Shop

எருக்கம் கட்டை/சமித்து/வேர் – Erukkam Kattai/samithu/ver

Original price was: ₹45.00.Current price is: ₹40.00.

எருக்கம் சமித்து (எருக்கங்குச்சி) ஹோமங்களில் பயன்படுத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த பொருளாகும், இது முக்கியமாக எதிரி பயத்தை நீக்கவும், தீராத நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. சூரியனுக்கு உகந்ததாகக் கருதப்படும் இந்த சமித்து, எதிர்மறை ஆற்றல்களை அழித்து, ஆரோக்கியத்தையும் மன தைரியத்தையும் தருவதாக நம்பப்படுகிறது.

எருக்கம் சமித்து ஹோமத்தின் முக்கிய பலன்கள்:
  • எதிரி பயம் நீங்கும்: எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், சதித் திட்டங்கள் மற்றும் பயம் நீங்க எருக்கம் சமித்து கொண்டு ஹோமம் செய்யப்படுகிறது.
  • வியாதி நாசினி: நாள்பட்ட நோய்கள், தோல் வியாதிகள் மற்றும் உடல் உபாதைகளைக் குணப்படுத்த எருக்கங்குச்சி ஹோமம் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
  • சனி தோஷ நிவர்த்தி: ஜாதகத்தில் உள்ள சனி தோஷம் மற்றும் பில்லி, சூன்யம் போன்றவற்றுக்கு நிவாரணமாக இது கருதப்படுகிறது.
  • வெற்றி மற்றும் தைரியம்: மன தைரியத்தை அதிகரிக்கவும், காரியங்களில் வெற்றி பெறவும் இது உதவும்.

 

பூஜைக்காக உபயோக படுகிறது.

 

Used for pooja purpose

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

அத்தி விதை – Athi vidhai

Original price was: ₹25.00.Current price is: ₹20.00.

அத்தி விதைகள் (Figs/Anjeer seeds) இரும்புச்சத்து, நார்ச்சத்து, மற்றும் பொட்டாசியம் நிறைந்தது. இவை இரத்த சோகையை குணமாக்கவும், இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கவும், மலச்சிக்கலை நீக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும், உடல் சோர்வை நீக்கி, தாது விருத்திக்கும், சிறுநீரக கற்கள் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களைக் குறைக்கவும் உதவுகின்றது.

 

அத்தி விதைகளின் முக்கிய பயன்கள்:
    • இரத்த சோகை மற்றும் சோர்வு: அத்தி விதையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால், இது இரத்த சோகையைக் குறைத்து புதிய இரத்த அணுக்களை உருவாக்கி, உடலில் உள்ள அசதி மற்றும் சோர்வை நீக்குகிறது.
    • மலச்சிக்கல் நீக்கம்: நார்ச்சத்து நிறைந்த அத்தி விதைகள், செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்துகின்றன
      .
  • தாது விருத்தி: ஆண்மை பலம் அதிகரிக்கவும், விந்தணுக்களை கெட்டிப்படுத்தவும், பெண்களுக்கு ஏற்படும் பலக்குறைவை நீக்கவும் அத்தி விதை உதவுகிறது.
  • இதய ஆரோக்கியம்: பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து காரணமாக, இவை இரத்த அழுத்தத்தை சீராக்கி, கொழுப்பைக் குறைத்து, இதய நோய்களைத் தடுக்கின்றன.
  • சிறுநீரக ஆரோக்கியம்: சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க அத்தி விதை பொடி பயன்படுகிறது.
  • பொதுவான ஆரோக்கியம்: இது உடல் எடையை சீராக வைக்கவும், வைட்டமின் A மற்றும் C மூலம் சருமத்தை பொலிவாக்கவும், எலும்புகளை வலுவாக்கவும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை:
அத்தி விதைகளை நேரடியாக உண்ணலாம், அல்லது காயவைத்து பொடி செய்தும் பயன்படுத்தலாம். பாலுடன் கலந்து சாப்பிடுவது தாது விருத்திக்கு உகந்தது.

அத்தி விதைகளை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
Add to cart

அதிவிடயம் – Athividayam

Original price was: ₹160.00.Current price is: ₹150.00.

1. இது உடல் எடையைக் குறைக்கப் பயன்படுகிறது.

2. செரிமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

3. இந்த வேர் உடலின் நச்சு அளவை கணிசமாகக் குறைக்கிறது.

4. காயங்களை சிறப்பாக குணப்படுத்தவும் இது உதவுகிறது.

