Blood Circulation

Showing 1–12 of 14 resultsSorted by popularity

மருதம் பட்டை – Marudham Pattai

Price range: ₹30.00 through ₹145.00

மருதம் பட்டை சிறிது துவர்ப்பு சுவை உடையது. வைட்டமின் சி மருதம்பட்டையில் மிகுதியாக அடங்கி உள்ளது. மருதம் பட்டையை அரைத்துப் பொடியாகவும், மருதம் பட்டையை தண்ணீரில் ஊறவைத்து குடிநீராகவும் பயன்படுத்தலாம்.

🎀மருதம் பட்டை உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தருகிறது. குடல் தொடர்பான எல்லா நோய்களுக்கும் இது சிறந்த மருந்து என்று சொல்லலாம். மருதம் பட்டை குடிநீர் பயன்படுத்தினால் உடலில் ரத்தக்கொதிப்பு, இதய படபடப்பு, தூக்கமின்மை, நீரிழிவு பிரச்னை, கல்லீரல் பிரச்னை போன்றவைகள் கட்டுக்குள் வரும்.

🎀ஆன்டி ஆக்சிடென்ட் என்ற புத்துணர்வு தரும் சக்தி மருதம்பட்டையில் அதிகமாக இருக்கிறது. கல்லீரல், நுரையீரல், மார்பு, வாயில் ஏற்படும் புற்றுநோய்கள் போன்றவைகளை வராமல் தடுக்கும் திறன் மருதம் பட்டைக்கு உண்டு.

🎀மருதம் பட்டை – 200 கிராம், சீரகம் – 100 கிராம், சோம்பு – 100 கிராம், மஞ்சள் – 100 கிராம் அனைத்தையும் ஒன்றாக எடுத்து, நன்றாகப் பொடித்து தூள் செய்து வைத்திருந்து, தினமும் கொதிக்க வைத்த தண்ணீரில் 5 கிராம் அளவு தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குணமடையும்.

🎀தூக்கமின்மை, மன உளைச்சல், படபடப்பு நீங்க மருதம் பட்டை தூளுடன் சிறிது கசகசா வறுத்து அரைத்து பாலில் கலந்து அருந்தினால் மாற்றத்தை உணர முடியும்.

🎀ஹார்மோன் குறைபாடு, அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் போன்ற பிரச்னைகள் கொண்ட பெண்கள் மருதம் பட்டை கஷாயத்தைப் பயன்படுத்தலாம்.

🎀மருதம் பட்டை – 100 கிராம் அளவிலும், சீரகம் – 25 கிராம் அளவிலும் சேர்த்து கொதிக்கவைத்து ஆறிய நிலையில் குடிநீராக தினமும் குடித்து வந்தால் இதயம் வலுவாகும். மன அழுத்தம் நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும். இதன்மூலம் ரத்த குழாய்களில் கொழுப்பு அதிகமாக படிவதும் தடுக்கப்படும்.

நன்கு உலர்ந்த மருதம்பட்டையை மாவாக அரைத்து, அதை 5 கிராம் அளவு எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல், ஆஸ்துமா  தொந்தரவுகள் குறையும்.

அரை லிட்டர் நல்லெண்ணெய் அடுப்பில் கொதிக்க விட்டு அதில் 100 கிராம் மருதம்பட்டையை போட்டு கொதிக்கவிடவும். 30 நிமிடம் கொதித்த பிறகு ஆற விட்டு  அந்த எண்ணெய்யை முகவாதம், பக்கவாதம் ஏற்பட்ட இடத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். இந்த எண்ணெய்யை மூட்டுவலி,  இடுப்புவலி உள்ளவர்களும் பயன்படுத்தலாம்.

இந்த மருதம்பட்டையை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.

