Filter by price
By Brand
- 7006 Herbals 1
Annai AravindhAnnai Aravindh 1
Babaji HerbalsBabaji Herbals 3
DaburDabur 2
Dr. JRKDr. JRK 1
Dr's SidhhaDr's Sidhha 24
GJ Global HerbsGJ Global Herbs 2
GNGN 54
Gopalan AssanGopalan Assan 1
GurujiGuruji 1
HerbodayaHerbodaya 2
JKBJKB 2- JP Herbals 1
K.LK.L 1
Kaviraj PharmaceuticalsKaviraj Pharmaceuticals 2
KP NamboodiriKP Namboodiri 4
MalarMalar 3- Manthra 1
MantraMantra 15
MarthandamMarthandam 1
MedisiddhMedisiddh 10- MKV herbals 2
- Mukkudal 1
NagarjunaNagarjuna 2
Nagarjuna AyurvedhaNagarjuna Ayurvedha 10- PCR 1
- Raja Brand 2
RAKASRAKAS 72
Sakthi sivamSakthi sivam 3
Saravana HerbalsSaravana Herbals 1
SKM SIDDHASKM SIDDHA 70- Solaimalai 1
sri chamundeswarisri chamundeswari 1
Sri Kandha VillasSri Kandha Villas 1
vasuvasu 1
VELVEL 2- VHS 2
VSRVSR 1
Stock status
Showing 73–84 of 511 resultsSorted by latest
ஓமம் – Omam (Ajwain)
₹25.00 – ₹120.00Price range: ₹25.00 through ₹120.00ஓமத்தின் ஆரோக்கிய நன்மைகள்
ஓமம் உட்கொள்வதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
- தொப்பை கொழுப்பை (Belly fat) குறைப்பதிலும் எடை இழப்பிலும் இது பல வழிகளில் உதவுகின்றது.
- ஓமத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகள் அதிகம் உள்ளன.
- ஓமத்தில் உள்ள கூறுகள் செரிமானத்தை மேம்படுத்துகிறது, வாயுத்தொல்லை மற்றும் அமிலத்தன்மையை குறைக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்கிறது: ஓமத்தில் உள்ள தைமால் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: ஓமத்தில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.
வாயுத்தொல்லை, உடல் உப்பசம்: ஓமத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது வாயுத்தொல்லை, உப்பசம் மற்றும் உடல் வீக்கம் ஆகியவற்றை குறைக்க உதவுகின்றன.
வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலில் நிவாரணம்: ஓமத்தின் பயன்பாடு வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் என இரண்டிலிருந்தும் நிவாரணம் அளிக்க உதவுகிறது.
சீரான செரிமானம்: ஓமத்தில் தைமால் மற்றும் கார்க்ரூல் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. இது செரிமான சாறுகளின் சுரப்பை ஊக்குவித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நன்மை பயக்கும்: ஓமம் பற்கள் மற்றும் ஈறுகளுக்கும் நன்மை பயக்கும். ஓமத்தின் மூலம் வீங்கிய ஈறுகள் மற்றும் பல்வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கின்றது.
வயிற்று வலி மற்றும் அஜீரணத்தில் நிவாரணம்: ஓமத்தை உட்கொள்வதால் வயிற்று வலி, அஜீரணம், வாயுத்தொல்லை மற்றும் அமிலத்தன்மை ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கின்றது.
சுவாச பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்: ஓமம் சுவாச பிரச்சனைகள், ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும்: ஓமத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
ஓமத்தை பல வழிகளில் உட்கொள்ளலாம்.
இதை காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் பிற உணவுகளில் சேர்த்து சுவையையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
ஓமத்தை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அதை உணவில் சேர்க்கலாம், தண்ணீரில் கலந்து சாப்பிடலாம்.
ஓமத்தை – தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
எட்டி விதை – Etti Seeds
- எட்டி விதையின் முக்கிய பயன்கள் என்று பார்த்தால் வாத நோய்கள், தோல் நோய்கள், வயிற்று உபாதைகள், தலைவலி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்ற நாட்பட்ட நோய்களுக்கு எட்டி விதை பயன்படுகின்றது.
- எட்டி விதையை சுத்திகரித்து பொடி செய்து பயன்படுத்துவது மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்திற்கு ஒரு தீர்வாக அமைகிறது. மேலும், நரம்புகளை காக்கும் ஆற்றல், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல், ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் ஆற்றல் போன்ற நன்மைகளையும் எட்டி விதை கொண்டுள்ளது.