5. அதிவிடயம் வேர் இருமல், சளி, காய்ச்சலுக்கு ஒரு நல்ல தீர்வாகும்.

6. இந்த தாவர வேர் உடலின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

7. இது வீக்கத்தைக் குறைக்கிறது.

8. இரத்தப்போக்குக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

9. இந்த மூலிகை ஆண்மை மற்றும் பாலியல் சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும் பயன்படுகிறது

சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவற்றுக்கு 
இது சிறந்த மருந்தாகும்.
Add to cart

அஷ்ட பந்தன மருந்து – Ashtabandhana marundhu

Price range: ₹120.00 through ₹240.00
  • அஷ்டபந்தனம் = அஷ்ட + [பந்தனம்]
  • அஷ்டபந்தனம் –  சுக்கான்கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நற்காவி ஆகிய எட்டுப் பொருட்களைக் கொண்டு செய்த சாந்து.
  • சிலை, விக்கிரகங்கள் அசைவின்றியிருக்கும்படி அவற்றை நிறுவும்போது அவற்றின் அடியிடத்துச் சாத்தப்படும் எட்டுப் பொருட்களைக் கொண்டு செய்த கலவைச் சாந்து.
  • ஒரு பீடத்தின்மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, `அஷ்ட பந்தன மருந்து’ சாத்துவார்கள்.
  • இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும்.
  • கோவில்களில் கடவுள் சிலைகளை பிரதிஷ்டை செய்ய பயன்படுகிறது.
  • It is used to consecrate idols of gods in temples.
  • Ashtabandhanam is the process of affixing an icon to its pedestal (peetham) with a clay-like paste made of 8 specific herbs mixed with wood lac, limestone powder, resin, red ochre, beeswax and butter.

 

அஷ்ட பந்தன மருந்து –  தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

அஞ்சன கல் – Anjana Kal

Price range: ₹30.00 through ₹90.00

அஞ்சனக்கல் – லை, ‘சுர்மா கல்’ என்றும் அழைப்பார்கள். இந்தக் கல் பஞ்சாப், ஆந்திரா, தென் தமிழகத்திலும் கிடைக்கிறது. இவை இலகுவாக உடையும் தன்மையை உடையது. ஆனால், தண்ணீரில் கரையாது.

அஞ்சனக் கல்லை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்கி வந்தீர்கள் என்று சொன்னால் எந்த விதமான துர்சக்திகள் உங்கள் வீட்டிற்குள் அண்டாது.

அஞ்சனக்கல் பன்னீர் விட்டு இழைத்து கண்புருவங்கள் ,கண் பட்டை,லலாட மத்தி என்று அழைக்கப்படும் நடு நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ள நெற்றிக்கண் எனப்படும் புருவப்பூட்டு 90 நாட்களில் திறக்கும்.

கண்களிலும், புருவத்திலும் ஆண்கள், பெண்கள் இருவருமே இதை பயன்படுத்துகிறார்கள். அழகுக்காக மட்டுமில்லாமல், இந்த அஞ்சனக்கல்லை பயன்படுத்துவது கண்களுக்கு குளிர்ச்சியை கொடுப்பதாகும். அதுமட்டுமின்றி, வசீகரத்தை ஏற்படுத்தக்கூடியது. இமைகளும், புருவங்களும் நீளமாக வளர்வது மட்டுமில்லாமல், கருமையாகவும் இருக்கும்.