India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

 

Marutham bark helps to relax blood vessels and reduce blood flow resistance. 
This reduces blood pressure. 
Stimulates heart function
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

எட்டி விதை – Etti Seeds

Price range: ₹45.00 through ₹210.00
  • எட்டி விதையின் முக்கிய பயன்கள் என்று பார்த்தால் வாத நோய்கள், தோல் நோய்கள், வயிற்று உபாதைகள், தலைவலி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்ற நாட்பட்ட நோய்களுக்கு எட்டி விதை பயன்படுகின்றது.
  • எட்டி விதையை சுத்திகரித்து பொடி செய்து பயன்படுத்துவது மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்திற்கு ஒரு தீர்வாக அமைகிறது. மேலும், நரம்புகளை காக்கும் ஆற்றல், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல், ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் ஆற்றல் போன்ற நன்மைகளையும் எட்டி விதை கொண்டுள்ளது.
  • எட்டி விதையில் வாதத்தை போக்கும் பண்புகள் உள்ளது.
  • இது வாத நோய்களை சரி செய்ய பயன்படுகிறது.
  • மேலும் தோல் நோய்களுக்கு பயன்படுத்தலாம்.
  • வயிற்று உபாதைகளை குணப்படுத்தவும் எட்டி விதை உதவுகிறது.
  • எட்டி விதையை பயன்படுத்தி தலைவலியை குணப்படுத்தலாம்.
  • சுத்திகரிக்கப்பட்ட எட்டி விதை பொடி, மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்தை சரி செய்ய உதவுகிறது.
  • எட்டி விதையில் நரம்புகளை பாதுகாக்கும் பண்புகள் உள்ளன, இது உடலில் நரம்புகளை பலவீனமடையாமல் இருக்க உதவுகிறது. நரம்பு வலிகளுக்குப் பயன்படுகிறது.
  • எட்டி விதை ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சீர் செய்யும், இது இதய செயல் இழப்பின்போது ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.
  • எட்டி விதையை கோழி மலத்துடன் சேர்த்து வெறிநாய்க்கடிக்கு பயன்படுத்தலாம்.
எட்டி விதையை எவ்வாறு பயன்படுத்துவது..?
  1. மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்திற்கு:
  • எட்டி விதையை சுத்திகரித்து பொடி செய்து, 1 முதல் 2 சிட்டிகை அளவு எடுத்து, ஒரு நாளைக்கு மூன்று முறை மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து சாப்பிடலாம்.
  • எட்டி விதையை சந்தனக் கல்லில் சலம் விட்டு உரைத்து தலைவலிக்கு தடவலாம்.

எட்டி விதையின் எச்சரிக்கை:-

எட்டி விதையில் விஷத்தன்மை உள்ளதால், இதனை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். அதிக அளவு எட்டி விதையை உட்கொண்டால்  மனித உடலுக்கு விஷம் ஏற்படலாம்.

கொடிய விஷமுள்ள எட்டியில் மனித உடல் நலனுக்கான பல மருத்துவப் பொருள்களும் இருக்கின்றன. இது விஷம் என்பதால், மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எட்டி விதை – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

மஹாராஜா தைலம் – Maharaja Thailam

Price range: ₹115.00 through ₹195.00
மகாராஜா தைலம் பயன்கள்:
    • வலி நிவாரணம்:

      மூட்டு வலிகள், தசை வலி மற்றும் உடல் வலிகளைப் போக்க இந்த தைலம் உதவுகிறது. 

    • அழற்சி குறைப்பு:

      உடலின் அழற்சியைக் குறைத்து, வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 

  • நரம்பு மண்டல ஆரோக்கியம்:

    நரம்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நரம்பு தளர்ச்சி மற்றும் தொடர்புடைய பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. இது நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. 

  • தோல் ஆரோக்கியம்:

    சருமம் தொடர்பான பிரச்சனைகளான வறட்சி, அரிப்பு போன்றவற்றைக் குறைத்து, சருமத்தைப் பாதுகாக்கிறது. 

  • உடலின் சுழற்சியை மேம்படுத்துதல்:

    உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கி, ஒட்டுமொத்த உடல் நலத்தை மேம்படுத்துகிறது. 

பயன்படுத்தும் முறை: 

  • வெளிப்புறப் பயன்பாடு:
    இந்த தைலத்தை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மெதுவாகத் தடவி மசாஜ் செய்யலாம்.
  • அயோடின் தைலம் (Anu Thailam):
    சில சமயங்களில், முகத்தின் குறிப்பிட்ட நரம்பு பகுதிகளிலிருந்து வலி போக்கும் ஒரு வகையான தைலமாக இந்த மகாராஜா தைலம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை தைலம் சில நரம்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

PCR மகாராஜா தைலம், இயற்கை ஆயுர்வேத மருத்துவம், பயனுள்ள வலி நிவாரணம், நரம்பு தசைநார்கள் மற்றும் தசைகளுக்கு வலுவூட்டுகிறது, வயது முதிர்ச்சியினால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்கிறது, எலும்புகள் மற்றும் திசுக்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

கருப்பு கவுனி கஞ்சி மிக்ஸ் – Karuppu Gavuni Kanji Mix – 500 gms

Original price was: ₹130.00.Current price is: ₹120.00.

