Showing 1–12 of 15 resultsSorted by popularity
சிரட்டை தைலம் – Chirattai Thailem
உபயோகிக்கும் முறை: தோல் நோய் தைலம்
1. தைலத்தை செம்பு / வெள்ளி பாத்திரத்தில் வைத்து பயன்படுத்த சிறப்பு.
2. பாதிக்கப்பட்ட இடத்தில் தினமும் மூன்று முறை / இரவில் / காலையில் ஒரு மணி நேரம் முன் (அல்லது அதிக மணி நேரம் வைத்திருப்பது மிகவும் நற்பலனைத் தரும்) தடவி வைத்து குளிக்கவும்.
3. குளிக்க மித வெந்நீர், உடலிற்கு ஸ்நான பவுடர், தலைக்கு ஹேர் வாஷ் பவுடர் பயன்படுத்த, மூலிகை சத்துகளை தோல் உள்வாங்கி, வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.
Usage: Skin disease thailam
1. Thailam stored in copper bowl / Silver Bowl has more added advantage.
2. Gently apply on affected parts, daily 3 times / night / morning one hour before bath (or keep maximum time for maximum benefits)
3. Then wash with luke warm wter, for body wash use snana powder & hair wash use hair wash powder. It gives bettr result for skin maintenance.
நாட்பட்ட தோல் நோய்கள், சொறி, படர் தாமரை மற்றும் மரு, காலாணி போன்றவை மறையும்.
கொடிவேலி எண்ணை – Kodiveli Oil
- கொழுப்பு கட்டிகள் (Lipoma): உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் மற்றும் சிறிய வீக்கங்களைக் கரைக்க இது தோலில் தடவி மசாஜ் செய்யப்படுகிறது. எவ்வளவு மோசமான கொழுப்பு கட்டிகளாக இருந்தாலும் அதை ஒரே வாரத்தில் சரிசெய்யும் தன்மை இந்த சித்திர மூலத்துக்கு உண்டு.சித்திர மூல ஆயிலை கொழுப்புக் கட்டி உள்ள இடத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்து வர கொழுப்புக் கட்டிகள் கரைந்து மறைய ஆரம்பிக்கும்.
- மூட்டு வலி மற்றும் வீக்கம்: வாத வலிகள், மூட்டு வலி மற்றும் தசைப் பிடிப்பு உள்ள இடங்களில் இந்த எண்ணெயைத் தடவி வர வலி குறையும்.
- தோல் புண்கள்: ஆறாத நாள்பட்ட புண்கள் மற்றும் காயம் உள்ள இடங்களில் வெளிப்பூச்சாகப் பயன்படுத்தப்படுகிறது.
- கால்களில் ஏற்படும் ