால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்,

மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகித்த மூலிகை தான் அருகாம்பச்சை என்றும், சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி. இதன் இலைகள் முருங்கை இலைகள் போல, சின்னதாக தண்டுகளில் இணைந்து காணப்படும். இந்த செடியில் மஞ்சள் நிறத்தில் பூவும் பூக்கும். இதன் இலைகள், வேர்கள், காய்கள் அனைத்தும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது.

மருத்துவ பயன்கள்:

இந்த இலைக்கு எலும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றலும் உண்டு. முதுகு தண்டு பாதிப்பை குணமாக்கும்முதுகுத்தண்டுவட வலி மற்றும் முதுகு வலி பாதிப்புகளையும் இது குணமாக்கும். சிறுநீர் கழிக்கும் போது வரும் எரிச்சலைப்போக்கும். சிறுநீர்த்தாரை அடைப்பை சரியாக்கும். கருப்பை பாதிப்புகளையும் அகற்றும். இந்த இலைகளுக்கு மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மையும் உண்டு. மன அழுத்தத்தினால் உருவாகும் நரம்பு பாதிப்புகளை குணப்படுத்தி ரத்தத்தை தூய்மைப்படுத்தி வயிற்றுப் புழுக்களை அழிக்கும்.

பெண்களுக்கு மாதவிலக்கில் ஏற்படும் இரத்தப் போக்கு பாதிப்புகளை சரி செய்யும். உடல் சூட்டையும் போக்கும். மேலும் அதனால் ஏற்படும் வாத உடல் வலி, வயிற்று வலியையும் போக்கும். சுளுக்கைக், கூட இந்த இலை.போக வைத்துவிடும். மூலவியாதி, உடல் அணுக்களை பாதிக்கும் புற்றுவியாதி ஆகியவற்றையும் சரி செய்யும். சுவாச பாதிப்பை போக்கும்.

இந்த இலைகளை பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, கீரையைப் போல் கடைந்து உணவில் சேர்த்து சாப்பிடலாம். இதனால் மூட்டு வலி, சிறுநீர்ப்பை அடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை ஓடிவிடும்.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

அத்தி பட்டை – Aththi pattai (Fig Bark)

Price range: ₹25.00 through ₹50.00

அத்தி மரத்தின் பட்டை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், அதிகப்படியான ரத்தப்போக்கு மற்றும் வெள்ளைப்படுதலைத் தடுக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் பாரம்பரிய மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகிறது.

  • சர்க்கரை நோய்: ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் இன்சுலின் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • பெண் நலன்: பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு (பெரும்பாடு) மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற தொல்லைகளைக் குறைக்கக் கஷாயம் செய்து குடிக்கலாம். மேக நோய், புண்களை குணமாகும். கர்ப்பப்பை கோளாறுகளை நீக்கும்.
  • ​சிறுநீர் கட்டுப்படுத்த: சிலருக்கு சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறும். சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு வரும் போதே சிறுநீர் வெளியேறிவிடும். இதைக்கட்டுக்குள் வைக்க அத்திமரப்பட்டை 20 கிராம் எடுத்து அம்மியில் வைத்து நசுக்க வேண்டும். இதை சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும். இதை இறக்கி வடிகட்டி இளஞ்சூடாக இருக்கும் போதே அரைடம்ளர் குடிக்க வேண்டும். இதை காலையிலும் மாலையிலும் என ஐந்து நாள்கள் தொடர்ந்து குடித்துவந்தால் சிறுநீர் கட்டுப்பாடு இயற்கையாகவே கட்டுப்படும்.

  • வயிற்றுப் பிரச்சனைகள்: வயிற்றுப் போக்கு மற்றும் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்ய உதவுகிறது.
  • புண்கள் மற்றும் தோல்: வாய் புண்கள், தோல் வீக்கம் மற்றும் பருக்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. புண்கள் ஆறுவது தாமதமாகிறது. புண்கள் தீவிரமாகிறது என்பவர்கள் அத்திப்பட்டையை 4 அல்லது 5 எடுத்து கொள்ளவும். புண்களின் தன்மைக்கேற்ப எடுத்து சிறிய மண்சட்டியில் சேர்த்து சிறிது நீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கவும். இதை வடிகட்டி இளஞ்சூடாக இருக்கும் போது புண்களின் மீது ஊற்றி கழுவி பிறகு மருந்து போடலாம்.
  • மூலம்: ரத்தமூலத்துக்கு அத்திமரப்பட்டை சிறந்த மருந்தாகும். ரத்தமூலம், ஆசனவாய்க்கடுப்பு, ரத்த பேதியும் நிற்கும்.

  • ​சீதபேதி, ரத்தபேதி: சிலருக்கு உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும் போது அல்லது வயிற்றுக்கோளாறுகளால் ரத்தபேதி சீதபேதி உண்டாகும். இவர்களுக்கு அத்திப்பட்டை நல்ல பலன் தரும்.

 

அத்திமரப்பட்டை மருத்துவகுணங்கள் மிக்கது. ஆனால் இதை கைவைத்தியமாக எடுத்துகொள்ளும் போது சித்த மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

 

இந்த அத்திமரப்பட்டை – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.

Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page