- எட்டி விதையில் வாதத்தை போக்கும் பண்புகள் உள்ளது.
- இது வாத நோய்களை சரி செய்ய பயன்படுகிறது.
- மேலும் தோல் நோய்களுக்கு பயன்படுத்தலாம்.
- வயிற்று உபாதைகளை குணப்படுத்தவும் எட்டி விதை உதவுகிறது.
- எட்டி விதையை பயன்படுத்தி தலைவலியை குணப்படுத்தலாம்.
- சுத்திகரிக்கப்பட்ட எட்டி விதை பொடி, மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்தை சரி செய்ய உதவுகிறது.
- எட்டி விதையில் நரம்புகளை பாதுகாக்கும் பண்புகள் உள்ளன, இது உடலில் நரம்புகளை பலவீனமடையாமல் இருக்க உதவுகிறது. நரம்பு வலிகளுக்குப் பயன்படுகிறது.
- எட்டி விதை ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சீர் செய்யும், இது இதய செயல் இழப்பின்போது ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.
- எட்டி விதையை கோழி மலத்துடன் சேர்த்து வெறிநாய்க்கடிக்கு பயன்படுத்தலாம்.
- மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்திற்கு:
- எட்டி விதையை சுத்திகரித்து பொடி செய்து, 1 முதல் 2 சிட்டிகை அளவு எடுத்து, ஒரு நாளைக்கு மூன்று முறை மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து சாப்பிடலாம்.
- எட்டி விதையை சந்தனக் கல்லில் சலம் விட்டு உரைத்து தலைவலிக்கு தடவலாம்.
எட்டி விதையின் எச்சரிக்கை:-
கொடிய விஷமுள்ள எட்டியில் மனித உடல் நலனுக்கான பல மருத்துவப் பொருள்களும் இருக்கின்றன. இது விஷம் என்பதால், மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எட்டி விதை – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
ஏல அரிசி – Eala arisi – cardamom seeds
₹20.00 – ₹300.00Price range: ₹20.00 through ₹300.00- பல் வலியை சரிசெய்ய கூடியது.
- வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது.
- கண் பார்வையை அதிகரிக்கும்.
- அஜீரணத்தை சரிசெய்யும்.
- நீரிழிவை கட்டுக்குள் வைக்கும்.
- சருமப் பொலிவுக்கு பயன்படும்.
- வயிற்று கோளாறுகளை சரிசெய்யவல்லதும்.
- பித்தத்தை சமன்படுத்த கூடியது.
- உயர் ரத்த அழுத்தம், கொழுப்பை குறைக்கவல்லது.
வாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் வலி குறையும். வயிறு உப்புசம் சரியாகும். ரத்த ஓட்டம் சீராகும்.
கால் ஸ்பூன் காட்டு ஏல அரிசி, 3 லவங்கம் ஆகியவற்றை பொடித்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி, வாய் கொப்பளிப்பதன் மூலம் துர்நாற்றம் போகும். ஈறுகளில் ஏற்படும் வீக்கம் குறையும். பல் வலி சரியாகும். பல் சம்பந்தமான நோய்கள் சரியாகும்.
இதில் தேன் சேர்த்து சளி, இருமலுக்கான உள் மருந்தாக பயன்படுத்தலாம். இது வயிற்று வலியை போக்கும். வயிற்று புண்களை ஆற்றும்.
இது வயிற்று கோளாறை சரி செய்கிறது. ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதயத்தை ஒழுங்காக செயல்பட வைக்கிறது.
ஏல அரிசி, கிராம்பு, லவங்கப்பட்டை, மிளகு,சுக்கு, தாளிசபத்திரி, ஆரோ ரூட் மாவு போன்ற எளிய மூலிகைகள் சேர்த்து ஏலாதி சூரணம் எனும் சித்த மருந்து தயாரிக்கப்படுகிறது. நாட்பட்ட குடல்புண்ம, வயிறு எரிச்சல், அசீரணம், வாந்தி ,வாய்க்குமட்டல் உள்ளவர்கள் அவ்வப்போது இந்த மாத்திரையை அல்லது ஏலக்காயை வாயிலிட்டு சுவைத்தாலும் நன்மை தரும்.