அஞ்சனக்கல் (Antimony stone) என்பது சித்தர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு அதிசயக் கல், இது கண்களுக்கு மை தீட்டவும் (கண் மை), தலைமுடி வளர்ச்சிக்கும், நெற்றியில் பொட்டு வைக்கவும், ஆன்மீக ரீதியாக மனதை ஒருமுகப்படுத்தவும் பயன்படுகிறது; இது “சுர்மா கல்” என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இதன் தூளை துளசி, பூண்டு, நல்லெண்ணெய் போன்றவற்றுடன் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால் முடி வளர்ச்சியைத் தூண்டும், நெற்றியில் இடும்போது மூன்றாவது கண் திறக்க (Third Eye) உதவும்.
🌿 அஞ்சனக்கல்லின் பயன்கள் (Benefits of Anjanakal): கண் ஆரோக்கியம் (Eye Health): 👉 கண் மை (Kohl/Surma) தயாரிக்கப் பயன்படுகிறது, இது கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும்.
👉 முடி வளர்ச்சி (Hair Growth): அரைத்த அஞ்சனக்கல்லை துளசி, பூண்டு, நல்லெண்ணெயுடன் கலந்து தலைமுடி வேர்களில் பூசுவதன் மூலம் முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.
👉 ஆன்மீகப் பலன்கள் (Spiritual Benefits): நடு நெற்றியில் (Ajna Chakra) அஞ்சனக்கல் பொட்டு வைத்தால், புருவப்பூட்டு (Third Eye) திறக்கும்; இதனால் மன ஒருமைப்பாடும், சிந்தனைத் தெளிவும் அதிகரிக்கும். சித்தர்கள் இதை தந்திர வித்தைகளுக்கும், நினைத்ததை நிறைவேற்றவும் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.
🌿 பயன்படுத்தும் முறை (How to Use): 👉 தலைமுடிக்கு: கல்லை கழுவி, அரைச்செண்ணெயில் பிசைந்து பொடியாக்கி, துளசி, பூண்டு சேர்த்து அரைத்து, நல்லெண்ணெயுடன் கலந்து தலைமுடி வேர்களுக்குப் பூசி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
👉 நெற்றியில்: அஞ்சனக்கல்லை பன்னீரில் இழைத்து, நெற்றியில் பொட்டாக வைக்கலாம், இது நெற்றிக்கண்ணைத் திறக்க உதவும்.
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

எலுமிச்சை தோல் – Lemon Peel

Original price was: ₹25.00.Current price is: ₹20.00.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது, 
கொலஸ்ட்ராலைக் குறைப்பதன் மூலம், உடல் எடையைக் குறைக்கிறது.
  • எலுமிச்சம் பழத்தின் தோலை செடிகளின் அடியிலும், தோட்டத்திலும் ஆங்காங்கே போட்டு வைப்பதால் அதன் அழுகிய வாசனையை தாங்க முடியாமல் எறும்புகள், கொசு மற்றும் அசுவினிப் பூச்சிகளை நெருங்க விடாமல் விரட்ட உதவும். எலுமிச்சம் தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைத்து தோட்டத்தில் தூவி விட்டால், மண்ணில் உள்ள அமிலத் தன்மையின் அளவு சமன்படும்.

 

  • எலுமிச்சம் தோலை நறுக்கி தண்ணீரில் இரண்டு நாட்கள் ஊற வைத்துப் பின் தோலை கசக்கி, நசுக்கிப் பிழிந்தெடுத்து விட்டு, அந்த நீரை நேரடியாக செடிகளுக்கு திரவ உரமாக ஊற்றலாம். அதிலுள்ள வைட்டமின் மற்றும் பிற ஊட்டச் சத்துக்கள் செடிகள் செழித்து வளர உதவும்.

 

  • எலுமிச்சம் தோலை சிறு சிறு தட்டுகளில் பரத்தி  தோட்டத்தில் ஆங்காங்கே வைக்கலாம். இதன் அசிடிட்டி கலந்த வாசனை பட்டாம் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். இதனால் தோட்டத்துப் பூக்களிடையே மகரந்தச் சேர்க்கை நல்ல முறையில் நடைபெறும். தோட்டத்தில் அவ்வப்போது நாம் நடந்து செல்கையில் மற்ற பூக்களின் வாசனையுடன் லெமன் வாசனையும் கலந்து மனதை அமைதிப்படுத்தி ஸ்ட்ரெஸ் குறைய உதவும்.

 

  • கம்போஸ்ட் உரம் தயாரிக்க வைத்திருக்கும் கொள்கலனில் எலுமிச்சை தோல்களை உரமாக்கி சேர்க்கும்போது, கிடைக்கும் உரம் கெட்ட வாசனையின்றி, ஒரு நறுமணமுள்ளதாக இருக்கும்.

 

  • எலுமிச்சை தோலைக் காயவைத்து பொடி செய்து  சிறு பைகளில் வைக்க, அவை வைக்கும் இடங்கள் வாசனையாக இருக்கும். இது வீட்டை இயற்கை முறையில் நறுமணம் சேர்க்கும் வழி.

புற்றுநோய்க்குச் சொல்லலாம் `கெட் அவுட்

ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும்!

மலச்சிக்கல் வராமல் தடுக்கும்!

கண்களின் ஆரோக்கியம் காக்கும்!

காயங்களை விரைவாகக் குணப்படுத்தும்!

இயற்கையான டியோடரன்ட்!

முகப்பருவைப் போக்கும்!

கொசு லார்வாக்களை அழிக்கும்!

