Calcium

செம்பருத்தி பூ உலர்ந்தது – Hibiscus Flower Dried

Price range: ₹40.00 through ₹75.00

சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களூம் மருத்துவ பயன்கள் கொண்டது.  இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது.
கூந்தல் வளர்ச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது. செம்பருத்திப் பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.

செம்பருத்தி பூவின் சத்துக்கள்:

❖ இயற்கையான அமிலங்கள்
❖ இரும்பு
❖ பாஸ்பரஸ்
❖ கால்சியம்
❖ வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்

செம்பருத்தி இலைகளின் சத்துக்கள்:

❖ 2-3% புரதங்கள்
❖ இரும்பு
❖ கால்சியம்
❖ பாஸ்பரஸ்

செம்பருத்தி பயன்கள்:

❖ அழகு: தலைமுடி பராமரிப்பு, சரும பராமரிப்பு
❖ உணவு: தேநீர், சூப்கள், ஜெல்லி, சாலடுகள்
❖ மருத்துவம்: இரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு, காய்ச்சல் குணமாகும்.

செம்பருத்தி இதழ்கள் மற்றும் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளர் ஆக சுண்டும் வரை கொதிக்க வைத்து குடித்து வர இதயம் பலம் பெறுவதோடு மிகை ரத்த அழுத்தத்திற்கும் மிகச் சிறந்த மூலிகையாக உள்ளது.

உடலுக்கு :
உணவில் செம்பருத்திப் பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும்.
இருதயம் :
இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் ரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.
பெண்களுக்கு :
செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, மயக்கம் போன்றவை குறையும்.
கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் கரு உருவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்யாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.
செம்பருத்திப் பூ இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை – மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெய்யை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பத்திப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும். இது ஒரு சிறந்த கூந்தல் தைலம்.
இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். பெண்கள் வீட்டுக்கு விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை நெய்யில் வதக்கி உண்டால் குணப்படுத்தும்.
ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறையும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.
செம்பருத்திப் பூவை 250 கிராம், 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் அதனை பிசைந்து வரும் சாற்றோடு, சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி, காலை, மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.
செம்பருத்தி பூக்கள் கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்தும்
உலர் செம்பருத்தி பூக்கள் –  தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
Select options This product has multiple variants. The options may be chosen on the product page