இது கருப்பு கவுனி அரிசி, காட்டு யானம் அரிசி, மிளகு, ஜீரகம், ராகி மற்றும் சுக்கு ஆகியவற்றின் கலவையாகும். நீரிழிவு மற்றும் புற்றுநோய் நோயாளிகளுக்கு சரியான கஞ்சி கலவையாகும்.

✍️ சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க தினமும் மதியம் மட்டும் கொஞ்சம் சாப்பிட்டு பாருங்கள் பிறகு தெரியும் இதன் பலன்.

✍️ புதிதாக திருமணம் ஆன ஆண்கள் இந்த கவுனி அரிசியை சாப்பிட்டால் நல்ல உடல் பலம் பெறலாம்.

✍️ இந்த அரிசியில் வடித்த சோற்று கஞ்சியை குடித்து வந்தால் குதிகால் வலி நீங்கும்.

✍️ இந்த கருப்பு அரிசி -யில் உள்ள ஆன்தோசயானின் என்ற நிறமி நமது இதயம், மூளை, மற்றும் இரத்த குழாய் செயல்பாடுகளை புத்துணர்ச்சியாய் வைக்க உதவுகிறது.

✍️ மேலும் கருப்பு அரிசியில் வைட்டமின் இ உள்ளதால் தோல் மற்றும் பார்வை சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

✍️ கருப்பு அரிசியில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகளவில் உள்ளது. இதனால் சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய்கள், உடல் எடை அதிகரிப்பு, கெட்ட கொழுப்பு போன்றவைகள் இருந்த இடம் தெரியாமல் போகும்.

✍️ அதிக நார்ச்சத்து உள்ளதால் செரிமான பிரச்சினை மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகும். மேலும் இரும்புச்சத்தும் இருப்பதால் நரம்புகளுக்கும் வலுவை கொடுக்கிறது.

✍️ இந்த கருப்பு அரிசியில் செய்த இனிப்பு பொங்கல் அவ்வளவு சுவையாக இருக்கும். செட்டிநாடு சமையல் விருந்துகளில் முதலிடத்தில் இந்த கருப்பு அரிசி பொங்கல் இருக்கும்.

 

கருப்பு கவுனி அரிசியின் பயன்கள்:

  • இதய ஆரோக்கியம்:

    கருப்பு கவுனி அரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகின்றன.

  • செரிமான ஆரோக்கியம்:

    இதில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

  • எடை மேலாண்மை:

    நார்ச்சத்து நிறைந்துள்ளதால், எடை மேலாண்மைக்கு உதவுகிறது.

  • நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பு:

    இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

  • உயர் ரத்த அழுத்தம்:

    கருப்பு கவுனி அரிசியை கஞ்சியாக எடுத்துக்கொள்வது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

  • சர்க்கரை நோயாளிகளுக்கு:

    கருப்பு கவுனி அரிசி கஞ்சி, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

🥣 கருப்பு கவுனி கஞ்சி
🌾 பயன்கள் (Karuppu Kavuni Rice Benefits)
1. உடல் சக்தி அதிகரிக்கும் – இயற்கை கார்போஹைட்ரேட்டுகள், புரதம் நிறைந்தது.
2. இரத்தசோகையை தடுக்கும் – இரும்புச்சத்து அதிகம்.
3. ஆண்டி-ஆக்ஸிடென்ட் – உடலை நச்சு பொருட்களிலிருந்து காக்கும்.
4. கண் ஆரோக்கியம் – ஆந்தோசயனின் சத்து கண் பார்வையை மேம்படுத்தும்.
5. எடை கட்டுப்பாடு – அதிக நார்ச்சத்து இருப்பதால் வயிறு நிறைவுணர்ச்சி தரும்.
6. மன அழுத்தம் குறைக்கும் – மக்னீசியம், பி விட்டமின்கள் அதிகம்.
ஊட்டச்சத்துக்கள்:
100 கிராம் கருப்பு கவுனி அரிசியில் கலோரி, கார்போஹைட்ரேட்டுகள், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் E போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன

இனிப்பு கஞ்சி செய்ய வேண்டுமானால் – பால், கருப்பட்டி / நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

💡 சிறிய டிப்ஸ்
இனிப்பு கஞ்சி செய்யும்போது பால் சேர்த்த பிறகு மீண்டும் அதிகமாக கொதிக்க விட வேண்டாம் – பால் பிளக்கும்.
குளிர்ந்த பிறகு கஞ்சி கெட்டியாகும், அப்போது சிறிது சூடான தண்ணீர் சேர்த்து மீண்டும் கலக்கலாம்.
குறிப்பு: உங்கள் இரத்தச் சர்க்கரை அளவு மற்றும் உடல்நிலையைப் பொறுத்து, உங்கள் உணவியல் நிபுணரிடம் ஒருமுறை ஆலோசனை பெற்றுக்கொள்வது எப்போதும் சிறந்தது.
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

கருங்காலி – Karungali

Price range: ₹40.00 through ₹175.00

கருங்காலி கட்டை பல நன்மைகளை வழங்குகிறது. இது நரம்புத் தளர்ச்சியை போக்கி புத்துணர்வு கொடுக்கும். உடலுக்கு வலிமைத்தரும் , குளிர்ச்சி தன்மை கொண்டது, பற்களுக்கு வலிமைவூட்டும்.  துவர்ப்புத் தன்மை மிக்கது.

கருங்காலி கட்டையின் பயன்கள்: 

இதனை பயன்படுத்த ரத்தம் தொடர்பான அனைத்து ஆரோக்கிய கேடும் நீங்கும். சர்க்கரையின் அளவு குறையும். இரும்புச்சத்து அதிகரிக்கும். ரத்தக் கொதிப்பு முற்றிலும் அகலும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும். சுவாச,காச நோய்கள் தீரும். குடிப்பழக்கம் சரியாகும். பல், ஈறுகளில் ரத்தக் கசிவு சீராகும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.

பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும். மாதவிடாய் கோளாறை சீராக்கி குழந்தை பாக்கியம் ஏற்படுத்தும். வெள்ளைப்படுதல், அதிக உதிர போக்கிற்கு சிறந்த மருந்தாகும்.

ஆண்களுக்கு உடல் பலமடையும்.

ஆண்மை பெருகும்.நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.

சித்தர்கள், முனிவர்கள் போன்றோர் தங்கள் பயன்பாட்டிற்கு கருங்காலி கட்டைகளை பயன்படுத்தியுள்ளனர். கருங்காலி கட்டை வீடுகளில் உலக்கை, மரப்பாச்சி பொம்மைகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. மேலும், கோவில்களில் கும்பாபிஷேகத்தின் போது கலசத்தின் உள்ளே வைக்கப்பட்டு, நல்ல ஆற்றலை ஈர்க்கிறது.

 

  • புத்துணர்வு:
    நரம்புத் தளர்ச்சியை போக்கி புத்துணர்வு அளிக்கிறது.
  • ஆற்றல்:
    பிரபஞ்சத்தில் உள்ள நல்ல ஆற்றலை ஈர்க்கிறது.
  • பயன்பாடு:
    சித்தர்கள், முனிவர்கள், குறி சொல்பவர்கள் போன்றோர் தங்களது பயன்பாட்டிற்கு கருங்காலி கட்டைகளை பயன்படுத்துகிறார்கள்.
  • வீட்டுப் பயன்பாடு:
    வீடுகளில் உலக்கை, மரப்பாச்சி பொம்மைகள் போன்றவற்றுக்கு கருங்காலி கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • கோவில் பயன்பாடு:
    கோவில்களில் கும்பாபிஷேகத்தின் போது கலசத்தின் உள்ளே கருங்காலி கட்டைகள் வைக்கப்படுகின்றன.

தொழில் கூடத்தில் வைத்து வழிபட்டால் தொழில் விருத்தி அடையும், லாபம் பெருகும். செல்வ வளமும், நிம்மதியும் நிலைக்கும். வாகனங்களில், கைப்பையில் வைக்க விபத்து ஏற்படாது. மாலையாக அணிந்து கொண்டு தியானம் மந்திர ஜபம் செய்ய காரிய சித்தி கிடைத்து வீட்டில் நிம்மதி, அமைதி நிலைக்கும். அன்னை வாராகி மற்றும் லட்சுமி நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

அஸ்வகந்தி லேகியம் – Aswaganthy Legiyam

Original price was: ₹220.00.Current price is: ₹205.00.
Weakness, Anemia, Blood disorder, Blood pressure, Amenorrhea
Add to cart

செம்பருத்தி பூ பொடி – Hibiscus Flower Powder

Price range: ₹60.00 through ₹500.00

செம்பருத்திப்பூ பொடி

 

செம்பருத்தி செடியின் காய்ந்த பூக்களில் இருந்து பெறப்பட்ட இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் அமிலங்கள் நிறைந்துள்ளன.

