Oil

Showing all 4 resultsSorted by popularity

சிரட்டை தைலம் – Chirattai Thailem

Original price was: ₹75.00.Current price is: ₹70.00.

உபயோகிக்கும் முறை: தோல் நோய் தைலம்

1. தைலத்தை செம்பு / வெள்ளி பாத்திரத்தில் வைத்து பயன்படுத்த சிறப்பு.

2. பாதிக்கப்பட்ட இடத்தில் தினமும் மூன்று முறை / இரவில் / காலையில் ஒரு மணி நேரம் முன் (அல்லது அதிக மணி நேரம் வைத்திருப்பது மிகவும் நற்பலனைத் தரும்) தடவி வைத்து குளிக்கவும்.

3. குளிக்க மித வெந்நீர், உடலிற்கு ஸ்நான பவுடர், தலைக்கு ஹேர் வாஷ் பவுடர் பயன்படுத்த, மூலிகை சத்துகளை தோல் உள்வாங்கி, வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.

Usage: Skin disease thailam

1. Thailam stored in copper bowl / Silver Bowl has more added advantage.
2. Gently apply on affected parts, daily 3 times / night / morning one hour before bath (or keep maximum time for maximum benefits)
3. Then wash with luke warm wter, for body wash use snana powder & hair wash use hair wash powder. It gives bettr result for skin maintenance.

நாட்பட்ட தோல் நோய்கள், சொறி, படர் தாமரை மற்றும் மரு, காலாணி போன்றவை மறையும்.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

இலுப்பை எண்ணை – Iluppai ( Mahua) Oil

Price range: ₹35.00 through ₹270.00

இலுப்பை மரத்தின் விதைகளிலிருந்து இந்த எண்ணெயானது தயாரிக்கப்படுகிறது. இது நெய் போன்ற தன்மை, அடர்த்தியான மஞ்சள் நிறத்தைக் கொண்டது.

எண்ணெயின் பயன்கள்
  • மனித உடலின் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் தன்மை உடையது.
  • நஞ்சு பூச்சி கடி, கரப்பான், கடுமையான இடுப்பு வலி இவற்றிற்கு இந்த எண்ணையை தடவி வந்தால் எளிதில் குணமடையலாம்.
  • நரம்பு பலவீனத்தால் உண்டாகக்கூடிய நடுக்கம், வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணி.
  • இடுப்பு வலி, மூட்டு வலி, கை, கால்கள் வலி ஆகியவற்றிற்கு இந்த எண்ணையை, சிறிது மென்மையாக சூடேற்றி, அதை தடவி பின்னர் மிதமான வெந்நீரில் சுத்தம் செய்து, தூய்மைப்படுத்திக் கொண்டால் எளிதில் குணமடையும்.
  • ஆண்களுக்கு ஏற்படும் விரை வீக்கம் போன்ற கடுமையான பிரச்சனைகளுக்கு இந்த எண்ணெய் ஒரு அற்புதமான மருந்து. இந்த எண்ணையை சிறிது சூடுபடுத்தி நான்கைந்து முறை தடவி வந்தாலே இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம்.
  • சருமத்தை மிருதுவாக்கும், தோல் சுருக்கங்களை நீக்கும்.
  • வாரம் ஒரு முறை நன்றாக உடலில் தேய்த்து ஒரு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான சுடுநீரில் இதை கழுவி குளித்து வந்தால், சருமம் பளபளப்பாக அற்புதமாக இருக்கும்.
  • விஷப்பூச்சிகள் கடித்தால் அந்த விஷத்தை முறிக்கும் சக்தி வாய்ந்தது இந்த அற்புதமான எண்ணெய்.
  • விஷப் பூச்சிகளின் கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம் போன்றவற்றை சரி படுத்தும் தன்மையுடையது இந்த எண்ணெய்.
  • கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் உண்டாகும், வயிற்றுப்போக்கு போன்றவற்றை எளிதில் குணமாக்கும் தன்மை உடையது.
  • குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல் போன்றவற்றிற்கும் இந்த எண்ணெய் அருமையான மருந்து ஆகும்.
  • காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு சில துளிகளை இந்த எண்ணெயை சாப்பிடுவதன் மூலம் இந்த மாதிரியான பிரச்சனைகளை எளிதில் தீர்த்துக் கொள்ளலாம்.
  • கோடை காலத்தில் ஏற்படும் வெப்பத்தாலும், சிலருக்கு இரவு நேரங்களில் அதிக நேரம் விழித்திருப்பதாலும் உண்டாகக்கூடிய கண் எரிச்சல், கண் அயர்ச்சி, கண்வலி போன்ற பிரச்சனைகளுக்கு இது அருமையான மருந்து ஆகும். அதற்கு இலுப்பை எண்ணெயை அடிக்கடி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மேற்கண்ட பிரச்சினைகளை தவிர்த்து கொள்ளலாம்.
  • கண்பார்வையும் மிகத்தெளிவாக அமையும்.
  • வயிற்றில் செரிமான மண்டலத்தை சீர் அடையச் செய்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை உடையது இந்த எண்ணெய்.
  • சில துளிகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காச நோய் கிருமிகளையும் ஆஸ்துமா கிருமிகளையும் அழிக்கும் தன்மை வாய்ந்தது இந்த எண்ணெய்.

