Showing 337–348 of 471 resultsSorted by popularity
ஜாதிக்காய் பவுடர் – Jaathikkai Powder
Excellent remedy for impotence, diarrhoea, indigestion and insomnia.ஜாதிக்காய் – Jaathikkai
Excellent remedy for impotence, diarrhoea, indigestion and insomnia.லவங்க பட்டை – Cinamon
₹20.00 – ₹40.00Price range: ₹20.00 through ₹40.00Cinnamon bark calms depression, anxiety, and depression. Controls menstrual problems in women.
Prevents blood clotting.
Cinnamon helps keep blood sugar levels stable in type 2 diabetics.லவங்கம் பட்டை பொடி – Cinamon Powder
எலுமிச்சை தோல் – Lemon Peel Dry
எலுமிச்சை தோல் பொடி – Lemon Peel Powder
- சருமம்:எலுமிச்சை தோல் பொடி முகப்பரு, கரும்புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் நிறமைகளை குறைக்க உதவுகிறது.
- வாய்வழி சுகாதாரம்:வாய் துர்நாற்றம் மற்றும் ஈறு பிரச்சனைகளுக்கு இது இயற்கையான தீர்வாக செயல்படுகிறது.
- நோயெதிர்ப்பு சக்தி:வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.
- இதய ஆரோக்கியம்:இது இதய நோய்க்கான ஆபத்தை குறைக்க உதவுகிறது.
- புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்:எலுமிச்சை தோல் பொடி புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.
- முகப்பருக்களுக்கு:எலுமிச்சை தோல் பொடி, அரிசி மாவு, பால் கலந்த ஒரு பேஸ்ட்டை செய்து முகத்தில் தடவி, 15-20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம்.
- வாய்வழி துர்நாற்றத்தை போக்க:எலுமிச்சை தோல் பொடியை சூடான நீரில் கலந்து வாய் கொப்புளிக்கலாம்.
- சருமத்தை மென்மையாக்க:எலுமிச்சை தோல் பொடியை கற்றாழை ஜெல் கலந்த ஒரு பேஸ்ட்டை செய்து முகத்தில் தடவலாம்.
- கரும்புள்ளிகளை குறைக்கிறது மற்றும் தோல் வயதானதை எதிர்த்துப் போராடுகிறது.
- உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் எலுமிச்சை தோலை காயவைத்த பொடியை தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட, உடல் எடை நாளடைவில் குறைய தொடங்கும்.
- இது பெருங்குடல், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும்.
- பற்கள், எலும்புகளுக்கு வலு சேர்க்கும் கால்சியம் மற்றும் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் ஈறு தொடர்பான பிரச்னைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
- கரோட்டினாய்டுகள் அதிகமாக உள்ளதால் இவை கண்களை பாதுகாக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளவும் உதவும்.
எலுமிச்சை தோல் பொடியை – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
எலும்பு ஒட்டி இலை – Elumbu Otti leaf
எலும்பொட்டி இலையின் அற்புத மருத்துவ பலன்கள்…
எலும்பொட்டி செடியை அனைவருமே வீட்டில் வளர்க்கலாம். சுக்குநூறாக உடைந்த எலும்பை கூட சேர்க்கும் ஆற்றல் நிறைந்தது இந்த எலும்பொட்டி இலைகள். கை, கால், இடுப்பு எலும்புகளில் வீக்கம், வலி, மூட்டுத்தேய்மானத்தால் ஏற்படும் வலி, குதிங்கால் வலி போன்றவற்றுக்கு மிகவும் நல்லது
இந்த எலும்பொட்டி இலைகளை எடுத்து அரைத்து பாலில் கலந்து குடிக்கலாம். அல்லது இந்த இலைகளை அரைத்து ஒரு சிறிய உருண்டைகளாக உருட்டி தினமும் சாப்பிட்டு வர எலும்பினால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்,
மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகித்த மூலிகை தான் அருகாம்பச்சை என்றும், சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி. இதன் இலைகள் முருங்கை இலைகள் போல, சின்னதாக தண்டுகளில் இணைந்து காணப்படும். இந்த செடியில் மஞ்சள் நிறத்தில் பூவும் பூக்கும். இதன் இலைகள், வேர்கள், காய்கள் அனைத்தும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது.
மருத்துவ பயன்கள்:
இந்த இலைக்கு எலும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றலும் உண்டு. முதுகு தண்டு பாதிப்பை குணமாக்கும்முதுகுத்தண்டுவட வலி மற்றும் முதுகு வலி பாதிப்புகளையும் இது குணமாக்கும். சிறுநீர் கழிக்கும் போது வரும் எரிச்சலைப்போக்கும். சிறுநீர்த்தாரை அடைப்பை சரியாக்கும். கருப்பை பாதிப்புகளையும் அகற்றும். இந்த இலைகளுக்கு மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மையும் உண்டு. மன அழுத்தத்தினால் உருவாகும் நரம்பு பாதிப்புகளை குணப்படுத்தி ரத்தத்தை தூய்மைப்படுத்தி வயிற்றுப் புழுக்களை அழிக்கும்.
பெண்களுக்கு மாதவிலக்கில் ஏற்படும் இரத்தப் போக்கு பாதிப்புகளை சரி செய்யும். உடல் சூட்டையும் போக்கும். மேலும் அதனால் ஏற்படும் வாத உடல் வலி, வயிற்று வலியையும் போக்கும். சுளுக்கைக், கூட இந்த இலை.போக வைத்துவிடும். மூலவியாதி, உடல் அணுக்களை பாதிக்கும் புற்றுவியாதி ஆகியவற்றையும் சரி செய்யும். சுவாச பாதிப்பை போக்கும்.
இந்த இலைகளை பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, கீரையைப் போல் கடைந்து உணவில் சேர்த்து சாப்பிடலாம். இதனால் மூட்டு வலி, சிறுநீர்ப்பை அடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை ஓடிவிடும்.
கோரை கிழங்கு – Korai Kizhangu Raw
கோரை கிழங்கு பவுடர் – Korai kilangu Powder
அமுக்கரா (அசுவகந்தி) – Amukkara Raw
₹35.00 – ₹70.00Price range: ₹35.00 through ₹70.00அமுக்கரா (அசுவகந்தி) பொடி – Amukkara Powder
Amukkura improves sexual health and sperm count for men.
Reduces internal heat and boosts weight.
அதிமதுரம் – Athimathuram Raw
₹45.00 – ₹210.00Price range: ₹45.00 through ₹210.00அதிமதுரம்
குரலில் சிறிதும் பிசிறு இல்லாமல், மதுரமான ஒலியை வழங்க உதவும் அதிமதுரம், பித்த, கப நோய்களுக்கான கசப்பில்லா இன்சுவை மருந்து!
இலேசான மஞ்சள் நிறத்தில், கடுமையான வாசனையுடன் உள்ள இதில் கால்சியம், கிளைசிரைசின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளன. அதிமதுரம் சக்திவாய்ந்த மூலிகைகளில் ஒன்றாகும், இது அழற்சியைக் குறைத்தல், முகப்பருக்களை எதிர்த்துப் போராடுதல், சருமத்தை பிரகாசமாக்குதல் மற்றும் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுதல் உள்ளிட்ட நன்மைகளை சருமத்திற்கு வழங்குகிறது.
ஹைப்பர்பிக்மென்டேஷனுக்குச் சிகிச்சையளிக்கிறது
இது ஒரு தோல் பிரச்சினையாகும், இதன் காரணமாகத் தோலில் கருமையான திட்டுகள் அல்லது புள்ளிகள் உருவாகின்றன, இது தோலின் நிறம் மற்றும் அமைப்பைச் சீரற்றதாக மாற்றும். அதிமதுர சாறு நிறமிகளை மாற்றியமைக்கும் அதிசயத்தைச் செய்து, சூரிய ஒளி அல்லது ஹார்மோன் மாற்றங்களால் உருவாகும் மெலஸ்மாவையும் குறைக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் அதிமதுரப் பொடியைப் பூசுவதால், இயற்கையாகவே கரும்புள்ளிகள் மற்றும் திட்டுகள் மறைந்து, உங்கள் சருமத்தைப் பிரகாசமாக்கும்.
சூரிய ஒளியின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது
சூரிய ஒளியில் தொடர்ந்து இருப்பதால் சருமம் கருப்பதோடு, வயது முதிர்ந்த தோற்றமும் ஏற்படும். அதிமதுரத்தில் கிளாப்ரிடின் என்ற பைட்டோ கெமிக்கல் கலவை உள்ளது, இது நிறமாற்றத்தைத் தவிர்க்க உதவுகிறது மற்றும் சருமத்தின் நிறத்தையும் அமைப்பையும் மேம்படுத்துகிறது.
தழும்புகளை குணப்படுத்துகிறது
அதிமதுர சாற்றில் உள்ள சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் குணப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்துகிறது. இது வீக்கம் மற்றும் சிவத்தல் ஆகியவற்றைக் குறைக்கிறது மற்றும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் சருமம் விரைவாக குணமடைகிறது.
அழற்சியைக் குறைக்கிறது
அதிமதுரத்தின் இயற்கையான சரும தணிப்பு விளைவு அழற்சியைக் குறைக்க உதவுகிறது. கிளைசிரைசின் நிறைந்துள்ள அதிமதுரம் சிவத்தல், எரிச்சல் மற்றும் வீக்கம் ஆகியவற்றைக் குறைக்கும்.
கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
அதிமதுரம் மூலிகைப் பொடியைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் உச்சந்தலையில் இரத்த ஓட்டம் மேம்படுகிறது மற்றும் மயிர்க்கால்களுக்கு முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் வேர்களை வளர்ச்சியடைய செய்கிறது. இது கூந்தல் உதிர்வதைத் தடுக்கவும், முடியை நிலைநிறுத்தவும் உதவுகிறது, கூந்தலைப் பளபளப்பாகவும் வலுவானதாகவும் மாற்றுகிறது.
வீட்டு மருந்தாக: அதிமதுரம், அக்கரகாரம், சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கம் ஆகியவற்றைப் பொடித்து நாட்டுச் சர்க்கரை, தேன் கலந்து செய்யப்படும் ‘அதிமதுர ரசாயனம்’ பருவமழைக் காலத்துக்கே உரித்தான மருந்து. கீச்…கீச்… எனக் குரலுடைந்து பேசுபவர்களுக்கும் கம்பீரக் குரலை விரைவில் வழங்கும்.
புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும்.
சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம். சைனஸ் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம்.
இந்த மூலிகையை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.