Herbal Powder

Showing 1–12 of 75 resultsSorted by popularity

ஜவ்வாது பவுடர்-GN Javadhu Powder

Original price was: ₹32.00.Current price is: ₹30.00.
Add to cart

அவுரி (நீலி) இலைப்பொடி – Neeli Avuri (Indigo) Powder

Original price was: ₹50.00.Current price is: ₹45.00.

அவுரி இலை பொடி (Indigo Powder)

நரைமுடியை இயற்கையாகக் கருப்பாக்கவும், முடி உதிர்வைத் தடுத்து முடி வளர்ச்சியைத் தூண்டவும், உச்சந்தலையைக் குளிர்ச்சியாக வைக்கவும் பெரிதும் உதவுகிறது. இது வேதியியல் சாயங்களுக்குப் பாதுகாப்பான மாற்றாகும். மேலும், இது சருமப் பிரச்சனைகளைத் தீர்க்கவும், கல்லீரல் ஆரோக்கியத்திற்கும், உடலை நச்சுத்தன்மையிலிருந்து நீக்கவும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அவுரி இலை பொடியின் முக்கிய பயன்கள்:
  • இயற்கை முடி சாயம்: மருதாணியுடன் கலந்து பயன்படுத்தும்போது நரைமுடியை இயற்கையான கறுப்பு அல்லது அடர் பழுப்பு நிறமாக மாற்றுகிறது.
  • முடி வளர்ச்சி மற்றும் அடர்த்தி: மயிர்க்கால்களை வலுப்படுத்தி, முடி உதிர்வைக் குறைத்து, முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.
  • பொடுகு மற்றும் உச்சந்தலை ஆரோக்கியம்: பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக பொடுகு மற்றும் உச்சந்தலை அரிப்பைக் குறைத்து, குளிர்ச்சியைத் தருகிறது.
  • சருமப் பராமரிப்பு: முகப்பரு, தோல் அழற்சி (rashes) மற்றும் அரிப்பு போன்ற சருமப் பிரச்சனைகளுக்குப் பொடியாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • உடல் நலம்: கல்லீரலைப் பாதுகாக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடலின் நச்சுத்தன்மையை நீக்கவும் (detoxify) இது மருத்துவ ரீதியாகப் பயன்படுகிறது.
  • இயற்கையான மலமிளக்கியாகும். 18 வித விஷங்களை முறிக்கும்.
  • காமாலை, சீதளம், முப்பிணி, கீல்வாதம் இவைகளைப் போக்கும்.
    உடல் பொன்னிறம் பெறும் என்கிறது  குணபாடம்!
  • தீப்புண், தீயினால் ஏற்பட்ட கொப்புளங்களை சரியாக்க இந்த அவுரி பயன்படும்.
  • நாய்கடி விஷத்தால் ஏற்படும் – ஹைடிரோ போபியாவுக்கு நன்றாக குணம் கிடைக்கச் செய்யும்.

 

பயன்படுத்தும் முறை:
  • முடிக்கு: மருதாணி இலை பொடி தடவி காய்ந்த பிறகு, அவுரி பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து பேஸ்ட் போல செய்து, தலைமுடியில் தடவி 1-2 மணி நேரம் கழித்து அலசவும்.
  • உடலுக்கு: பொதுவாக 1-3 கிராம் வரை வெதுவெதுப்பான நீரில் கலந்து உணவுக்கு முன் உட்கொள்ளலாம் (மருத்துவர் ஆலோசனைப்படி).
குறிப்பு: முடிக்கு பயன்படுத்தும் முன், தோல் ஒவ்வாமை சோதனை (Patch test) செய்வது நல்லது.
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

நெருஞ்சில் பவுடர் – Nerunjil Powder

Original price was: ₹40.00.Current price is: ₹35.00.

நெருஞ்சில் இலையில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை இருக்கின்றன. பாலியல் பிரச்னைகளையும், சிறுநீரகக் கோளாறுகளையும் நீக்கும் அருமருந்தாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஆயுர்வேதத்திலும், சீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் பெருமை வாய்ந்தது, நெருஞ்சில்.

சிறுநீரகம் தொடர்பான நோய்கள், கல்லீரல் பாதிப்புகள், சரும நோய்கள், ரத்தநாள பாதிப்புகள், இதயநோய்களுக்கு முக்கிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

சிறுநீர் தாரை நோய்கள் அத்தனையும் நீக்கும் குணம் வாய்ந்தது. நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது.

உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை யானை நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது. ஆனை நெருஞ்சில் மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல். இவைகளை தரும் . சாப்பிட்டுப்பார்த்தால் தான் தெரியும் அதன் வலிமை. நம்மிடையே இருக்கும் ஆண்மை பெருக்கி மருந்துகள் பல இன்னும் சரிவர பயன்படுத்தாமல் இருக்கிறது .

நெருஞ்சல் வித்தினைப் பாலில் புட்டவியல் செய்து உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை கொடுத்து வரத் தாது கட்டும்.

ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி குடி நீராகப் பயன்படுத்தலாம். 50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வடிதல், சிறு நீர் சொட்டாக வருதல் குணமாகும்.

நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பிற்கு நெருஞ்சில் காயையும், வேரையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு அதனுடன் பச்சரிசி கூட்டி கஞ்சி வைத்து அருந்தி வர குணமாகும். சிறு நெருஞ்சில் இலைகளைப் பறித்து வந்து, அதில் அரை லிட்டர் அளவு சாறெடுக்கவும். கீழாநெல்லி இலைகளைப் பறித்து அதிலும் அரை லிட்டர் சாறெடுக்கவும். இரண்டையும் ஒன்றாய்க் கலந்து, இதில் கால் கிலோ மஞ்சளை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவும்.  இத்துடன் சம அளவு சிறுபீளை வேர், சீந்தில் இலை, வில்வ இலை, தென்னம்பாளை அரிசி ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் கால் ஸ்பூன் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, சிறுநீரகங்களைப் பற்றிய நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு, சிறுநீரில் ரத்தம் வெளியாகுதல், சிறுநீரில் சீழ் உண்டாகுதல், சிறுநீர் அடிக்கடி கழிதல் சிறுநீரகச் செயற்பாடு குறைவு போன்ற குறைகள் நீங்கி, சிறுநீரகம் செழுமையாய் செயற்படும்.

இந்த மூலிகையை பொடியை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Add to cart

மாவிலங்க பட்டை பவுடர் – Maavilanga Pattai powder

Original price was: ₹45.00.Current price is: ₹40.00.
Three types of Dhosha and stone block will go away.
Add to cart

மூக்கிரட்டை பவுடர் – Mookkirattai Powder

Original price was: ₹80.00.Current price is: ₹75.00.
மூக்கிரட்டை எனும் மூலிகை இதயநோய், சைனஸ், ஆஸ்துமா, சளித் தொல்லை, ரத்த சோகையால் ஏற்படும் உடல்வீக்கம், தொப்பை, வாதக் கோளாறு, மஞ்சள்காமாலை, மலச்சிக்கல், மூலக்கோளாறு உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாகிறது.
பயன்படுத்துவது எப்படி?
மூக்கிரட்டை வேர் பொடியை , விளக்கெண்ணெய் விட்டு காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் மலம் இளகும். உடலில் தங்கியிருக்கும் நச்சு நீர், கிருமிகள் வெளியேறி சரும நோய்கள், வாத நோய்கள் விலகும். எடை குறைந்து அழகு மிளிரும்.
மூக்கிரட்டை கீரை பொடி மற்றும் அதன் வேர் பொடி நீரில் கொதிக்க வைத்து ஆற்றி குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுகள், கழிவுகள் எல்லாம் நீங்கி ரத்தம் சுத்தமாகும்.
மூக்கிரட்டை கீரை செடியின் வேர் பொடியை இளம் சூடான நீரில் கலந்து, பருகி வந்தால் கண்கள் சம்பந்தமான அத்தனை குறைகளையும் நீக்கும்.
மூக்கிரட்டை இலை பொடி, பொன்னாங்கண்ணி இலை பொடி மற்றும் கீழாநெல்லி இலை பொடி சம அளவு எடுத்து நன்றாக கலந்து, மோரில் கலந்து குடிக்கலாம். தொடர்ந்து இதை குடித்துவந்தால் மங்கலான பார்வை, வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்.
மூக்கிரட்டைக் கீரை பொடியை சிறிது அளவு எடுத்து அரிசி மாவுடன் கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து அடைபோல தட்டி சாப்பிடலாம். காலை, மாலை தொடர்ந்து ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து வகையான மூல நோய்களும், குணமாகும்.
உணவால் ஏற்படும் அலர்ஜிக்கு, மூக்கிரட்டை வேர் பொடியை , ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி, சிறிது விளக்கெண்ணெய் கலந்து குடிக்கலாம். தினமும் இரண்டு வேளை குடித்தால் அலர்ஜி விலகி சருமம் புதுப்பொலிவு பெறும்.
மூக்கிரட்டை வேர் பொடியுடன் சிறிது பெருஞ்சீரகம் பொடி சேர்த்து, நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அதை தினமும் அருந்தினால், சிறுநீர் அடைப்பு விலகுவதுடன் சிறுநீரகக்கற்கள் கரைந்து வெளியேறும்.
மூக்கிரட்டை இலை பொடி மற்றும் மூக்கிரட்டை வேர் பொடி எங்களிடம் கிடைக்கும்.
இந்த மூக்கிரட்டை பொடியை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – வழியாக டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
Add to cart