இந்த இலுப்பை எண்ணையை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.

India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

தீப எண்ணை – Deebam Oil

Price range: ₹55.00 through ₹250.00
தீப எண்ணெய் பல நன்மைகளை வழங்குகிறது, குறிப்பாக ஆன்மீக மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில். காரிய தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும், பேரும் புகழும் கிடைக்கும், மதிப்பும் மரியாதையும் கூடும், செல்வம் பெருகும், தேவியின் அருள் கிட்டும் என்று பல ஆன்மீக நம்பிக்கைகள் உள்ளன.

தீப எண்ணெய் பயன்படுத்தும் போது, சில எண்ணெய்கள் குறிப்பிட்ட பலன்களுடன் பயன்படுத்தப்படுகின்றன. 

உதாரணமாக: 

  • இலுப்பை எண்ணெய்: காரிய தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும்.
  • விளக்கெண்ணெய்: பேரும் புகழும் கிடைக்கும், மதிப்பும் மரியாதையும் கூடும்.
  • வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய்: செல்வம் பெருகும்.
  • நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய்: தேவியின் அருள் கிட்டும்.

கூட்டுக்கலப்பு எண்ணெய்களும் பயன்படுத்தப்படுகின்றன. நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய் போன்ற சுத்தமான ஐந்து எண்ணெய்களின் கூட்டுக்கலப்பை பயன்படுத்துவது ஒரு நல்ல சகுனமாகும். 

வீட்டில் தீபம் ஏற்றுவது ஒரு நல்ல சகுனமாகும், தினமும் தீபம் ஏற்றி கடவுளை வழிபடுவதால் வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி உருவாகும்.
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

வேப்ப எண்ணை – Neem Oil

Price range: ₹35.00 through ₹285.00

வேப்ப எண்ணெய் சிறந்த கிருமி நாசினியாகவும், தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது. இது முகப்பரு, தோல் அழற்சி, அரிப்பு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகளைக் குணப்படுத்துகிறது, சருமத்தை மென்மையாக்கி, காயங்களை விரைவாக ஆற்றுகிறது. மேலும், இது கொசு விரட்டியாகவும், பூச்சிக் கொல்லியாகவும், வறண்ட சருமப் பராமரிப்பிலும் சிறந்தது.

 

வேப்ப எண்ணெயின் முக்கிய பயன்கள்:
    • சருமப் பராமரிப்பு: வேப்ப எண்ணெய் முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் அரிக்கும் தோலழற்சி (Eczema) போன்ற தோல் தொற்றுகளை நீக்கி, சருமத்தை சுத்தமாகவும் பொலிவாகவும் மாற்றுகிறது.
    • தலைமுடி ஆரோக்கியம்: பொடுகுத் தொல்லை, பேன் மற்றும் வறண்ட உச்சந்தலை பிரச்சனைகளுக்குத் தீர்வு அளிக்கிறது. 
    • காயங்களை ஆற்றுதல்: நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் (Antimicrobial properties) உள்ளதால், உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் தோல் வெடிப்புகளை விரைவாகக் குணமாக்க உதவுகிறது.
    • கொசு மற்றும் பூச்சி விரட்டி: தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவுவதன் மூலம் கொசு மற்றும் பூச்சி கடிகளில் இருந்து பாதுகாப்பைப் பெறலாம்.
    • இயற்கை பூச்சிக்கொல்லி: விவசாயத்தில் தாவரங்களைப் பாதுகாக்கவும், வீட்டில் உள்ள பூச்சிகளை விரட்டவும் இது ஒரு சிறந்த இயற்கை பூச்சிக்கொல்லியாகப் பயன்படுகிறது.

குறிப்பு: வேப்ப எண்ணெய் மிகவும் வீரியமானது, எனவே சருமத்தில் பயன்படுத்தும் போது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்துவது நல்லது.

பூஜை/விளக்கு நோக்கத்திற்காகவும் மற்றும் மேற் பூச்சுக்காகவும் உபயோகபடுத்தப் படுகிறது.

இந்த வேப்ப எண்ணெயை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.

India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page