 

  • செம்பருத்திப் பொடியானது சருமத்தின் நிறத்தை சமன் செய்து, ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைத்து, சருமத்திற்கு மிகவும் சீரான மற்றும் பிரகாசமான தோற்றத்தைக் கொடுக்கும்.
  • இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், வறட்சியைத் தடுக்கவும் உதவும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது.
  • செம்பருத்திப் பொடியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தி, உறுதியான மற்றும் இளமைத் தோற்றத்திற்கு வழிவகுக்கும்.
  • முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது: செம்பருத்தி தூள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது மயிர்க்கால்களைத் தூண்டுகிறது மற்றும் விரைவான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
  • முடியை பலப்படுத்துகிறது: வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த, செம்பருத்தி பொடி முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்த உதவுகிறது, உடைப்பு மற்றும் பிளவுகளை குறைக்கிறது.
  • கண்டிஷனிங்: இது இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது, முடியின் மென்மையையும், பிரகாசத்தையும் அதிகரிக்கும் போது, ஃப்ரிஸ்ஸை குறைக்கிறது.
  • உச்சந்தலை ஆரோக்கியம்: இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையை ஆற்றும், பொடுகு மற்றும் வறட்சி போன்ற நிலைமைகளுக்கு உதவுகிறது.
  • நிறத்தை மேம்படுத்துதல்: செம்பருத்திப் பொடியானது இயற்கையான முடியின் நிறத்தை மேம்படுத்துவதோடு ஆரோக்கியமான பிரகாசத்தையும் சேர்க்கும்.

 

சருமத்திற்கு செம்பருத்தி ஃபேஸ்பேக்:
தேவையான பொருட்கள்
  • 1 டீஸ்பூன் செம்பருத்தி தூள்.
  • 1 டேபிள் ஸ்பூன் தயிர்.
  • தேன் மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர்.
வழிமுறைகள்

செம்பருத்திப்பூ பொடியை தயிர் (அல்லது தேன்) மற்றும் ரோஸ் வாட்டருடன் கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். இதை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த மாஸ்க் உலர்ந்த சருமத்தை வெளியேற்றி முகத்தை மிகவும் பிரகாசமாக்குகிறது.

இதய நோய், மாதவிடாய் கோளாறு, சிறுநீர் பிரச்சனை, உடல் சூடு, வயிற்றுப்புண், சிறுநீர் எரிச்சல், ரத்த சோகை, கருப்பை கோளாறு, பருவமடைவதில் பிரச்சனை, முடி உதிர்வு , இளநரை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. இந்த செம்பருத்தியை தினமும் பறித்து பயன்படுத்துவது சிரமமாக இருக்கிறது என்பவர்கள் செம்பருத்தி பொடியை எங்களிடம் வாங்கி பயன்படுத்தலாம்.

செம்பருத்திப்பூ பொடியை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

 

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

காட்டுச் சீரகம் – Kaattu Jeeragam

Price range: ₹50.00 through ₹180.00

காட்டுசீரகம் வயிறு உபாதைகள், உடல் பருமன், சயாடிகா என்று கூறப்படும் நரம்புகள் இழுத்து வலிக்கும் பிரச்சனை போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.

உடல் எடை குறைப்பு

உடலில் ஏற்படும் சிறுநீரக பிரச்சனையால் கால்கள் வீக்கத்தை குறைக்க ஒரு தேக்கரண்டி காட்டு சீரக சூரணம் எடுத்து, அதைத் தேனில் குழைத்து சாப்பிடலாம். சர்க்கரை நோய்  இருப்பவர்கள் தேன் சேர்க்காமல், வெந்நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். இது தைராய்டு சீராக சுரக்கவும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காட்டு சீரகத்தை மருந்தாக சாப்பிட்டு வரலாம். சிலருக்கு வயிறு மட்டும் பானை போல இருக்கும். வாயு தொந்தரவுகள் அதிகம் இருக்கும். இதுபோன்ற பிரச்னையை எதிர்கொள்ளும் மக்கள், காட்டு சீரகம் சூரணம் ஒரு சிட்டிகை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை பருகி வந்தாலே வயிறு குறைய ஆரம்பித்து வாயு பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அதோடு உடல் எடையும் குறையும்.