அரிசி திப்பிலி – Arisi Thippili

Price range: ₹30.00 through ₹120.00

இந்த மூலிகையில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற திறன் பல்வேறு சுவாச பிரச்சினைகளை சரிசெய்ய உதவுகின்றன. திப்பிலி மாதவிடாய் பிடிப்புகள், மேகவெட்டை நோய், கருவுறாமை மற்றும் பாலுணர்ச்சி போன்ற பல பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் ஒரு அதிசய மூலிகையாகும்.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

கொடிவேலி பவுடர் – Kodiveli Powder

Original price was: ₹150.00.Current price is: ₹120.00.

கொடிவேலி இலைகள் பொடி

Kodiveli Leaves Podi – Herbal Remedy for Digestion, Diabetes & Skin Health

Kodiveli Leaves, also known as Lizard’s Tail Leaf (Plumbago Zeylanica), is widely used in Ayurvedic and Siddha medicine for its gut-healing, detoxifying, and anti-inflammatory properties.

🔹 Key Benefits | முக்கிய பயன்கள்

✔ Supports Digestion | செரிமானத்தை மேம்படுத்துகிறது – Relieves bloating, indigestion, and acidity naturally.
✔ Regulates Blood Sugar | சர்க்கரை நோய் கட்டுப்பாடு – Helps maintain stable glucose levels, making it beneficial for diabetes.
✔ Detoxifies the Liver | கல்லீரல் சுத்திகரிப்பு – Removes toxins from the liver, promoting better metabolism.
✔ Improves Skin Health | சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் – Treats eczema, rashes, and minor skin infections.
✔ Anti-Inflammatory & Pain Relief | அழற்சி எதிர்ப்பு – Helps reduce inflammation in joints and muscles.

🔹 How to Use? | பயன்படுத்தும் முறை

✅ For Digestion & Bloating Relief:
Mix 1 teaspoon of Kodiveli Leaves Podi in warm water or buttermilk and drink before meals.
✅ செரிமானத்திற்கு:
1 தேக்கரண்டி கொடிவேலி இலைகள் பொடியை வெந்நீரில் அல்லது மோரில் கலந்து, உணவுக்கு முன் குடிக்கவும்.

✅ For Blood Sugar Control:
Take 1/2 teaspoon of Kodiveli Podi daily with honey or warm water on an empty stomach.
✅ சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு:
அரை தேக்கரண்டி கொடிவேலி பொடியை தேனுடன் அல்லது வெந்நீருடன் கலந்து காலையில் அருந்தலாம்.

✅ For Skin & Wound Healing:
Make a paste with Kodiveli Leaves Podi and water, apply on rashes, wounds, or infections, and leave for 15 minutes before washing.
✅ சரும பிரச்சனைகளுக்கு:
கொடிவேலி இலைகள் பொடியை நீரில் கலந்து, கட்டிகள், சொறி, மற்றும் எக்சீமா மீது பூசவும்.

💡 Tip: For best results, use consistently for 2-3 months for long-term benefits.
💡 குறிப்பு: 2-3 மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்த, முழுமையான உடல்நலம் பெறலாம்.

Why Choose Our Kodiveli Leaves Podi (50g)?

