Showing all 2 resultsSorted by popularity
நெருஞ்சில் பவுடர் – Nerunjil Powder
நெருஞ்சில் இலையில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை இருக்கின்றன. பாலியல் பிரச்னைகளையும், சிறுநீரகக் கோளாறுகளையும் நீக்கும் அருமருந்தாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஆயுர்வேதத்திலும், சீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் பெருமை வாய்ந்தது, நெருஞ்சில்.
சிறுநீரகம் தொடர்பான நோய்கள், கல்லீரல் பாதிப்புகள், சரும நோய்கள், ரத்தநாள பாதிப்புகள், இதயநோய்களுக்கு முக்கிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
சிறுநீர் தாரை நோய்கள் அத்தனையும் நீக்கும் குணம் வாய்ந்தது. நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது.
உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை யானை நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது. ஆனை நெருஞ்சில் மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல். இவைகளை தரும் . சாப்பிட்டுப்பார்த்தால் தான் தெரியும் அதன் வலிமை. நம்மிடையே இருக்கும் ஆண்மை பெருக்கி மருந்துகள் பல இன்னும் சரிவர பயன்படுத்தாமல் இருக்கிறது .
நெருஞ்சல் வித்தினைப் பாலில் புட்டவியல் செய்து உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை கொடுத்து வரத் தாது கட்டும்.
ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி குடி நீராகப் பயன்படுத்தலாம். 50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வடிதல், சிறு நீர் சொட்டாக வருதல் குணமாகும்.
நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பிற்கு நெருஞ்சில் காயையும், வேரையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு அதனுடன் பச்சரிசி கூட்டி கஞ்சி வைத்து அருந்தி வர குணமாகும். சிறு நெருஞ்சில் இலைகளைப் பறித்து வந்து, அதில் அரை லிட்டர் அளவு சாறெடுக்கவும். கீழாநெல்லி இலைகளைப் பறித்து அதிலும் அரை லிட்டர் சாறெடுக்கவும். இரண்டையும் ஒன்றாய்க் கலந்து, இதில் கால் கிலோ மஞ்சளை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவும். இத்துடன் சம அளவு சிறுபீளை வேர், சீந்தில் இலை, வில்வ இலை, தென்னம்பாளை அரிசி ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் கால் ஸ்பூன் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, சிறுநீரகங்களைப் பற்றிய நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு, சிறுநீரில் ரத்தம் வெளியாகுதல், சிறுநீரில் சீழ் உண்டாகுதல், சிறுநீர் அடிக்கடி கழிதல் சிறுநீரகச் செயற்பாடு குறைவு போன்ற குறைகள் நீங்கி, சிறுநீரகம் செழுமையாய் செயற்படும்.
இந்த மூலிகையை பொடியை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
கருஞ்சீரகம் – Karunjeeragam
₹30.00 – ₹130.00Price range: ₹30.00 through ₹130.00கருஞ்சீரகம் பலவிதமான மருத்துவ பயன்களைக் கொண்டுள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், உடலில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும், இதய நோய், புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்கவும் உதவுகிறது. கருஞ்சீரகம் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றவும், சிறுநீரக மற்றும் பித்தப்பைக் கற்களைக் கரைக்கவும் உதவுகிறது.
- சிறுநீரக மற்றும் பித்தப்பைக் கற்களைக் கரைக்கிறது:
ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை வெந்நீர், தேன் கலந்து பருகினால் சிறுநீரக மற்றும் பித்தப்பைக் கற்கள் கரையும்.
- சளி மற்றும் இருமலை நீக்குகிறது:
நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றவும், இருமலைக் கட்டுப்படுத்தவும் கருஞ்சீரகம் பயன்படுகிறது.
- சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது:
சர்க்கரை நோயாளிகள் தங்களது இரத்த சர்க்கரையின் அளவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், சர்க்கரை நோயை தடுக்கவும் கருஞ்சீரகம் உதவுகிறது.
- கல்லீரலைப் பாதுகாக்கிறது:
கருஞ்சீரகம் கல்லீரலைப் பாதுகாத்து, மூச்சுக்குழாய் தசைகளை விரிவுபடுத்தவும், மூச்சுத் திணறலைக் குறைக்கவும் உதவுகிறது.
- தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது:
கருஞ்சீரகம் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.
- உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது:
கருஞ்சீரகம் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்களையும் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேற்ற உதவுகிறது.
- ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது:
கருஞ்சீரகம் ரத்தம் சுத்திகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.
- எடை இழப்பிற்கு உதவுகிறது:
கருஞ்சீரகம் எடை இழப்பிற்கு உதவுகிறது.
- மூச்சுத்திணறல், இருமல் போன்ற சுவாச பிரச்சனைகளை மேம்படுத்துகிறது:
கருஞ்சீரகம் வாய்வழியாக எடுத்துக்கொள்ளும்போது மூச்சுத்திணறல், இருமல் போன்ற சுவாச பிரச்சனைகளை மேம்படுத்துகிறது.
- கருஞ்சீரகத்தை Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
இதை மருந்தாக எடுத்துகொள்ள நினைப்பவர்கள் சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுப்பது நல்லது. மேலும் உடலில் வேறு ஏதேனும் குறைபாடு, நோய் தீவிரம் குறித்தும் கலந்தாலோசிப்பது நல்லது.