Add to cart

ஆவாரம் பட்டை – Aavaram Pattai

Original price was: ₹40.00.Current price is: ₹35.00.

பட்டை கஷாயம் சாப்பிட சருமத்திற்கு ஒளி தரும். நீரிழிவுத் தீரும். இதன் பூவைக் கூட்டுச் செய்துச் சாப்பிட மூத்திர சம்பந்தமான நோய்கள் குணமாகும். வெள்ளை வெட்டைத் தீரும். குளிர்ச்சியைத் தரும்.

மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து அதை தண்ணீரில் போட்டு காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.

சருமத்தில் வீக்கம் இருந்தால் பட்டை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கப்பட்டு சுத்தம் செய்து வந்தால் படிப்படியாக வீக்கம் குறைக்கும்.

ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.

ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.

ஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.



இதன் கஷாயம் நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Add to cart

அரச விதை – Arasa vidhai

Original price was: ₹35.00.Current price is: ₹30.00.
  • மலச்சிக்கல் தீர அரச விதைகளைக் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் (1 ஸ்பூன்) அளவு எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.
  • வைட்டமின் பி, ஆன்டிஆக்ஸிடன்ட், இரும்புச்சத்து,  துத்தாநாகம், மக்னீசியம் ஆகிய  சத்துக்கள் உள்ளன.
  • ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும். ஆண் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, உயிரணு குறைபாடுகளை நீக்க உதவுகிறது.
  • மலட்டுத் தன்மையை நீக்கும்.
  • நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
  • உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

 

அரச விதை – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Add to cart

எட்டி விதை – Etti Seeds

Original price was: ₹30.00.Current price is: ₹25.00.
  • எட்டி விதையின் முக்கிய பயன்கள் என்று பார்த்தால் வாத நோய்கள், தோல் நோய்கள், வயிற்று உபாதைகள், தலைவலி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்ற நாட்பட்ட நோய்களுக்கு எட்டி விதை பயன்படுகின்றது.
  • எட்டி விதையை சுத்திகரித்து பொடி செய்து பயன்படுத்துவது மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்திற்கு ஒரு தீர்வாக அமைகிறது. மேலும், நரம்புகளை காக்கும் ஆற்றல், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல், ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் ஆற்றல் போன்ற நன்மைகளையும் எட்டி விதை கொண்டுள்ளது.
  • எட்டி விதையில் வாதத்தை போக்கும் பண்புகள் உள்ளது.
  • இது வாத நோய்களை சரி செய்ய பயன்படுகிறது.
  • மேலும் தோல் நோய்களுக்கு பயன்படுத்தலாம்.
  • வயிற்று உபாதைகளை குணப்படுத்தவும் எட்டி விதை உதவுகிறது.
  • எட்டி விதையை பயன்படுத்தி தலைவலியை குணப்படுத்தலாம்.
  • சுத்திகரிக்கப்பட்ட எட்டி விதை பொடி, மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்தை சரி செய்ய உதவுகிறது.
  • எட்டி விதையில் நரம்புகளை பாதுகாக்கும் பண்புகள் உள்ளன, இது உடலில் நரம்புகளை பலவீனமடையாமல் இருக்க உதவுகிறது. நரம்பு வலிகளுக்குப் பயன்படுகிறது.
  • எட்டி விதை ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சீர் செய்யும், இது இதய செயல் இழப்பின்போது ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.
  • எட்டி விதையை கோழி மலத்துடன் சேர்த்து வெறிநாய்க்கடிக்கு பயன்படுத்தலாம்.
எட்டி விதையை எவ்வாறு பயன்படுத்துவது..?
  1. மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்திற்கு:
  • எட்டி விதையை சுத்திகரித்து பொடி செய்து, 1 முதல் 2 சிட்டிகை அளவு எடுத்து, ஒரு நாளைக்கு மூன்று முறை மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து சாப்பிடலாம்.
  • எட்டி விதையை சந்தனக் கல்லில் சலம் விட்டு உரைத்து தலைவலிக்கு தடவலாம்.

எட்டி விதையின் எச்சரிக்கை:-

எட்டி விதையில் விஷத்தன்மை உள்ளதால், இதனை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். அதிக அளவு எட்டி விதையை உட்கொண்டால்  மனித உடலுக்கு விஷம் ஏற்படலாம்.

