Showing all 3 resultsSorted by popularity
வேம்பாளம் பட்டை – Vembalam Pattai
₹50.00 – ₹90.00Price range: ₹50.00 through ₹90.00வேம்பாளம் பட்டை பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கிறது. தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகள், நரம்பு சுருட்டல், படுக்கைப் புண்கள் மற்றும் சரும வடுக்கள் ஆகியவற்றிற்கு இது ஒரு தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது.
- முடி உதிர்தல், உடைதல், இளநரை, பொடுகு, பேன் தொல்லை மற்றும் அரிப்பு போன்ற கூந்தல் பிரச்சனைகளுக்கு வேம்பாளம் பட்டை உதவுகிறது.
- வேம்பாளம் பட்டை எண்ணெயை தலைமுடிக்கு தடவுவதால், கூந்தல் நீளமாக, அடர்த்தியாக வளர உதவுகிறது.
- முடி உதிர்தல், உடைதல், இளநரை, பொடுகு, பேன் தொல்லை மற்றும் அரிப்பு போன்ற கூந்தல் பிரச்சனைகளுக்கு வேம்பாளம் பட்டை உதவுகிறது.
- முடி உதிர்தல் மற்றும் உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ந்து வைத்திருக்கவும் உதவுகிறது.
- வேம்பாளம் பட்டை எண்ணெயை தலை மற்றும் மூக்கின் மீது தடவுவதால் மன அமைதி கிடைக்கிறது.
- சரும வடுக்கள், தீக்காயங்கள், சரும தொற்றுகள் மற்றும் அழற்சி போன்ற சரும பிரச்சனைகளுக்கு வேம்பாளம் பட்டை ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.
- ‘வெரிகோஸ் வெயின்’ எனப்படும் நரம்பு சுருட்டல் பாதிப்பு மற்றும் படுக்கைப் புண்களுக்கும் வேம்பாளம் பட்டையை பயன்படுத்தலாம்.
- வேம்பாளம் பட்டை எண்ணெய் தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு அளிக்கும். தலை மற்றும் மூக்கின் மீது எண்ணெயை தடவுவதால் மன அமைதி கிடைக்கும், நிம்மதியான தூக்கம் வரும்.
முடி சார்ந்த பிரச்சனைகளான முடி உதிர்தல், உடைதல், இளநரை, பொடுகு, பேன் தொல்லை மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வேம்பாளம் பட்டை சிறந்த தீர்வாகும். இது தவிர, ‘வெரிகோஸ் வெயின்’ எனப்படும் நரம்பு சுருட்டல் பாதிப்பு, படுக்கைப் புண்கள் மற்றும் சரும வடுக்கள் போன்றவற்றிற்கும் வேம்பாளம் பட்டை சிறந்த தீர்வாகும்.
வேம்பாளம் பட்டை சிவப்பு வண்ண இயற்கை நிறமூட்டியாக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
இதை இயற்கை அழகுப் பொருட்கள் தயாரிப்பில் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்தப் பட்டை சரும தொற்றுகள் வராமல் தடுக்கக் கூடியது. இதன் அழற்சி எதிர்ப்புத் தன்மை, தீக்காயங்களை விரைவாக ஆற்றும். சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்புகளையும் குணப்படுத்தும்.
வேம்பாளம் பட்டைப் பொடியை, வெண்ணெய்யுடன் கலந்து அழற்சி மற்றும் தீக்காயங்கள் உள்ள இடங்களில் பூசிவந்தால் விரைவாக குணமடையும். வேம்பாளம் பட்டை, பெருங்காயம் கருஞ்சீரகம் ஆகியவற்றை பொடித்து, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து காயங்களின் மேல் பற்று போட்டு வந்தால் அவை விரைவாக ஆறும்.
வேம்பாளம் பட்டையை – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
செம்பருத்தி பூ பொடி – Hibiscus Flower Powder
₹60.00 – ₹500.00Price range: ₹60.00 through ₹500.00செம்பருத்திப்பூ பொடி
செம்பருத்தி செடியின் காய்ந்த பூக்களில் இருந்து பெறப்பட்ட இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் அமிலங்கள் நிறைந்துள்ளன.
- செம்பருத்திப் பொடியானது சருமத்தின் நிறத்தை சமன் செய்து, ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைத்து, சருமத்திற்கு மிகவும் சீரான மற்றும் பிரகாசமான தோற்றத்தைக் கொடுக்கும்.
- இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், வறட்சியைத் தடுக்கவும் உதவும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது.
- செம்பருத்திப் பொடியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தி, உறுதியான மற்றும் இளமைத் தோற்றத்திற்கு வழிவகுக்கும்.
- முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது: செம்பருத்தி தூள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது மயிர்க்கால்களைத் தூண்டுகிறது மற்றும் விரைவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
- முடியை பலப்படுத்துகிறது: வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த, செம்பருத்தி பொடி முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்த உதவுகிறது, உடைப்பு மற்றும் பிளவுகளை குறைக்கிறது.
- கண்டிஷனிங்: இது இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது, முடியின் மென்மையையும், பிரகாசத்தையும் அதிகரிக்கும் போது, ஃப்ரிஸ்ஸை குறைக்கிறது.
