பெப்பர்மின்ட் ஆயில் – Peppermint oil
ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் புதினாவை கொண்டு தயாரிக்கப்படும் (புதினா எண்ணெய்) பெப்பர்மிண்ட் எண்ணெய் கூந்தலுக்கு பலவிதமான நன்மைகளைத் தருகிறது.
பெப்பர்மிண்ட் எண்ணெய் வைட்டமின் ஏ,சி, கால்சியம், தாதுக்கள்,மெக்னீஷியம் சத்துக்களை கொண்டிருக்கிறது.
பெப்பர்மிண்ட் எண்ணெயில் மெந்தோல், மெத்தனால் மெண்டோன் கூறுகள் உண்டு என்பதால் இவை பெரும்பாலும் அரோமாதெரபியில் பயன்படுத்தப்படுகிறது. இவை சருமத்துக்கும், கூந்தலுக்கும் பெருமளவு நன்மை புரிந்தாலும் கூட அதை தனியாக பயன்படுத்தாமல் இணையாக வேறு எண்ணெயுடன் பயன்படுத்தவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலையில் அரிப்பு பிரச்சனை
தலையில் அரிப்பு பிரச்சனை பேன்,பொடுகு இருப்பதால் மட்டும் வருவதில்லை. சில நேரங்களில் கூந்தல் வறட்சியை உண்டாக்கி தலையில் ஸ்கால்ப் பகுதியில் செதில் செதிலாக்கி விட்டு அதிக அரிப்பை உண்டாக்கும். தலை குளியல் முன்பு ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணெயுடன் அரை டீஸ்பூன் பெப்பர்மிண்ட் ஆயில் சேர்த்து குழைத்து மசாஜ் செய்து தலையில் தடவி கொள்ளவும். பிறகு 30 ம் முதல் 45 நிமிடங்கள் வரை அதை ஊறவிட்டு கூந்தலை அலசவும். தொடர்ந்து மூன்று முறை செய்தால் அரிப்பு பிரச்சனை எளிதில் நீங்கும்.
முடியின் வேர்கால்களை வலுப்படுத்தும்
முடி உதிர்வுக்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று முடியின் வேர்க்கால்கள் வலுவிழந்து போவது. பெப்பர்மிண்ட் எண்ணெயில் இருக்கும் மெந்தோல் ஆனது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. அவை உச்சந்தலையில் உஷ்ணத்தை குறைத்து வேர்க்கால்களை பலப்படுத்துகிறது. தலையில் ஸ்கால்ப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் கூந்தல் வளர்ச்சியும் நிறைவாக இருக்கிறது.
முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் நீங்கள் அதிகம் மெனக்கெடாமல் செய்யவேண்டியது ஒன்றுதான். 5 துளி பெப்பர்மிண்ட் ஆயிலுடன் 8 துளி தேங்காயெண்ணெய் கலந்து குழைத்து உச்சந்தலையில் மட்டும் தேய்க்க வேண்டும். வாரத்துக்கு மூன்று முறை இதை செய்து வரவேண்டும்.
ஆயில் மசாஜ் செய்யும் போது
ஆயில் மசாஜ் என்பது முடிக்கு வலுவூட்டவும் அடர்த்தி அதிகரிக்கவும் பயன்படும். முடி மெலிவு இருப்பவர்களும், முடி கொத்து கொத்தாக உதிரும் பிரச்சனைகளும் இருப்பவர்கள் ஆயில் மசாஜ் செய்து வந்தாலே படிப்படியாக குறையும்.
ஆயில் மசாஜ்க்கு நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் என்று எதை பயன்படுத்தினாலும் அதனுடன் சிறிதளவு பெப்பர்மிண்ட் ஆயில் சேர்த்து ஆயில் மசாஜ் செய்துவந்தால் பலன் வேகமாக கிடைக்கும். ஆனால் எந்த காரணம் கொண்டும் பெப்பர்மிண்ட் எண்ணெயை தனியாக பயன்படுத்த கூடாது.
ஈறு, பேன், பொடுகு முற்றிலும் நீங்க
தலையில் பொடுகு, ஈறு, பேன்,பொடுகு போன்ற பிரச்சனைகள் குழந்தகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உண்டு. பொடுகு நிரந்தரமாக போக கூடியது அல்ல. ஆனால் வரும் போது அதை அலட்சியப்படுத்தினால் அவை தலையில் அதிகமாகிவிடக்கூடும்.
இரவு தூங்கும் போது பெப்பர்மிண்ட் எண்ணெயுடன் சம அளவு தேங்காயெண்ணெய் கலந்து தலையில் குறிப்பாக வேர்க்கால்களில் அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு தலையை அழுந்த சீவி விட வேண்டும். மறுநாள் காலை தலைக்கு குளித்து வெதுவெதுப்பான நீரில் தலையை அலசி துவட்டினால் பேன்கள் இறந்து வெளியேறும். மாதம் ஒரு முறை இதை செய்துவந்தால் கூந்தல் சுத்தமாக இருக்கும்.
பெப்பர்மிண்ட் எண்ணெய் – யை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
₹165.00 Original price was: ₹165.00.₹152.00Current price is: ₹152.00.
General info
| Weight | 0.100 kg |
|---|---|
| Size |
10 ml |