கொடிய விஷமுள்ள எட்டியில் மனித உடல் நலனுக்கான பல மருத்துவப் பொருள்களும் இருக்கின்றன. இது விஷம் என்பதால், மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எட்டி விதை – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Add to cart

ஏல அரிசி – Eala arisi – cardamom seeds

Price range: ₹20.00 through ₹300.00
ஏல அரிசி
  • பல் வலியை சரிசெய்ய கூடியது.
  • வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது.
  • ​கண் பார்வையை அதிகரிக்கும்.
  • ​அஜீரணத்தை சரிசெய்யும்.
  • ​நீரிழிவை கட்டுக்குள் வைக்கும்.
  • ​சருமப் பொலிவுக்கு பயன்படும்.
  • வயிற்று கோளாறுகளை சரிசெய்யவல்லதும்.
  • பித்தத்தை சமன்படுத்த கூடியது.
  • உயர் ரத்த அழுத்தம், கொழுப்பை குறைக்கவல்லது.

வாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் வலி குறையும். வயிறு உப்புசம் சரியாகும். ரத்த ஓட்டம் சீராகும்.

கால் ஸ்பூன் காட்டு ஏல அரிசி, 3 லவங்கம் ஆகியவற்றை பொடித்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி, வாய் கொப்பளிப்பதன் மூலம் துர்நாற்றம் போகும். ஈறுகளில் ஏற்படும் வீக்கம் குறையும். பல் வலி சரியாகும். பல் சம்பந்தமான நோய்கள் சரியாகும்.

இதில் தேன் சேர்த்து சளி, இருமலுக்கான உள் மருந்தாக பயன்படுத்தலாம். இது வயிற்று வலியை போக்கும். வயிற்று புண்களை ஆற்றும்.

இது வயிற்று கோளாறை சரி செய்கிறது. ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதயத்தை ஒழுங்காக செயல்பட வைக்கிறது.

ஏல அரிசி, கிராம்பு, லவங்கப்பட்டை, மிளகு,சுக்கு, தாளிசபத்திரி, ஆரோ ரூட் மாவு போன்ற எளிய மூலிகைகள்  சேர்த்து ஏலாதி சூரணம் எனும் சித்த மருந்து தயாரிக்கப்படுகிறது.  நாட்பட்ட குடல்புண்ம, வயிறு எரிச்சல், அசீரணம், வாந்தி ,வாய்க்குமட்டல் உள்ளவர்கள் அவ்வப்போது இந்த மாத்திரையை அல்லது ஏலக்காயை  வாயிலிட்டு சுவைத்தாலும் நன்மை தரும்.

உணவில் சேர்த்துக்கொள்ள குடல்புண் ஏற்படாமல் தடுக்கும் தன்மையும், வயிறு குடல் பகுதியில் உள்ள சவ்வினை பாதுகாக்கும் தன்மையும் உடையது.

 

ஏல அரிசி – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

அக்ரகாரம் – Agrakaram

Price range: ₹35.00 through ₹140.00

பல் பிரச்சனைகள் தீரும்

சிறிது அக்கரகாரத்தை அரைத்து, அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இது கால் லிட்டர் அளவு ஆனவுடன், அதை எடுத்து ஆற வைத்து கொள்ள வேண்டும். தினமும் அதில் சிறிதளவு வாயில் போட்டு அதக்கிக் கொண்டு, சிறிது நேரம் கழித்து கொப்பளிக்கவும். இதுபோன்று, தினமும் இரண்டு முறைகள் வீதம், மூன்று நாட்கள் கொப்பளித்து வந்தால் வாய் புண், தொண்டைப் புண், பல் வலி போன்ற பாதிப்புகள் விலகும்.

காய்ச்சலை கட்டுபடுத்தும்

அக்காரகாரம், அதி மதுரம், சுக்கு மற்றும் சித்தரத்தை சேர்த்து அரைத்து, பேரிச்சம் பழ விழுதைக் கலந்து தேன் சேர்த்து கொள்ள வேண்டும். கடும் காய்ச்சல் மற்றும் குளிர் காய்ச்சல் உள்ள நேரங்களில், நம் உடலில் உள்ள நீர்ச்சத்து எல்லாம் ஆவியாகி விடும். இதனால் நா வறட்சி ஏற்படும். அப்போது இந்த அரைத்த விழுதை சிறிதளவு நாக்கில் தடவினால், நாவில் ஏற்பட்ட வறட்சி நீங்கி, உமிழ்நீர் சீராக சுரக்க ஆரம்பிக்கும், காய்ச்சலும் குறைய ஆரம்பிக்கும்.

