Mouth Odour

Showing all 5 resultsSorted by popularity

அகில் கட்டை – Akil Kattai

Price range: ₹25.00 through ₹120.00

அகில் கட்டை, அகில் மரத்தின் ஒரு பகுதியாகும், இது பல ஆரோக்கிய நன்மைகளுக்காகவும், பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது. இது ஆயுர்வேதம், திபெத்திய மற்றும் பாரம்பரிய கிழக்கு ஆசிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. 

அகில் கட்டையின் நன்மைகள்:
  • காய்ச்சலைத் தணிக்க:

    அகில் கட்டை கடுமையான காய்ச்சலின் போது அதன் தாக்கத்தை குறைக்க உதவுகிறது. 

  • வலி நிவாரணி:

    இது வலி நிவாரணி பண்புகளைக் கொண்டுள்ளது, இதனால் தொண்டை தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. 

  • சரும நோய்களுக்கு:

    அகில் கட்டை தூள் சரும நோய்களான படை, அரிப்பு, வறண்ட சருமம் போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம். 

  • வீக்கத்தை குறைக்க:

    அகில் உடலில் எந்தப் பகுதியில் வீக்கம் இருந்தாலும் அதை குறைக்க உதவுகிறது. 

  • வாந்திக்கு:

    வாந்தி ஏற்படும் போது அகில் கட்டை புகை பிடித்து வாந்தியை கட்டுப்படுத்தலாம். 

  • காயங்களுக்கு:

    உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தால், அகில் கட்டை புகைபிடித்து காயங்கள் விரைவில் குணமாகும். 

  • மன அமைதி:

    அகில் கட்டையின் வாசனை மனதை அமைதிப்படுத்துகிறது. 

  • சோர்வை போக்க:

    அகில் கட்டை உடல் சோர்வை போக்க உதவுகிறது. 

  • ஒற்றைத் தலைவலி, சிலவகை காய்ச்சல், பொதுவான வாத நோய்கள், படை மற்றும் சரும நோய்கள், வாந்தி போன்ற நோய்களை குணப்படுத்தவும் அகில் கட்டை பயன்படுகிறது

    . 

  • கல்லீரல் நோயை குணமாக்கும்:

    அகில் மரபுகை கல்லீரல் நோயை குணமாக்க உதவுகிறது. 

பயன்படுத்தும் முறைகள்:
  • புகை:
    அகில் கட்டையை எரித்து அதன் புகையை சுவாசிப்பதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம்.
  • தூள்:
    அகில் கட்டை தூள் சரும நோய்களுக்கு பயன்படுத்தலாம்.
  • எண்ணெய்:
    அகில் கட்டை எண்ணெயை தயாரித்து பயன்படுத்தலாம்.
  • மரம்:
    அகில் மரத்தை அலங்காரப் பொருளாகவும், வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.
  • தூள்:

    அகில் கட்டை தூளை வாசனைக்காகவும், சில மருந்துகளில் கலவையாகவும் பயன்படுத்தலாம். 

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

கடுக்காய் தோல் – Kadukkai Thol

Price range: ₹30.00 through ₹130.00

கடுக்காய் தோலின் பயன்கள் பல. கடுக்காய் தோல் மலச்சிக்கலை போக்கி, குடல் சக்தியை அதிகரிக்கும். மேலும், வயிற்றுப்புண், குடல் புண், வாய் துர்நாற்றம் போன்றவற்றுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. கடுக்காய் பொடி தூங்க செல்வதற்கு முன் வெந்நீரில் கலந்து குடித்தால் சர்வ நோய்களும் நீங்கும். 

கடுக்காய் தோலின் பிற பயன்கள்: 

  • சருமம்:
    அக்கி, படை, சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு கடுக்காய் நல்ல தீர்வாக அமைகிறது. ஹோமியோபதியில் இதை சிகிச்சைக்காக பயன்படுத்தலாம்.
  • சிறுநீர் கோளாறுகள்:
    கடுக்காய் சிறுநீர் குழாய்களில் ஏற்படும் புண், எரிச்சல், கல்லடைப்பு, நீரடைப்பு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
  • உடல் உஷ்ணம்:
    உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க கடுக்காய் உதவுகிறது.
  • சர்க்கரை நோய்:
    சர்க்கரை நோயாளிகளுக்கு கடுக்காய் நல்ல தீர்வாக அமைகிறது.
  • மூட்டு வலி:
    மூட்டு வலிக்கு கடுக்காய் சிறந்த மருந்தாக உள்ளது.
  • உடல் பலவீனம்:
    உடல் பலவீனத்தை போக்கி உடலை பலமாக்குகிறது.
  • ரத்தக் கோளாறுகள்:
    ரத்தக் கோளாறுகளை சரிசெய்ய கடுக்காய் உதவுகிறது.
  • வயிற்றுப் புண்:
    கடுக்காய் வயிற்றுப்புண், குடல் புண் போன்றவற்றுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.
  • பல் ஈறு வலி:
    பல் ஈறு வலிக்கும் போது, கடுக்காயை பயன்படுத்தலாம்.
  • இருமல்:
    இருமலுக்கு கடுக்காய் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
  • மலச்சிக்கல்:
    கடுக்காய் மலச்சிக்கலை போக்கி குடல் சக்தியை மேம்படுத்துகிறது.
  • சிறுநீரக கோளாறுகள்:
    கடுக்காய் சிறுநீரக கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.
  • உடல் பருமன்:
    கடுக்காய் உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது.
கடுக்காயை உட்கொள்வதற்கும், பயன்படுத்துவதற்கும், மருத்துவ நிபுணரின் ஆலோசனை பெறுவது நல்லது.
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

ஆவாரம் பட்டை – Aavaram Pattai

Original price was: ₹50.00.Current price is: ₹40.00.

