Showing 121–132 of 471 resultsSorted by popularity
அஷ்ட பந்தன மருந்து – Ashtabandhana marundhu
₹250.00 – ₹310.00Price range: ₹250.00 through ₹310.00- அஷ்டபந்தனம் = அஷ்ட + [பந்தனம்]
- அஷ்டபந்தனம் – சுக்கான்கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நற்காவி ஆகிய எட்டுப் பொருட்களைக் கொண்டு செய்த சாந்து.
- சிலை, விக்கிரகங்கள் அசைவின்றியிருக்கும்படி அவற்றை நிறுவும்போது அவற்றின் அடியிடத்துச் சாத்தப்படும் எட்டுப் பொருட்களைக் கொண்டு செய்த கலவைச் சாந்து.
- ஒரு பீடத்தின்மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, `அஷ்ட பந்தன மருந்து’ சாத்துவார்கள்.
- இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும்.
- கோவில்களில் கடவுள் சிலைகளை பிரதிஷ்டை செய்ய பயன்படுகிறது.
- It is used to consecrate idols of gods in temples.
- Ashtabandhanam is the process of affixing an icon to its pedestal (peetham) with a clay-like paste made of 8 specific herbs mixed with wood lac, limestone powder, resin, red ochre, beeswax and butter.
அஷ்ட பந்தன மருந்து – தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
ஆவாரம் பட்டை – Aavaram Pattai
ஆவாரம் பட்டை கஷாயம் சாப்பிட சருமத்திற்கு ஒளி தரும். நீரிழிவுத் தீரும். இதன் பூவைக் கூட்டுச் செய்துச் சாப்பிட மூத்திர சம்பந்தமான நோய்கள் குணமாகும். வெள்ளை வெட்டைத் தீரும். குளிர்ச்சியைத் தரும்.
மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து அதை தண்ணீரில் போட்டு காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.
சருமத்தில் வீக்கம் இருந்தால் பட்டை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கப்பட்டு சுத்தம் செய்து வந்தால் படிப்படியாக வீக்கம் குறைக்கும்.
ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.
ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆவாரம் பட்டையை நீரில் இட்டுக் காய்ச்சிக் காலை தோறும் வாய் கொப்பளிக்கப் பயன்படுத்துவதால் வாய்ப்புண்கள் எவ்விதமானதாயினும் விரைவில் ஆறிவிடும்.
ஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.
இதன் கஷாயம் நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அரச விதை – Arasa vidhai
₹30.00 – ₹75.00Price range: ₹30.00 through ₹75.00அரசவிதை (Ficus religiosa seeds) மருத்துவ குணம் கொண்ட ஒரு விதை ஆகும். இதை பொடியாக்கி பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
- மலச்சிக்கல் தீர அரச விதைகளைக் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் (1 ஸ்பூன்) அளவு எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.
- வைட்டமின் பி, ஆன்டிஆக்ஸிடன்ட், இரும்புச்சத்து, துத்தாநாகம், மக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன.
- ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும். ஆண் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, உயிரணு குறைபாடுகளை நீக்க உதவுகிறது.
- மலட்டுத் தன்மையை நீக்கும்.
- நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
- உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
- பசிதூண்டி. மலச்சிக்கல், குரல்வளம், தேக பலத்திற்கு சிறந்தது.
சில தகவல்களின்படி, அரச விதை பொடியை சூடான நீரில் அல்லது பாலில் கலந்து குடித்தால் பசியை தூண்டும் என்று கூறப்படுகிறது. சில மூலிகை மருத்துவ குறிப்புகளில், அரச விதை பொடியை தேனுடன் கலந்து சாப்பிடுவது, தாது பலத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
பயன்படுத்தும் முறை :
சூடான நீர்/ பசும்பால் உடன் 1/2 தேக்கரண்டி காலை/ மாலை கலந்து பருகலாம் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளவும்.