தொண்டை பிரச்சனைகள் தீர்க்கும்

அக்கரகார சூரணத்துடன் இந்துப்பு கலந்து, புளித்த நீர் அல்லது எலுமிச்சை சாறு விட்டு நன்கு அரைத்து, அதை உள் நாக்கில் தடவி வந்தால், தொண்டைக் கட்டிக்கொண்டு பேச முடியாமல், தண்ணீர் பருக முடியாமல், உணவு உண்ண முடியாமல் இருப்பவர்கள் அந்த பாதிப்புகள் விரைவில் நீங்கி நலம் பெறுவார்கள்.

குரலின் இனிமை கூடும்

அக்கரகாரம், அதி மதுரம் மற்றும் கரிசலாங்கண்ணி ஆகிய இம்மூன்று மருந்துகளையும் தனித்தனியே இடித்துத் தூளாக்கி, பின்னர் அவற்றை சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து காலை நேரங்களில் தினமும் சாப்பிட்டு வந்தால் குரலின் இனிமை கூடும்.

மயக்கத்தை போக்கும்

திடீரென மயங்கி விழுந்து பற்கள் கட்டிக் கொண்டவர்களுக்கு, அக்கிரகார சூரணத்தை, மூக்கில் வழியாக செலுத்தினால், உடனே மயக்கம் விலகி, சுய நினைவை அடைவார்கள். காக்கா வலிப்பு வியாதியும் சரியாகும்.

மலச்சிக்கலை தீர்க்கும்

நா வறட்சி ஏற்படும் சமயங்களில் சிலருக்கு, மலச்சிக்கல் ஏற்படும். அதற்கு மேற்சொன்ன அக்கரகார தேன் மருந்தில், கடுக்காய் சூரணம் சேர்த்து பயன்படுத்தினால் நாவறட்சி நீங்கி மலச்சிக்கல் தீரும்.

வாய் பிரச்சனைகளை தீர்க்கும்

சிலருக்கு உள்நாக்கு வளர்ந்து, பேச முடியாமல் தொண்டை கட்டிக்கொண்டு வலிக்கும். அப்படிப்பட்டவர்கள் சிறு அக்கரகார வேர்த் துண்டை, வாயில் போட்டுக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கி வந்தால், தொண்டை உள்நாக்கு பாதிப்பு, குரல் கம்முவது, அதீத தாகம் போன்றவை சரியாகும்.

மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்

உடலின் சீரான இயக்கத்துக்கும், மனதின் ஆற்றலுக்கும் கட்டுப்பாட்டு மையமாக விளங்கும் மூளையானது சரியாக இயங்காவிட்டால், சரியாக சிந்திக்க முடியாது, ஞாபக மறதி அதிகரிக்கும், மேலும் உடலில் சோர்வு உண்டாகும். இதற்கு அக்கரகார வல்லாரை மருந்து உதவி புரியும். அக்கரகாரம், வல்லாரை மற்றும் பூனைகாலி இவை மூன்றையும் சமமாக கலந்து தினமும், இருவேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், மூளையின் செயல்பாடு சீராகும். மேலும் உடலின் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து, சிந்திக்கும் திறனை மேம்படும்.

 

Disclaimer:

The content provided here is for informational purposes only. Pondy Herbals is not intended to substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of a qualified healthcare provider for any questions or concerns you may have regarding a medical condition. Pondy Herbals does not endorse or recommend any specific tests, physicians, procedures, opinions, or other information mentioned on the site.

Tags: Akarkara enhances fertility, and improves libido in men, Benefits Akrakaram Root, Buy Agrakaram root online, Buy Akarkara root online, Buy akkaragaram ver online, Buy Ayurvedic medicine for impotency, buy herbal dried online, Buy herbal medicine for men, Buy nattumarunthu online, Buy pure Akrakaram ver online, Buy Spanish Chamomile online, Common name of akrakara, Health benefits of akrakaram ver online, increase spermatozoa count, Treats Impotency & Erectile Dysfunction, uses of akrakara ver online, Where to buy Akarkara root online

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

பற்படாகம் – Parpadagam

Price range: ₹20.00 through ₹35.00

• காய்ச்சலுக்கு சிறந்த சிகிச்சை. தைராய்டு நோய்க்கு சிகிச்சை அளிக்கிறது. இதயத் துடிப்பைக் குறைக்கிறது. PMS அறிகுறிகளை விடுவிக்கிறது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது. மூக்கில் இரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இருமல் மற்றும் நெரிசலைக் குறைக்கிறது. கவலையை குறைக்கிறது மற்றும் தூக்கமின்மையை நீக்குகிறது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page