புற்றுநோய் தடுப்பு மருந்து

காட்டு சீரகத்துக்கு புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி உண்டு. ரத்த குழாய் சுருக்கம், ரத்த குழாய் அடைப்பு, வெரிகோஸ் வெயின் பிரச்சனைகள் என்று எல்லாவற்றுக்கும் இது தீர்வு தரக்கூடியதாக இருக்கிறது.

மூட்டு வலி கால்களில் வீக்கம் என்றால் காட்டு சீரகத்தை மருந்தாக எடுத்துக்கொள்ளும்போது ரத்த குழாய் மண்டலத்தின் ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தி, ரத்த குழாயின் பிரச்சனைகளைத் தீர்க்கிறது.

காட்டு சீரகத்தை தகுந்த மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்தாக எடுத்துக்கொள்வது தவறு. எனவே, உங்களுக்கு தெரிந்த ஆயுர்வேத மருத்துவரிடம் இதுபற்றிய ஆலோசனைகளை பெறுவது நல்லது.

 

இந்த காட்டு சீரகத்தை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

ஏல அரிசி – Eala arisi – cardamom seeds

Price range: ₹20.00 through ₹300.00
ஏல அரிசி
  • பல் வலியை சரிசெய்ய கூடியது.
  • வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது.
  • ​கண் பார்வையை அதிகரிக்கும்.
  • ​அஜீரணத்தை சரிசெய்யும்.
  • ​நீரிழிவை கட்டுக்குள் வைக்கும்.
  • ​சருமப் பொலிவுக்கு பயன்படும்.
  • வயிற்று கோளாறுகளை சரிசெய்யவல்லதும்.
  • பித்தத்தை சமன்படுத்த கூடியது.
  • உயர் ரத்த அழுத்தம், கொழுப்பை குறைக்கவல்லது.

வாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் வலி குறையும். வயிறு உப்புசம் சரியாகும். ரத்த ஓட்டம் சீராகும்.

கால் ஸ்பூன் காட்டு ஏல அரிசி, 3 லவங்கம் ஆகியவற்றை பொடித்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி, வாய் கொப்பளிப்பதன் மூலம் துர்நாற்றம் போகும். ஈறுகளில் ஏற்படும் வீக்கம் குறையும். பல் வலி சரியாகும். பல் சம்பந்தமான நோய்கள் சரியாகும்.

இதில் தேன் சேர்த்து சளி, இருமலுக்கான உள் மருந்தாக பயன்படுத்தலாம். இது வயிற்று வலியை போக்கும். வயிற்று புண்களை ஆற்றும்.

இது வயிற்று கோளாறை சரி செய்கிறது. ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதயத்தை ஒழுங்காக செயல்பட வைக்கிறது.

ஏல அரிசி, கிராம்பு, லவங்கப்பட்டை, மிளகு,சுக்கு, தாளிசபத்திரி, ஆரோ ரூட் மாவு போன்ற எளிய மூலிகைகள்  சேர்த்து ஏலாதி சூரணம் எனும் சித்த மருந்து தயாரிக்கப்படுகிறது.  நாட்பட்ட குடல்புண்ம, வயிறு எரிச்சல், அசீரணம், வாந்தி ,வாய்க்குமட்டல் உள்ளவர்கள் அவ்வப்போது இந்த மாத்திரையை அல்லது ஏலக்காயை  வாயிலிட்டு சுவைத்தாலும் நன்மை தரும்.

உணவில் சேர்த்துக்கொள்ள குடல்புண் ஏற்படாமல் தடுக்கும் தன்மையும், வயிறு குடல் பகுதியில் உள்ள சவ்வினை பாதுகாக்கும் தன்மையும் உடையது.

 

ஏல அரிசி – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

வரகு அரிசி – Varagu Rice

Original price was: ₹70.00.Current price is: ₹65.00.
வரகு அரிசியை உட்கொள்வதால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல், மூட்டுவலி, ரத்த ஓட்டம் சீராதல், மலச்சிக்கல் நீக்குதல், மாதவிடாய் கோளாறுகளை சரி செய்தல் போன்ற நன்மைகள் கிடைக்கின்றன. 