அரச விதை – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
ஓமம் – Omam (Ajwain)
₹55.00 – ₹130.00Price range: ₹55.00 through ₹130.00ஓமத்தின் ஆரோக்கிய நன்மைகள்
ஓமம் உட்கொள்வதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
- தொப்பை கொழுப்பை (Belly fat) குறைப்பதிலும் எடை இழப்பிலும் இது பல வழிகளில் உதவுகின்றது.
- ஓமத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகள் அதிகம் உள்ளன.
- ஓமத்தில் உள்ள கூறுகள் செரிமானத்தை மேம்படுத்துகிறது, வாயுத்தொல்லை மற்றும் அமிலத்தன்மையை குறைக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்கிறது: ஓமத்தில் உள்ள தைமால் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: ஓமத்தில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.
வாயுத்தொல்லை, உடல் உப்பசம்: ஓமத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது வாயுத்தொல்லை, உப்பசம் மற்றும் உடல் வீக்கம் ஆகியவற்றை குறைக்க உதவுகின்றன.
வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலில் நிவாரணம்: ஓமத்தின் பயன்பாடு வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் என இரண்டிலிருந்தும் நிவாரணம் அளிக்க உதவுகிறது.
சீரான செரிமானம்: ஓமத்தில் தைமால் மற்றும் கார்க்ரூல் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. இது செரிமான சாறுகளின் சுரப்பை ஊக்குவித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.
பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நன்மை பயக்கும்: ஓமம் பற்கள் மற்றும் ஈறுகளுக்கும் நன்மை பயக்கும். ஓமத்தின் மூலம் வீங்கிய ஈறுகள் மற்றும் பல்வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கின்றது.
வயிற்று வலி மற்றும் அஜீரணத்தில் நிவாரணம்: ஓமத்தை உட்கொள்வதால் வயிற்று வலி, அஜீரணம், வாயுத்தொல்லை மற்றும் அமிலத்தன்மை ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கின்றது.
சுவாச பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்: ஓமம் சுவாச பிரச்சனைகள், ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும்: ஓமத்தில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
ஓமத்தை பல வழிகளில் உட்கொள்ளலாம்.
இதை காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் பிற உணவுகளில் சேர்த்து சுவையையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
ஓமத்தை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அதை உணவில் சேர்க்கலாம், தண்ணீரில் கலந்து சாப்பிடலாம்.
ஓமத்தை – தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
ஏல அரிசி – Eala arisi – cardamom seeds
₹20.00 – ₹300.00Price range: ₹20.00 through ₹300.00- பல் வலியை சரிசெய்ய கூடியது.
- வாய் துர்நாற்றத்தை போக்கும் தன்மை கொண்டது.
- கண் பார்வையை அதிகரிக்கும்.
- அஜீரணத்தை சரிசெய்யும்.
- நீரிழிவை கட்டுக்குள் வைக்கும்.
- சருமப் பொலிவுக்கு பயன்படும்.
- வயிற்று கோளாறுகளை சரிசெய்யவல்லதும்.
- பித்தத்தை சமன்படுத்த கூடியது.
- உயர் ரத்த அழுத்தம், கொழுப்பை குறைக்கவல்லது.
வாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் வலி குறையும். வயிறு உப்புசம் சரியாகும். ரத்த ஓட்டம் சீராகும்.
கால் ஸ்பூன் காட்டு ஏல அரிசி, 3 லவங்கம் ஆகியவற்றை பொடித்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி, வாய் கொப்பளிப்பதன் மூலம் துர்நாற்றம் போகும். ஈறுகளில் ஏற்படும் வீக்கம் குறையும். பல் வலி சரியாகும். பல் சம்பந்தமான நோய்கள் சரியாகும்.
இதில் தேன் சேர்த்து சளி, இருமலுக்கான உள் மருந்தாக பயன்படுத்தலாம். இது வயிற்று வலியை போக்கும். வயிற்று புண்களை ஆற்றும்.