✅ 100% Pure & Natural
✅ No Chemicals or Preservatives
✅ Sourced from High-Quality Herbal Farms
✅ Trusted in Traditional Siddha & Ayurvedic Medicine

Order Now & Experience the Healing Power of Kodiveli Leaves Podi! 🚀
இப்போதே ஆர்டர் செய்யுங்கள் & கொடிவேலி இலைகள் பொடியின் நன்மைகளை அனுபவியுங்கள்!

இந்த மூலிகை பொடியை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.

India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

மருதாணி பவுடர் – Marudhani (Henna) Powder

Price range: ₹30.00 through ₹330.00
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

கிச்சிலிக் கிழங்கு பவுடர் – Kichali Kizhangu Powder

Price range: ₹90.00 through ₹340.00

கிச்சிலி கிழங்கு, வெள்ளை மஞ்சள் அல்லது பூலாங்கிழங்கு என அழைக்கப்படும் இந்தக் கிழங்கு பல மருத்துவ பயன்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல் போன்றவற்றை குணமாக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும், சுவாச மண்டலத்தை பலப்படுத்தவும் உதவுகிறது. 

கிச்சிலி கிழங்கு பொடியின் மருத்துவ பயன்கள்:
  • வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல்:

    கிச்சிலி கிழங்கு தூள் தேனில் கலந்து சாப்பிடலாம். அல்லது கொதிக்க வைத்த நீரில் கிச்சிலி கிழங்கு, மஞ்சள் சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.

  • ஜீரண சக்தி:

    ஜீரண சக்தியை அதிகரிக்க கிச்சிலி கிழங்கு உதவுகிறது.

  • சுவாச மண்டலம்:

    ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள கிச்சிலி கிழங்கு, சுவாச மண்டலத்தை பலப்படுத்துகிறது.

  • வாதவலி:

    கிச்சிலி கிழங்கு பொடியை நீரில் கலந்து பற்றுப்போட்டால் வாதவலிகள் குறையும்.

  • சருமம்:

    காயங்கள் மற்றும் சரும பிரச்சினைகளுக்கு தீர்வாக கிச்சிலி கிழங்கு பயன்படுகிறது.

  • உடற் நாற்றம்:

    கிச்சிலி கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம் மற்றும் வியர்வை நாற்றம் குறையும்.

  • புற்றுநோய்:

    சில ஆய்வுகள் கிச்சிலி கிழங்கில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் இருப்பதாக கூறுகின்றன.

  • ஆஸ்துமா:

    ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு கிச்சிலி கிழங்கு தீர்வாக அமைகிறது.

  • சளி, மலச்சிக்கல், வாயு தொந்தரவு:

    இந்த கிழங்கு சளி, மலச்சிக்கல், வாயு தொந்தரவு போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது.

    கிச்சிலி கிழங்கை பயன்படுத்துவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.

     

இந்த கிச்சிலி கிழங்கு பொடியை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

கிராம்பு – Clove

Price range: ₹40.00 through ₹150.00
வீக்கத்தைக் குறைக்கிறது, புண்களைக் குறைக்கிறது, 
கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, பல்வலிக்குப் பயன்படும் கிராம்பு.
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

மைசூர் பருப்பு பொடி – Masoor Dal / Powder

Original price was: ₹35.00.Current price is: ₹30.00.
இது புரதம், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் மற்றும் குறைந்த கொழுப்பு 
உள்ளடக்கம் ஆகியவற்றின் வளமான ஆதாரமாக இருப்பதால் 
இது அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளது.
மசூர் பருப்பு சருமத்திற்கு நன்மை பயக்கும், ஏனெனில் 
இது வைட்டமின் பி இருப்பதால் சருமத்தை ஈரப்பதமாகவும்
ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது. இது துத்தநாகத்தின் நல்ல மூலமாகும் 
மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால் முகப்பருவை 
நிர்வகிக்க உதவுகிறது. மசூர் பருப்பு பொடியை பால் அல்லது 
தேனுடன் சேர்த்து முகத்தில் தடவுவது இயற்கையான
 ஸ்க்ரப்பாக செயல்படுகிறது மற்றும் முக முடியை நிர்வகிக்க உதவுகிறது.
Add to cart

இருமல் சளி ஸ்பெஷல் – Irumal Sali Special

Original price was: ₹65.00.Current price is: ₹60.00.
Relieves cold, cough, restlessness etc.
Add to cart