- உச்சந்தலை ஆரோக்கியம்: இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையை ஆற்றும், பொடுகு மற்றும் வறட்சி போன்ற நிலைமைகளுக்கு உதவுகிறது.
- நிறத்தை மேம்படுத்துதல்: செம்பருத்திப் பொடியானது இயற்கையான முடியின் நிறத்தை மேம்படுத்துவதோடு ஆரோக்கியமான பிரகாசத்தையும் சேர்க்கும்.
சருமத்திற்கு செம்பருத்தி ஃபேஸ்பேக்:
தேவையான பொருட்கள்
- 1 டீஸ்பூன் செம்பருத்தி தூள்.
- 1 டேபிள் ஸ்பூன் தயிர்.
- தேன் மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர்.
வழிமுறைகள்
செம்பருத்திப்பூ பொடியை தயிர் (அல்லது தேன்) மற்றும் ரோஸ் வாட்டருடன் கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். இதை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த மாஸ்க் உலர்ந்த சருமத்தை வெளியேற்றி முகத்தை மிகவும் பிரகாசமாக்குகிறது.
இதய நோய், மாதவிடாய் கோளாறு, சிறுநீர் பிரச்சனை, உடல் சூடு, வயிற்றுப்புண், சிறுநீர் எரிச்சல், ரத்த சோகை, கருப்பை கோளாறு, பருவமடைவதில் பிரச்சனை, முடி உதிர்வு , இளநரை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. இந்த செம்பருத்தியை தினமும் பறித்து பயன்படுத்துவது சிரமமாக இருக்கிறது என்பவர்கள் செம்பருத்தி பொடியை எங்களிடம் வாங்கி பயன்படுத்தலாம்.
செம்பருத்திப்பூ பொடியை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
நீலி பிருங்காதி தைலம் – Neeli Bhringadhi Thailam
ஆயுர் வேத மருத்துவ முறையில் முடி உதிர்தலை கட்டுப்படுத்தி முடி வளர உதவும் எண்ணெயில் நீலிபிருங்காதி தைலத்துக்கு தனி இடம் உண்டு.
இதில் நீலி என்பது அவுரி பொடியையும், பிருங்காதி என்பது கரிசலாங்கண்ணி கீரையையும் குறிக்கும். இந்த இரண்டு பொருள்களோடு மேலும் சில பொருள்களை சேர்த்து இந்த தைலம் தயாரிக்கப்படுகிறது.
கூந்தல் பராமரிப்பின் ஒட்டு மொத்த பிரச்சனைகளையும் தீர்க்க உதவுவதால் இதை தினமும் தலைக்கு தேய்த்து வரலாம். ஆண்கள், பெண்கள் இருபாலருமே இதை பயன்படுத்தலாம். குளுமையான எண்ணெய் என்றாலும் இவை உடலுக்கு குளிர்ச்சி தராது. முடியின் வேர்வரை ஊடுருவி கூந்தலை காக்க கூடியது. இவை வெளிப்புற உபயோகத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வழுக்கையை தடுக்கும் அளவுக்கு நீலிபிருங்காதி தலைம் செயல்படுகிறது. இவை காலங்காலமாக கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பயன்படுத்தும் முறை
தினமும் காலையில் எழுந்ததும் கூந்தலை சிக்கில்லாமல் சீவி, பிறகு முடிக்கேற்ப ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் நீலி பிருங்காதி தைலத்தை எடுத்து விரல்களால் கூந்தலின் ஸ்கால்ப் பகுதியில் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும். தினமும் தவறாமல் செய்துவர வேண்டும். தொடர்ந்து ஆறுமாதங்கள் வரை செய்துவந்தாலே வழுக்கை விழுவது தவிர்க்கப்பட்டு முடி வளர்வதை பார்க்கலாம்.
உஷ்ணத்தால் கூந்தல் உதிர்வும் சகஜமாகிறது. தலைக்கு குளிக்கும் போது நீலிபிருங்காதி தைலத்தை கூந்தலில் தேய்த்து ஸ்கால்ப் முதல் நுனி வரை தடவி நன்றாக ஊறவிடவேண்டும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்தால் கூந்தல் உதிர்வு நிற்கும்.
கணினி துறையில் இருப்பவர்கள் நிச்சயம் கண் எரிச்சல், கண் வலி பிரச்சனையை கொண்டிருப்பார்கள். இந்த எண்ணெய் குளியலால் கண் சூடு, கண் எரிச்சலும் குறையும். உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைக்கும். கூந்தலை கருமையாகவும் பொலிவாகவும் வைக்க உதவும்.
கூந்தல் அடர்த்தியாக கருமையாக இருக்க இவை உதவும். கூந்தல் உதிர்வு அதிகரிக்காமல் பார்த்துகொள்ளும். முடிக்கு வேண்டிய ஊட்டச்சத்து கொடுக்கும். மிக முக்கியமாக இளவயதில் இதை பயன்படுத்தி வருவதன் மூலம் இளநரை மற்றும் வழுக்கை பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க முடியும்.
இந்த நீலிபிருங்காதி தைலத்தை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
Controls gray hair, dandruff, itchy scalp, hair loss and promotes hair growth.