இது வயிற்று கோளாறை சரி செய்கிறது. ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதயத்தை ஒழுங்காக செயல்பட வைக்கிறது.
ஏல அரிசி, கிராம்பு, லவங்கப்பட்டை, மிளகு,சுக்கு, தாளிசபத்திரி, ஆரோ ரூட் மாவு போன்ற எளிய மூலிகைகள் சேர்த்து ஏலாதி சூரணம் எனும் சித்த மருந்து தயாரிக்கப்படுகிறது. நாட்பட்ட குடல்புண்ம, வயிறு எரிச்சல், அசீரணம், வாந்தி ,வாய்க்குமட்டல் உள்ளவர்கள் அவ்வப்போது இந்த மாத்திரையை அல்லது ஏலக்காயை வாயிலிட்டு சுவைத்தாலும் நன்மை தரும்.
உணவில் சேர்த்துக்கொள்ள குடல்புண் ஏற்படாமல் தடுக்கும் தன்மையும், வயிறு குடல் பகுதியில் உள்ள சவ்வினை பாதுகாக்கும் தன்மையும் உடையது.
ஏல அரிசி – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
அக்ரகாரம் – Agrakaram
₹50.00 – ₹100.00Price range: ₹50.00 through ₹100.00பல் பிரச்சனைகள் தீரும்
சிறிது அக்கரகாரத்தை அரைத்து, அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இது கால் லிட்டர் அளவு ஆனவுடன், அதை எடுத்து ஆற வைத்து கொள்ள வேண்டும். தினமும் அதில் சிறிதளவு வாயில் போட்டு அதக்கிக் கொண்டு, சிறிது நேரம் கழித்து கொப்பளிக்கவும். இதுபோன்று, தினமும் இரண்டு முறைகள் வீதம், மூன்று நாட்கள் கொப்பளித்து வந்தால் வாய் புண், தொண்டைப் புண், பல் வலி போன்ற பாதிப்புகள் விலகும்.
காய்ச்சலை கட்டுபடுத்தும்
அக்காரகாரம், அதி மதுரம், சுக்கு மற்றும் சித்தரத்தை சேர்த்து அரைத்து, பேரிச்சம் பழ விழுதைக் கலந்து தேன் சேர்த்து கொள்ள வேண்டும். கடும் காய்ச்சல் மற்றும் குளிர் காய்ச்சல் உள்ள நேரங்களில், நம் உடலில் உள்ள நீர்ச்சத்து எல்லாம் ஆவியாகி விடும். இதனால் நா வறட்சி ஏற்படும். அப்போது இந்த அரைத்த விழுதை சிறிதளவு நாக்கில் தடவினால், நாவில் ஏற்பட்ட வறட்சி நீங்கி, உமிழ்நீர் சீராக சுரக்க ஆரம்பிக்கும், காய்ச்சலும் குறைய ஆரம்பிக்கும்.
தொண்டை பிரச்சனைகள் தீர்க்கும்
அக்கரகார சூரணத்துடன் இந்துப்பு கலந்து, புளித்த நீர் அல்லது எலுமிச்சை சாறு விட்டு நன்கு அரைத்து, அதை உள் நாக்கில் தடவி வந்தால், தொண்டைக் கட்டிக்கொண்டு பேச முடியாமல், தண்ணீர் பருக முடியாமல், உணவு உண்ண முடியாமல் இருப்பவர்கள் அந்த பாதிப்புகள் விரைவில் நீங்கி நலம் பெறுவார்கள்.
குரலின் இனிமை கூடும்
அக்கரகாரம், அதி மதுரம் மற்றும் கரிசலாங்கண்ணி ஆகிய இம்மூன்று மருந்துகளையும் தனித்தனியே இடித்துத் தூளாக்கி, பின்னர் அவற்றை சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து காலை நேரங்களில் தினமும் சாப்பிட்டு வந்தால் குரலின் இனிமை கூடும்.
மயக்கத்தை போக்கும்
திடீரென மயங்கி விழுந்து பற்கள் கட்டிக் கொண்டவர்களுக்கு, அக்கிரகார சூரணத்தை, மூக்கில் வழியாக செலுத்தினால், உடனே மயக்கம் விலகி, சுய நினைவை அடைவார்கள். காக்கா வலிப்பு வியாதியும் சரியாகும்.
மலச்சிக்கலை தீர்க்கும்
நா வறட்சி ஏற்படும் சமயங்களில் சிலருக்கு, மலச்சிக்கல் ஏற்படும். அதற்கு மேற்சொன்ன அக்கரகார தேன் மருந்தில், கடுக்காய் சூரணம் சேர்த்து பயன்படுத்தினால் நாவறட்சி நீங்கி மலச்சிக்கல் தீரும்.
வாய் பிரச்சனைகளை தீர்க்கும்
சிலருக்கு உள்நாக்கு வளர்ந்து, பேச முடியாமல் தொண்டை கட்டிக்கொண்டு வலிக்கும். அப்படிப்பட்டவர்கள் சிறு அக்கரகார வேர்த் துண்டை, வாயில் போட்டுக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கி வந்தால், தொண்டை உள்நாக்கு பாதிப்பு, குரல் கம்முவது, அதீத தாகம் போன்றவை சரியாகும்.
மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்
உடலின் சீரான இயக்கத்துக்கும், மனதின் ஆற்றலுக்கும் கட்டுப்பாட்டு மையமாக விளங்கும் மூளையானது சரியாக இயங்காவிட்டால், சரியாக சிந்திக்க முடியாது, ஞாபக மறதி அதிகரிக்கும், மேலும் உடலில் சோர்வு உண்டாகும். இதற்கு அக்கரகார வல்லாரை மருந்து உதவி புரியும். அக்கரகாரம், வல்லாரை மற்றும் பூனைகாலி இவை மூன்றையும் சமமாக கலந்து தினமும், இருவேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், மூளையின் செயல்பாடு சீராகும். மேலும் உடலின் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து, சிந்திக்கும் திறனை மேம்படும்.
Disclaimer:
The content provided here is for informational purposes only. Pondy Herbals is not intended to substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of a qualified healthcare provider for any questions or concerns you may have regarding a medical condition. Pondy Herbals does not endorse or recommend any specific tests, physicians, procedures, opinions, or other information mentioned on the site.
பற்படாகம் – Parpadagam
₹25.00 – ₹45.00Price range: ₹25.00 through ₹45.00பற்பாடகம் (அ) பற்படாகம் முழுத் தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. மலமிளக்கும்; பசியைத் தூண்டும்; வியர்வையைப் பெருக்கும்.
உடலைத் தேற்றும்; காய்ச்சல் தணிக்கும்; உடல் வெப்பத்தைக் குறைக்கும்; அழுகலகற்றும்; தாகம், பித்த நோய்களை போக்கி கண்களுக்கு குளிர்ச்சி உண்டாக்கும்.
காடுகள் அழிக்கப்பட்ட சமவெளிப் பகுதிகளில் அபரிதமாக வளர்கின்றது. முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. இது காய்ந்த நிலையில் எமது பாண்டி ஹெர்பல்ஸ் – நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் சுரத்துடன் கூடிய பேதி குணமாக 2கிராம் பற்பாடகத்தைப் பசுமையானதாகச் சேகரித்துக் கொள்ள வேண்டும். அதனைத் தண்ணீரில் நன்றாகக் கழுவி அம்மியில் அரைத்து 200 மிலி மோரில் கலக்கி உள்ளுக்கு கொடுக்க வேண்டும். தினமும் காலை, மாலை வேளைகளில் 3 நாள்களுக்கு இவ்வாறு கொடுத்து வரவேண்டும்.