வரகு அரிசியின் பயன்கள்: 

  • சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல்:
    வரகு அரிசி ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் திறன் கொண்டது.
  • மூட்டுவலி:
    மூட்டுவலியைப் போக்க உதவுகிறது.
  • ரத்த ஓட்டம் சீராதல்:
    ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது.
  • மலச்சிக்கல்:
    மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
  • மாதவிடாய் கோளாறுகள்:
    மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.
  • கல்லீரல் செயல்பாடுகள்:
    கல்லீரலின் செயல்பாடுகளை தூண்டி, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை போக்க உதவுகிறது.
  • நிணநீர் சுரப்பிகள்:
    நிணநீர் சுரப்பிகளை சீராக்க உதவுகிறது.
  • கண் நோய்கள்:
    கண் புரை, கண் வீக்கம் போன்ற கண் நோய்களிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.

வரகு அரிசியை –  Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதி உள்ளது.

Add to cart

அயச்செந்தூரம் – Aya Chendooram

Original price was: ₹91.00.Current price is: ₹75.00.

அயச் செந்தூரம் என்பது ஒரு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். இது பல வகையான உடல்நல பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.

  • இது வாதம் பித்தம் கபம் போன்ற தோஷங்களை சமநிலைப் படுத்துகிறது.
  • பாண்டு இரத்த சோகை நோயை குணபடுத்த உதவுகிறது.
  • சோகை உடலில் இரத்த சத்து குறைபாட்டால் ஏற்படும் சோகை நோய்க்கு சிகிச்சை அளிக்கிறது.
  • நீராம்பல்…. உடலில் உள்ள நீர்க்கட்டிகள் மற்றும் வீக்கங்களை குறைக்க உதவுகிறது.
  • விந்து நஷ்டம்…. இரவில் விந்து வெளியேறுதல் உடலுறவில் விரைவில் விந்து வெளியாதல் போன்ற விந்து நஷ்டத்தை தடுக்கிறது.
  • வாதம் காரணமாக வரும் மூட்டுவலி தசை பிடிப்பு குளிர் தோல் வறட்சியில் மூட்டுவலியை குறைத்து தசை பிடிப்பை சரி செய்கிறது.
  • பித்தம் காரணமாக வரும் கண்கள் சிவத்தல் கோபம் அதிகபடியான தாகம் போன்ற நிலைகளில் கண்களின் சிவப்பு குறைத்து கோபத்தை கட்டுப்படுத்துகிறது.
  • கபம் காரணமாக வரும் சளி இருமல் உடல் பருமன் போன்ற நிலைகளில் சளி இருமலை குறைத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
  • பாண்டு காரணமாக வரும் சோகை சோர்வு தலை சுற்றல் போன்ற நிலைகளில் இரத்ததை சுத்தகரித்து சக்தியை அதிகரிக்கும்.
  • நீராம்பல் காரணமாக வரும் உடலில் நீர் தேங்குதல் வீக்கம் நீர்க்கட்டிகளை குறைத்து வீக்கத்தை குணப்படுத்துகிறது.
  • விந்து கோளாறால் வரும் இரவில் தூக்கத்தில் அதிகபடியான விந்து வெளியேறுதல் எந்த முயற்சியும் இன்றி தானாக விந்து வெளியேறுதல் உடலுறவில் தூரிதமாக விந்து வெளியேறுதல் போன்ற விந்து பற்றிய கோளாறுகளை குணப்படுத்துகிறது.

அயச் செந்தூரம் – இதை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Add to cart

அஸ்வகந்த பால லக்ஷாதி குளியல் தைலம் – Aswagandha Bala Lakshadhi Thailam

Original price was: ₹240.00.Current price is: ₹228.00.

எல்லா வகையான காய்ச்சல்களும், திரிதோஷத்தால் ஏற்படும் நோய்களும், கை, கால் எரிச்சல் – அனைத்தும் இவ்வெண்ணையை தேய்த்துக் குளித்தால் குறையும்.


A potent Ayurvedic oil blend containing ingredients like Ashwagandha, Bala, and Lakshadhi, known for their rejuvenating and nourishing properties. Safe to use as directed by a qualified Ayurvedic practitioner

Add to cart