Iron Deficiency

Showing all 8 resultsSorted by popularity

சப்ஜா விதை – Sabja Seeds

Price range: ₹25.00 through ₹210.00
சப்ஜா விதைகளின் முக்கிய பயன்கள் செரிமானத்தை மேம்படுத்துதல், உடல் சூட்டைக் குறைத்தல், மலச்சிக்கலைப் போக்குதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் மற்றும் எடை இழப்புக்கு உதவுதல் ஆகியவை ஆகும். இந்த விதைகள் இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை. 
சப்ஜா விதைகளின் பயன்கள்:
  • செரிமானத்தை மேம்படுத்துதல்: சப்ஜா விதைகளில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது, மேலும் குடல் மற்றும் வயிற்றுப் புண்களை ஆற்றுகிறது.
  • உடல் சூட்டைக் குறைத்தல்: தண்ணீரில் ஊறவைத்த சப்ஜா விதைகளை உட்கொள்வது உடல் சூட்டைக் குறைக்க உதவுகிறது.
  • மலச்சிக்கலைப் போக்குதல்: மலச்சிக்கலைப் போக்க சப்ஜா விதைகள் உதவுகின்றன.
  • நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துதல்: இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன.
  • எடை இழப்புக்கு உதவுதல்: சப்ஜா விதைகளை உணவில் சேர்ப்பது பசியைக் கட்டுப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
  • சத்துக்களை வழங்குதல்: சப்ஜா விதைகளில் இரும்புச்சத்து, சல்ஃபர், வைட்டமின்கள் ஏ, பி, மற்றும் சி, துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
  • இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்: சப்ஜா நீர் குடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 
  • சரும ஆரோக்கியம்: சப்ஜா விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
  • நீரேற்றத்தை ஊக்குவித்தல்: விதைகளை தண்ணீரில் ஊறவைப்பதால், அவை நீரை உறிஞ்சி, உடலுக்கு நீரேற்றம் அளிக்க உதவுகின்றன. 
எப்படி பயன்படுத்துவது:
  • சப்ஜா விதைகளை தண்ணீரில் 15-30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • ஊறிய விதைகளை எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்துக் கலக்கிப் பருகலாம்.
  • இவற்றை பானங்கள், பழச்சாறுகள் மற்றும் இனிப்புகளில் சேர்த்துக்கொள்ளலாம்.

 

 

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

அன்னபேதி உப்பு – Annabethi Salt

Price range: ₹60.00 through ₹100.00

அன்னபேதி உப்பு (Ferrous Sulfate) என்பது சித்த மருத்துவத்தில் இரத்த சோகை (Anemia), பாண்டு நோய், காமாலை மற்றும் மண்ணீரல், கல்லீரல் கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இது உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தை அதிகரித்து, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றை குணப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், மாதவிடாய் பிரச்சனைகளைச் சரிசெய்யவும் உதவுகிறது.

அன்னபேதி உப்பு – முக்கிய மருத்துவ பயன்கள்:
    • இரத்த சோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாடு: உடலின் இரும்புச் சத்தை அதிகரித்து, இரத்த சிவப்பணுக்களை (Hb level) அதிகரிக்க உதவுகிறது.
    • பாண்டு மற்றும் காமாலை: சித்த மருத்துவத்தில் பாண்டு நோய்கள் மற்றும் மஞ்சள் காமாலை சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • செரிமானம் மற்றும் வயிறு:
      வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கும், செரிமானத்தை முறைப்படுத்துவதற்கும், வயிற்று உப்புசத்தை குறைக்கவும் உதவுகிறது.
  • சுவாச ஆரோக்கியம்: சளி மற்றும் சுவாசக் குழாயில் உள்ள கபத்தை வெளியேற்ற உதவுகிறது.

 

  • கல்லீரல் மற்றும் மண்ணீரல்: கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கத்தைக் குறைக்கவும், அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை (செந்தூரம்):
அன்னபேதி செந்தூரம் 100 – 200 மி.கி வரை தேனுடன் கலந்து தினமும் இருவேளை உட்கொள்ளலாம்.

 

குறிப்பு: இந்த மருந்தை மருத்துவரின் ஆலோசனையின்றி பயன்படுத்தக்கூடாது. இது ஒரு கனமினரல் (Herbomineral) மருந்து என்பதால், அளவுக்கதிகமாக உட்கொள்வது பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

Disclaimer:
Despite our attempts to provide you with the most accurate information possible, the actual packaging, ingredients and colour of the product may sometimes vary. Please read the label, directions and warnings carefully before use.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

நெருஞ்சில் பவுடர் – Nerunjil Powder

Original price was: ₹40.00.Current price is: ₹35.00.

நெருஞ்சில் இலையில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை இருக்கின்றன. பாலியல் பிரச்னைகளையும், சிறுநீரகக் கோளாறுகளையும் நீக்கும் அருமருந்தாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஆயுர்வேதத்திலும், சீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் பெருமை வாய்ந்தது, நெருஞ்சில்.

சிறுநீரகம் தொடர்பான நோய்கள், கல்லீரல் பாதிப்புகள், சரும நோய்கள், ரத்தநாள பாதிப்புகள், இதயநோய்களுக்கு முக்கிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

சிறுநீர் தாரை நோய்கள் அத்தனையும் நீக்கும் குணம் வாய்ந்தது. நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது.

உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை யானை நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது. ஆனை நெருஞ்சில் மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல். இவைகளை தரும் . சாப்பிட்டுப்பார்த்தால் தான் தெரியும் அதன் வலிமை. நம்மிடையே இருக்கும் ஆண்மை பெருக்கி மருந்துகள் பல இன்னும் சரிவர பயன்படுத்தாமல் இருக்கிறது .

நெருஞ்சல் வித்தினைப் பாலில் புட்டவியல் செய்து உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை கொடுத்து வரத் தாது கட்டும்.

ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி குடி நீராகப் பயன்படுத்தலாம். 50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வடிதல், சிறு நீர் சொட்டாக வருதல் குணமாகும்.

நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பிற்கு நெருஞ்சில் காயையும், வேரையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு அதனுடன் பச்சரிசி கூட்டி கஞ்சி வைத்து அருந்தி வர குணமாகும். சிறு நெருஞ்சில் இலைகளைப் பறித்து வந்து, அதில் அரை லிட்டர் அளவு சாறெடுக்கவும். கீழாநெல்லி இலைகளைப் பறித்து அதிலும் அரை லிட்டர் சாறெடுக்கவும். இரண்டையும் ஒன்றாய்க் கலந்து, இதில் கால் கிலோ மஞ்சளை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவும்.  இத்துடன் சம அளவு சிறுபீளை வேர், சீந்தில் இலை, வில்வ இலை, தென்னம்பாளை அரிசி ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் கால் ஸ்பூன் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, சிறுநீரகங்களைப் பற்றிய நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு, சிறுநீரில் ரத்தம் வெளியாகுதல், சிறுநீரில் சீழ் உண்டாகுதல், சிறுநீர் அடிக்கடி கழிதல் சிறுநீரகச் செயற்பாடு குறைவு போன்ற குறைகள் நீங்கி, சிறுநீரகம் செழுமையாய் செயற்படும்.

இந்த மூலிகையை பொடியை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Add to cart

கருங்காலி – Karungali

Price range: ₹40.00 through ₹175.00

கருங்காலி கட்டை பல நன்மைகளை வழங்குகிறது. இது நரம்புத் தளர்ச்சியை போக்கி புத்துணர்வு கொடுக்கும். உடலுக்கு வலிமைத்தரும் , குளிர்ச்சி தன்மை கொண்டது, பற்களுக்கு வலிமைவூட்டும்.  துவர்ப்புத் தன்மை மிக்கது.

கருங்காலி கட்டையின் பயன்கள்: 

இதனை பயன்படுத்த ரத்தம் தொடர்பான அனைத்து ஆரோக்கிய கேடும் நீங்கும். சர்க்கரையின் அளவு குறையும். இரும்புச்சத்து அதிகரிக்கும். ரத்தக் கொதிப்பு முற்றிலும் அகலும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும். சுவாச,காச நோய்கள் தீரும். குடிப்பழக்கம் சரியாகும். பல், ஈறுகளில் ரத்தக் கசிவு சீராகும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.

பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும். மாதவிடாய் கோளாறை சீராக்கி குழந்தை பாக்கியம் ஏற்படுத்தும். வெள்ளைப்படுதல், அதிக உதிர போக்கிற்கு சிறந்த மருந்தாகும்.

ஆண்களுக்கு உடல் பலமடையும்.

ஆண்மை பெருகும்.நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.

சித்தர்கள், முனிவர்கள் போன்றோர் தங்கள் பயன்பாட்டிற்கு கருங்காலி கட்டைகளை பயன்படுத்தியுள்ளனர். கருங்காலி கட்டை வீடுகளில் உலக்கை, மரப்பாச்சி பொம்மைகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. மேலும், கோவில்களில் கும்பாபிஷேகத்தின் போது கலசத்தின் உள்ளே வைக்கப்பட்டு, நல்ல ஆற்றலை ஈர்க்கிறது.

 

  • புத்துணர்வு:
    நரம்புத் தளர்ச்சியை போக்கி புத்துணர்வு அளிக்கிறது.
  • ஆற்றல்:
    பிரபஞ்சத்தில் உள்ள நல்ல ஆற்றலை ஈர்க்கிறது.
  • பயன்பாடு:
    சித்தர்கள், முனிவர்கள், குறி சொல்பவர்கள் போன்றோர் தங்களது பயன்பாட்டிற்கு கருங்காலி கட்டைகளை பயன்படுத்துகிறார்கள்.
  • வீட்டுப் பயன்பாடு:
    வீடுகளில் உலக்கை, மரப்பாச்சி பொம்மைகள் போன்றவற்றுக்கு கருங்காலி கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • கோவில் பயன்பாடு:
    கோவில்களில் கும்பாபிஷேகத்தின் போது கலசத்தின் உள்ளே கருங்காலி கட்டைகள் வைக்கப்படுகின்றன.

தொழில் கூடத்தில் வைத்து வழிபட்டால் தொழில் விருத்தி அடையும், லாபம் பெருகும். செல்வ வளமும், நிம்மதியும் நிலைக்கும். வாகனங்களில், கைப்பையில் வைக்க விபத்து ஏற்படாது. மாலையாக அணிந்து கொண்டு தியானம் மந்திர ஜபம் செய்ய காரிய சித்தி கிடைத்து வீட்டில் நிம்மதி, அமைதி நிலைக்கும். அன்னை வாராகி மற்றும் லட்சுமி நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

செம்பருத்தி பூ உலர்ந்தது – Hibiscus Flower Dried

Price range: ₹40.00 through ₹330.00

சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களூம் மருத்துவ பயன்கள் கொண்டது.  இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது.
கூந்தல் வளர்ச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது. செம்பருத்திப் பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.

செம்பருத்தி பூவின் சத்துக்கள்:

❖ இயற்கையான அமிலங்கள்
❖ இரும்பு
❖ பாஸ்பரஸ்
❖ கால்சியம்
❖ வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்

செம்பருத்தி இலைகளின் சத்துக்கள்:

❖ 2-3% புரதங்கள்
❖ இரும்பு
❖ கால்சியம்
❖ பாஸ்பரஸ்

செம்பருத்தி பயன்கள்:

❖ அழகு: தலைமுடி பராமரிப்பு, சரும பராமரிப்பு
❖ உணவு: தேநீர், சூப்கள், ஜெல்லி, சாலடுகள்
❖ மருத்துவம்: இரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு, காய்ச்சல் குணமாகும்.

செம்பருத்தி இதழ்கள் மற்றும் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளர் ஆக சுண்டும் வரை கொதிக்க வைத்து குடித்து வர இதயம் பலம் பெறுவதோடு மிகை ரத்த அழுத்தத்திற்கும் மிகச் சிறந்த மூலிகையாக உள்ளது.

உடலுக்கு :
உணவில் செம்பருத்திப் பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும்.
இருதயம் :
இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் ரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.
பெண்களுக்கு :
செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, மயக்கம் போன்றவை குறையும்.
கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் கரு உருவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்யாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.
செம்பருத்திப் பூ இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை – மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெய்யை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பத்திப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும். இது ஒரு சிறந்த கூந்தல் தைலம்.
இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். பெண்கள் வீட்டுக்கு விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை நெய்யில் வதக்கி உண்டால் குணப்படுத்தும்.
ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறையும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.
செம்பருத்திப் பூவை 250 கிராம், 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் அதனை பிசைந்து வரும் சாற்றோடு, சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி, காலை, மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.
செம்பருத்தி பூக்கள் கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்தும்

உலர் செம்பருத்தி பூக்கள் –  தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

 

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

அரச விதை – Arasa vidhai

Price range: ₹30.00 through ₹75.00

அரசவிதை (Ficus religiosa seeds) மருத்துவ குணம் கொண்ட ஒரு விதை ஆகும். இதை பொடியாக்கி பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்தாக  பயன்படுத்துகின்றனர்.

  • மலச்சிக்கல் தீர அரச விதைகளைக் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் (1 ஸ்பூன்) அளவு எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.

 

  • வைட்டமின் பி, ஆன்டிஆக்ஸிடன்ட், இரும்புச்சத்து,  துத்தாநாகம், மக்னீசியம் ஆகிய  சத்துக்கள் உள்ளன.

 

  • ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும். ஆண் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, உயிரணு குறைபாடுகளை நீக்க உதவுகிறது.

 

  • மலட்டுத் தன்மையை நீக்கும்.

 

  • நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

 

  • உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

 

  • பசிதூண்டி. மலச்சிக்கல், குரல்வளம், தேக பலத்திற்கு சிறந்தது.

 

சில தகவல்களின்படி, அரச விதை பொடியை சூடான நீரில் அல்லது பாலில் கலந்து குடித்தால் பசியை தூண்டும் என்று கூறப்படுகிறது. சில மூலிகை மருத்துவ குறிப்புகளில், அரச விதை பொடியை தேனுடன் கலந்து சாப்பிடுவது, தாது பலத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

பயன்படுத்தும் முறை :

சூடான நீர்/ பசும்பால் உடன் 1/2 தேக்கரண்டி காலை/ மாலை கலந்து பருகலாம் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளவும்.

அரச விதை – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

கொள்ளு – Kollu (HorseGram)

Price range: ₹35.00 through ₹120.00

கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு – ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு  அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு.

கொள்ளை ரசமாக வைத்து சாப்பிட்டால் மிகுந்த நன்மை அளிக்கும் என சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது. உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையும்.

கொள்ளை நாம் தொடர்ந்து எடுத்து கொண்டால் நம் ரத்த அழுத்தம் சீரான அழுத்தத்தில் இருக்கும். மேலும் சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும். ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடுமையான உடல் உழைப்பிற்க்கு பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் குறைக்கும்.

கொள்ளுப் பருப்பை நீரில் ஊற வைத்து, அந்த நீரை குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம், வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளில் அடங்கியுள்ள ஊட்டசத்துக்கள்

கொள்ளில் புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து, மாவுசத்து, தாதுபொருள்கள், வைட்டமின்கள் போன்றவை மிகுதியாக நிறைந்துள்ளது.

கொள்ளை அரைத்து பொடி செய்து, ரசத்தில் பயன்படுத்தி வரலாம். சிலருக்கு வாயு பிரச்சனையால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். அவர்கள் கொள்ளை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால் நன்கு பசி ஏற்படும்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. சிறுநீரக கற்களை குணப்படுத்துகிறது.

இதில் வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன.

ஆரோக்கியப் பலன்கள்

புரதம் நிறைந்தது
அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது.

உடல் எடை குறைக்கும்!
சாப்பாட்டில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும்.

சளி, காய்ச்சல்
இதை தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து அந்த நீரை அருந்தினால், ஜலதோஷம் குணமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன.

சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்!
இதை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், சிறிய அளவிலான சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும்.

விந்தணுக்கள் அதிகரிக்கும்!
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள் உள்ளன. இவை ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மலட்டுத்தன்மையை நீக்க உதவுபவை.

சர்க்கரைநோய் தடுக்கும்!

சர்க்கரையின்அளவீடு அதிகமாகும்போது, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும்.ஆனால், கொள்ளு ஆன்டி- ஹைப்பர்கிளைசெமிக் (Antihyperglycemic) உணவு வகையை சேர்ந்தது. எனவே, இது சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்தது.

மாதவிடாய்ப் பிரச்னைகளைச் சரிசெய்யும்
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்; மாதவிடாய் பிரச்னைகளை சரிப்படுத்தும்.

இந்த கொள்ளு – தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.

India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

மார்த்தாண்டம் தேன் – Marthandam Honey

Price range: ₹130.00 through ₹490.00
Select options This product has multiple variants. The options may be chosen on the product page