உணவில் சேர்த்துக்கொள்ள குடல்புண் ஏற்படாமல் தடுக்கும் தன்மையும், வயிறு குடல் பகுதியில் உள்ள சவ்வினை பாதுகாக்கும் தன்மையும் உடையது.
ஏல அரிசி – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
அக்ரகாரம் – Agrakaram
₹35.00 – ₹140.00Price range: ₹35.00 through ₹140.00பல் பிரச்சனைகள் தீரும்
சிறிது அக்கரகாரத்தை அரைத்து, அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இது கால் லிட்டர் அளவு ஆனவுடன், அதை எடுத்து ஆற வைத்து கொள்ள வேண்டும். தினமும் அதில் சிறிதளவு வாயில் போட்டு அதக்கிக் கொண்டு, சிறிது நேரம் கழித்து கொப்பளிக்கவும். இதுபோன்று, தினமும் இரண்டு முறைகள் வீதம், மூன்று நாட்கள் கொப்பளித்து வந்தால் வாய் புண், தொண்டைப் புண், பல் வலி போன்ற பாதிப்புகள் விலகும்.
காய்ச்சலை கட்டுபடுத்தும்
அக்காரகாரம், அதி மதுரம், சுக்கு மற்றும் சித்தரத்தை சேர்த்து அரைத்து, பேரிச்சம் பழ விழுதைக் கலந்து தேன் சேர்த்து கொள்ள வேண்டும். கடும் காய்ச்சல் மற்றும் குளிர் காய்ச்சல் உள்ள நேரங்களில், நம் உடலில் உள்ள நீர்ச்சத்து எல்லாம் ஆவியாகி விடும். இதனால் நா வறட்சி ஏற்படும். அப்போது இந்த அரைத்த விழுதை சிறிதளவு நாக்கில் தடவினால், நாவில் ஏற்பட்ட வறட்சி நீங்கி, உமிழ்நீர் சீராக சுரக்க ஆரம்பிக்கும், காய்ச்சலும் குறைய ஆரம்பிக்கும்.
தொண்டை பிரச்சனைகள் தீர்க்கும்
அக்கரகார சூரணத்துடன் இந்துப்பு கலந்து, புளித்த நீர் அல்லது எலுமிச்சை சாறு விட்டு நன்கு அரைத்து, அதை உள் நாக்கில் தடவி வந்தால், தொண்டைக் கட்டிக்கொண்டு பேச முடியாமல், தண்ணீர் பருக முடியாமல், உணவு உண்ண முடியாமல் இருப்பவர்கள் அந்த பாதிப்புகள் விரைவில் நீங்கி நலம் பெறுவார்கள்.
குரலின் இனிமை கூடும்
அக்கரகாரம், அதி மதுரம் மற்றும் கரிசலாங்கண்ணி ஆகிய இம்மூன்று மருந்துகளையும் தனித்தனியே இடித்துத் தூளாக்கி, பின்னர் அவற்றை சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து காலை நேரங்களில் தினமும் சாப்பிட்டு வந்தால் குரலின் இனிமை கூடும்.
மயக்கத்தை போக்கும்
திடீரென மயங்கி விழுந்து பற்கள் கட்டிக் கொண்டவர்களுக்கு, அக்கிரகார சூரணத்தை, மூக்கில் வழியாக செலுத்தினால், உடனே மயக்கம் விலகி, சுய நினைவை அடைவார்கள். காக்கா வலிப்பு வியாதியும் சரியாகும்.
மலச்சிக்கலை தீர்க்கும்
நா வறட்சி ஏற்படும் சமயங்களில் சிலருக்கு, மலச்சிக்கல் ஏற்படும். அதற்கு மேற்சொன்ன அக்கரகார தேன் மருந்தில், கடுக்காய் சூரணம் சேர்த்து பயன்படுத்தினால் நாவறட்சி நீங்கி மலச்சிக்கல் தீரும்.
வாய் பிரச்சனைகளை தீர்க்கும்
சிலருக்கு உள்நாக்கு வளர்ந்து, பேச முடியாமல் தொண்டை கட்டிக்கொண்டு வலிக்கும். அப்படிப்பட்டவர்கள் சிறு அக்கரகார வேர்த் துண்டை, வாயில் போட்டுக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கி வந்தால், தொண்டை உள்நாக்கு பாதிப்பு, குரல் கம்முவது, அதீத தாகம் போன்றவை சரியாகும்.
மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்
உடலின் சீரான இயக்கத்துக்கும், மனதின் ஆற்றலுக்கும் கட்டுப்பாட்டு மையமாக விளங்கும் மூளையானது சரியாக இயங்காவிட்டால், சரியாக சிந்திக்க முடியாது, ஞாபக மறதி அதிகரிக்கும், மேலும் உடலில் சோர்வு உண்டாகும். இதற்கு அக்கரகார வல்லாரை மருந்து உதவி புரியும். அக்கரகாரம், வல்லாரை மற்றும் பூனைகாலி இவை மூன்றையும் சமமாக கலந்து தினமும், இருவேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், மூளையின் செயல்பாடு சீராகும். மேலும் உடலின் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து, சிந்திக்கும் திறனை மேம்படும்.
Disclaimer:
The content provided here is for informational purposes only. Pondy Herbals is not intended to substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of a qualified healthcare provider for any questions or concerns you may have regarding a medical condition. Pondy Herbals does not endorse or recommend any specific tests, physicians, procedures, opinions, or other information mentioned on the site.
பற்படாகம் – Parpadagam
₹20.00 – ₹35.00Price range: ₹20.00 through ₹35.00• காய்ச்சலுக்கு சிறந்த சிகிச்சை. தைராய்டு நோய்க்கு சிகிச்சை அளிக்கிறது. இதயத் துடிப்பைக் குறைக்கிறது. PMS அறிகுறிகளை விடுவிக்கிறது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது. மூக்கில் இரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இருமல் மற்றும் நெரிசலைக் குறைக்கிறது. கவலையை குறைக்கிறது மற்றும் தூக்கமின்மையை நீக்குகிறது.
பேய்ப்புடல் – Pei pudal
₹30.00 – ₹60.00Price range: ₹30.00 through ₹60.00பேய் புடல் மலேரியா போன்ற கடுமையான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் உடலுக்கு போதுமான வலிமையை அளிக்கிறது.
பேய் புடல் என்ற மூலிகை காய்ச்சல், தொண்டை வலி, இருமல், சளி, வாந்தி, தூக்கம் போன்றவற்றை குணப்படுத்தவும் பயன்படுகிறது.
மரிக்கொழுந்து – Marikozhundhu
மூலிகை சாம்பிராணி – Mooligai Sambirani
சாம்பிராணி தூபம் போடுவதால்,வீடு மட்டும் கடைகளில் உள்ள அனைத்து இடங்களில் உள்ள கெட்ட காற்றை அகற்றும் மேலும் விஷ ஜந்துக்களை அண்ட விடாமல் வெளியேற்றும் ,எதிர்மறை எண்ணங்களை குறைக்கும். மழை காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை குறையாமல் அதிகரிக்கும். தெய்வீக மூலிகை சாம்பிராணி தூபம்.
புங்கம்பட்டை – Pungam Pattai
₹20.00 – ₹40.00Price range: ₹20.00 through ₹40.00புங்கை மரத்தின் பட்டை எண்ணெய் விட்டு காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்ட புண்களின் மீது தடவி வர புண்கள் வெகுவாக ஆறும்.
வேம்பாளம் பட்டை – Vembalam Pattai
₹40.00 – ₹80.00Price range: ₹40.00 through ₹80.00வேம்பாளம் பட்டை பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கிறது. தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகள், நரம்பு சுருட்டல், படுக்கைப் புண்கள் மற்றும் சரும வடுக்கள் ஆகியவற்றிற்கு இது ஒரு தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது.
-
- முடி உதிர்தல், உடைதல், இளநரை, பொடுகு, பேன் தொல்லை மற்றும் அரிப்பு போன்ற கூந்தல் பிரச்சனைகளுக்கு வேம்பாளம் பட்டை உதவுகிறது.
- வேம்பாளம் பட்டை எண்ணெயை தலைமுடிக்கு தடவுவதால், கூந்தல் நீளமாக, அடர்த்தியாக வளர உதவுகிறது.
- முடி உதிர்தல், உடைதல், இளநரை, பொடுகு, பேன் தொல்லை மற்றும் அரிப்பு போன்ற கூந்தல் பிரச்சனைகளுக்கு வேம்பாளம் பட்டை உதவுகிறது.