ஆவாரம் பட்டை கஷாயம் சாப்பிட சருமத்திற்கு ஒளி தரும். நீரிழிவுத் தீரும். இதன் பூவைக் கூட்டுச் செய்துச் சாப்பிட மூத்திர சம்பந்தமான நோய்கள் குணமாகும். வெள்ளை வெட்டைத் தீரும். குளிர்ச்சியைத் தரும்.

மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து அதை தண்ணீரில் போட்டு காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.

சருமத்தில் வீக்கம் இருந்தால் பட்டை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கப்பட்டு சுத்தம் செய்து வந்தால் படிப்படியாக வீக்கம் குறைக்கும்.

ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.

ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்  கொள்ள உதவுகிறது. ஆவாரம் பட்டையை நீரில் இட்டுக் காய்ச்சிக் காலை தோறும் வாய் கொப்பளிக்கப் பயன்படுத்துவதால் வாய்ப்புண்கள் எவ்விதமானதாயினும் விரைவில் ஆறிவிடும்.

ஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.

இதன் கஷாயம் நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Add to cart

ஏல அரிசி – Eala arisi – cardamom seeds

Price range: ₹20.00 through ₹300.00
ஏல அரிசி
  • பல் வலியை சரிசெய்ய கூடியது.
  • வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது.
  • ​கண் பார்வையை அதிகரிக்கும்.
  • ​அஜீரணத்தை சரிசெய்யும்.
  • ​நீரிழிவை கட்டுக்குள் வைக்கும்.
  • ​சருமப் பொலிவுக்கு பயன்படும்.
  • வயிற்று கோளாறுகளை சரிசெய்யவல்லதும்.
  • பித்தத்தை சமன்படுத்த கூடியது.
  • உயர் ரத்த அழுத்தம், கொழுப்பை குறைக்கவல்லது.

வாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் வலி குறையும். வயிறு உப்புசம் சரியாகும். ரத்த ஓட்டம் சீராகும்.

கால் ஸ்பூன் காட்டு ஏல அரிசி, 3 லவங்கம் ஆகியவற்றை பொடித்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி, வாய் கொப்பளிப்பதன் மூலம் துர்நாற்றம் போகும். ஈறுகளில் ஏற்படும் வீக்கம் குறையும். பல் வலி சரியாகும். பல் சம்பந்தமான நோய்கள் சரியாகும்.

இதில் தேன் சேர்த்து சளி, இருமலுக்கான உள் மருந்தாக பயன்படுத்தலாம். இது வயிற்று வலியை போக்கும். வயிற்று புண்களை ஆற்றும்.

இது வயிற்று கோளாறை சரி செய்கிறது. ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதயத்தை ஒழுங்காக செயல்பட வைக்கிறது.

ஏல அரிசி, கிராம்பு, லவங்கப்பட்டை, மிளகு,சுக்கு, தாளிசபத்திரி, ஆரோ ரூட் மாவு போன்ற எளிய மூலிகைகள்  சேர்த்து ஏலாதி சூரணம் எனும் சித்த மருந்து தயாரிக்கப்படுகிறது.  நாட்பட்ட குடல்புண்ம, வயிறு எரிச்சல், அசீரணம், வாந்தி ,வாய்க்குமட்டல் உள்ளவர்கள் அவ்வப்போது இந்த மாத்திரையை அல்லது ஏலக்காயை  வாயிலிட்டு சுவைத்தாலும் நன்மை தரும்.

உணவில் சேர்த்துக்கொள்ள குடல்புண் ஏற்படாமல் தடுக்கும் தன்மையும், வயிறு குடல் பகுதியில் உள்ள சவ்வினை பாதுகாக்கும் தன்மையும் உடையது.

 

ஏல அரிசி – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

அக்ரகாரம் – Agrakaram

Price range: ₹50.00 through ₹100.00

பல் பிரச்சனைகள் தீரும்

சிறிது அக்கரகாரத்தை அரைத்து, அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இது கால் லிட்டர் அளவு ஆனவுடன், அதை எடுத்து ஆற வைத்து கொள்ள வேண்டும். தினமும் அதில் சிறிதளவு வாயில் போட்டு அதக்கிக் கொண்டு, சிறிது நேரம் கழித்து கொப்பளிக்கவும். இதுபோன்று, தினமும் இரண்டு முறைகள் வீதம், மூன்று நாட்கள் கொப்பளித்து வந்தால் வாய் புண், தொண்டைப் புண், பல் வலி போன்ற பாதிப்புகள் விலகும்.