காய்ச்சல் குணமாக பற்பாடகம் முழுத் தாவரம், கண்டங்கத்திரி இலைகள், ஆடாதோடை இலைகள், தோல் நீக்கிய சுக்கு, விஷ்ணுகிரந்தி முழுத் தாவரம், வகைக்கு 10 கிராம் சுத்தம் செய்து நன்றாக நசுக்கி ஒரு லிட்டர் நீரில் போட்டு ¼ லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு வேளைக்கு 50 மிலி வீதம் நான்கு வேளைகள் குடிக்க வேண்டும்.
கீல் வாயு குணமாக காய்ந்த பற்படாகம் வேர் 100 கிராம் நசுக்கி ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வரவேண்டும்.
கண் எரிச்சல் குணமாக முழுத் தாவரத்தையும் அரைத்து பசையாக்கி பாலில் கலந்து தலை, உடலில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.
- காய்ச்சலுக்கு சிறந்த சிகிச்சை.
- தைராய்டு நோய்க்கு சிகிச்சை அளிக்கிறது.
- இதயத் துடிப்பைக் குறைக்கிறது.
- PMS அறிகுறிகளை விடுவிக்கிறது.
- ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது.
- மூக்கில் இரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- இருமல் மற்றும் நெரிசலைக் குறைக்கிறது.
- தூக்கமின்மையை நீக்குகிறது.
இந்த மூலிகையை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
புங்கம்பட்டை – Pungam Pattai
₹20.00 – ₹40.00Price range: ₹20.00 through ₹40.00புங்கை மரத்தின் பட்டை எண்ணெய் விட்டு காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்ட புண்களின் மீது தடவி வர புண்கள் வெகுவாக ஆறும்.
கஸ்தூரி மேத்தி – Kasthuri Methi
₹30.00 – ₹60.00Price range: ₹30.00 through ₹60.00சருமத்தில் உள்ள கறைகள் மற்றும் தடிப்புகள், இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகள்,
இரத்த குளுக்கோஸ் அளவுகள் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றைக்
குறைப்பதில் இது பயனுள்ளதாக இருக்கும்.கல்பாசி – Kalpaasi
₹50.00 – ₹100.00Price range: ₹50.00 through ₹100.00- செரிமான ஆரோக்கியம்:
- செரிமான நொதிகளைத் தூண்டி, செரிமான செயல்முறையை சீராக்க உதவுகிறது.
- வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாந்தி, வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.
- சிறுநீரக ஆரோக்கியம்:
- சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தி:
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- சமையல் பயன்பாடு:
- இந்திய சமையலறைகளில், குறிப்பாக செட்டிநாடு உணவுகளில், சுவை மற்றும் நறுமணத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
- பிற பயன்கள்:
- ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பல ஆரோக்கிய நன்மைகள் பயன்படுத்தப்படுகின்றன.
- கல்பாசி என்பது பாறைகள் மற்றும் மரக்கிளைகளில் வளரும் ஒரு வகை பூஞ்சை ஆகும்.
- இது இரண்டு உயிரினங்கள் இணைந்து வாழும் ஒரு கூட்டு வாழ்க்கை முறையாகும்.
- இதற்கு “ஸ்டோன் ஃப்ளவர்” (Stone Flower) அல்லது “கறி மசாலா ஜாமான்” (kari masala jaman) என்றும் பெயர்.
கல்பாசி – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
கிராம்பு – Clove
₹40.00 – ₹150.00Price range: ₹40.00 through ₹150.00வீக்கத்தைக் குறைக்கிறது, புண்களைக் குறைக்கிறது,
கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, பல்வலிக்குப் பயன்படும் கிராம்பு.பிரிஞ்சு இலை – Bay Leaf
₹10.00 – ₹30.00Price range: ₹10.00 through ₹30.00Leaves have antimicrobial properties that can help combat oral bacteria,
reduce bad breath, and prevent dental problems like cavities and gum disease.