- முடி உதிர்தல் மற்றும் உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ந்து வைத்திருக்கவும் உதவுகிறது.
- வேம்பாளம் பட்டை எண்ணெயை தலை மற்றும் மூக்கின் மீது தடவுவதால் மன அமைதி கிடைக்கிறது.
- சரும வடுக்கள், தீக்காயங்கள், சரும தொற்றுகள் மற்றும் அழற்சி போன்ற சரும பிரச்சனைகளுக்கு வேம்பாளம் பட்டை ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.
- ‘வெரிகோஸ் வெயின்’ எனப்படும் நரம்பு சுருட்டல் பாதிப்பு மற்றும் படுக்கைப் புண்களுக்கும் வேம்பாளம் பட்டையை பயன்படுத்தலாம்.
- வேம்பாளம் பட்டை எண்ணெய் தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு அளிக்கும். தலை மற்றும் மூக்கின் மீது எண்ணெயை தடவுவதால் மன அமைதி கிடைக்கும், நிம்மதியான தூக்கம் வரும்.
முடி சார்ந்த பிரச்சனைகளான முடி உதிர்தல், உடைதல், இளநரை, பொடுகு, பேன் தொல்லை மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வேம்பாளம் பட்டை சிறந்த தீர்வாகும். இது தவிர, ‘வெரிகோஸ் வெயின்’ எனப்படும் நரம்பு சுருட்டல் பாதிப்பு, படுக்கைப் புண்கள் மற்றும் சரும வடுக்கள் போன்றவற்றிற்கும் வேம்பாளம் பட்டை சிறந்த தீர்வாகும்.
வேம்பாளம் பட்டை சிவப்பு வண்ண இயற்கை நிறமூட்டியாக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
இதை இயற்கை அழகுப் பொருட்கள் தயாரிப்பில் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்தப் பட்டை சரும தொற்றுகள் வராமல் தடுக்கக் கூடியது. இதன் அழற்சி எதிர்ப்புத் தன்மை, தீக்காயங்களை விரைவாக ஆற்றும். சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்புகளையும் குணப்படுத்தும்.
வேம்பாளம் பட்டைப் பொடியை, வெண்ணெய்யுடன் கலந்து அழற்சி மற்றும் தீக்காயங்கள் உள்ள இடங்களில் பூசிவந்தால் விரைவாக குணமடையும். வேம்பாளம் பட்டை, பெருங்காயம் கருஞ்சீரகம் ஆகியவற்றை பொடித்து, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து காயங்களின் மேல் பற்று போட்டு வந்தால் அவை விரைவாக ஆறும்.
வேம்பாளம் பட்டையை – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
கஸ்தூரி மேத்தி – Kasthuri Methi
₹30.00 – ₹60.00Price range: ₹30.00 through ₹60.00சருமத்தில் உள்ள கறைகள் மற்றும் தடிப்புகள், இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகள்,
இரத்த குளுக்கோஸ் அளவுகள் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றைக்
குறைப்பதில் இது பயனுள்ளதாக இருக்கும்.
கல்பாசி – Kalpaasi
₹50.00 – ₹100.00Price range: ₹50.00 through ₹100.00-
-
செரிமான ஆரோக்கியம்:
-
- செரிமான நொதிகளைத் தூண்டி, செரிமான செயல்முறையை சீராக்க உதவுகிறது.
-
- வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாந்தி, வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.
-
-
சிறுநீரக ஆரோக்கியம்:
- சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
-
நோய் எதிர்ப்பு சக்தி:
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
-
சமையல் பயன்பாடு:
- இந்திய சமையலறைகளில், குறிப்பாக செட்டிநாடு உணவுகளில், சுவை மற்றும் நறுமணத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
-
பிற பயன்கள்:
- ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பல ஆரோக்கிய நன்மைகள் பயன்படுத்தப்படுகின்றன.
- கல்பாசி என்பது பாறைகள் மற்றும் மரக்கிளைகளில் வளரும் ஒரு வகை பூஞ்சை ஆகும்.
- இது இரண்டு உயிரினங்கள் இணைந்து வாழும் ஒரு கூட்டு வாழ்க்கை முறையாகும்.
- இதற்கு “ஸ்டோன் ஃப்ளவர்” (Stone Flower) அல்லது “கறி மசாலா ஜாமான்” (kari masala jaman) என்றும் பெயர்.
கல்பாசி – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.