காய்ச்சலை கட்டுபடுத்தும்

அக்காரகாரம், அதி மதுரம், சுக்கு மற்றும் சித்தரத்தை சேர்த்து அரைத்து, பேரிச்சம் பழ விழுதைக் கலந்து தேன் சேர்த்து கொள்ள வேண்டும். கடும் காய்ச்சல் மற்றும் குளிர் காய்ச்சல் உள்ள நேரங்களில், நம் உடலில் உள்ள நீர்ச்சத்து எல்லாம் ஆவியாகி விடும். இதனால் நா வறட்சி ஏற்படும். அப்போது இந்த அரைத்த விழுதை சிறிதளவு நாக்கில் தடவினால், நாவில் ஏற்பட்ட வறட்சி நீங்கி, உமிழ்நீர் சீராக சுரக்க ஆரம்பிக்கும், காய்ச்சலும் குறைய ஆரம்பிக்கும்.

தொண்டை பிரச்சனைகள் தீர்க்கும்

அக்கரகார சூரணத்துடன் இந்துப்பு கலந்து, புளித்த நீர் அல்லது எலுமிச்சை சாறு விட்டு நன்கு அரைத்து, அதை உள் நாக்கில் தடவி வந்தால், தொண்டைக் கட்டிக்கொண்டு பேச முடியாமல், தண்ணீர் பருக முடியாமல், உணவு உண்ண முடியாமல் இருப்பவர்கள் அந்த பாதிப்புகள் விரைவில் நீங்கி நலம் பெறுவார்கள்.

குரலின் இனிமை கூடும்

அக்கரகாரம், அதி மதுரம் மற்றும் கரிசலாங்கண்ணி ஆகிய இம்மூன்று மருந்துகளையும் தனித்தனியே இடித்துத் தூளாக்கி, பின்னர் அவற்றை சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து காலை நேரங்களில் தினமும் சாப்பிட்டு வந்தால் குரலின் இனிமை கூடும்.

மயக்கத்தை போக்கும்

திடீரென மயங்கி விழுந்து பற்கள் கட்டிக் கொண்டவர்களுக்கு, அக்கிரகார சூரணத்தை, மூக்கில் வழியாக செலுத்தினால், உடனே மயக்கம் விலகி, சுய நினைவை அடைவார்கள். காக்கா வலிப்பு வியாதியும் சரியாகும்.

மலச்சிக்கலை தீர்க்கும்

நா வறட்சி ஏற்படும் சமயங்களில் சிலருக்கு, மலச்சிக்கல் ஏற்படும். அதற்கு மேற்சொன்ன அக்கரகார தேன் மருந்தில், கடுக்காய் சூரணம் சேர்த்து பயன்படுத்தினால் நாவறட்சி நீங்கி மலச்சிக்கல் தீரும்.

வாய் பிரச்சனைகளை தீர்க்கும்

சிலருக்கு உள்நாக்கு வளர்ந்து, பேச முடியாமல் தொண்டை கட்டிக்கொண்டு வலிக்கும். அப்படிப்பட்டவர்கள் சிறு அக்கரகார வேர்த் துண்டை, வாயில் போட்டுக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கி வந்தால், தொண்டை உள்நாக்கு பாதிப்பு, குரல் கம்முவது, அதீத தாகம் போன்றவை சரியாகும்.

மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்

உடலின் சீரான இயக்கத்துக்கும், மனதின் ஆற்றலுக்கும் கட்டுப்பாட்டு மையமாக விளங்கும் மூளையானது சரியாக இயங்காவிட்டால், சரியாக சிந்திக்க முடியாது, ஞாபக மறதி அதிகரிக்கும், மேலும் உடலில் சோர்வு உண்டாகும். இதற்கு அக்கரகார வல்லாரை மருந்து உதவி புரியும். அக்கரகாரம், வல்லாரை மற்றும் பூனைகாலி இவை மூன்றையும் சமமாக கலந்து தினமும், இருவேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், மூளையின் செயல்பாடு சீராகும். மேலும் உடலின் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து, சிந்திக்கும் திறனை மேம்படும்.

 

Disclaimer:

The content provided here is for informational purposes only. Pondy Herbals is not intended to substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of a qualified healthcare provider for any questions or concerns you may have regarding a medical condition. Pondy Herbals does not endorse or recommend any specific tests, physicians, procedures, opinions, or other information mentioned on the site.

Tags: Akarkara enhances fertility, and improves libido in men, Benefits Akrakaram Root, Buy Agrakaram root online, Buy Akarkara root online, Buy akkaragaram ver online, Buy Ayurvedic medicine for impotency, buy herbal dried online, Buy herbal medicine for men, Buy nattumarunthu online, Buy pure Akrakaram ver online, Buy Spanish Chamomile online, Common name of akrakara, Health benefits of akrakaram ver online, increase spermatozoa count, Treats Impotency & Erectile Dysfunction, uses of akrakara ver online, Where to buy Akarkara root online

Select options This product has multiple variants. The options may be chosen on the product page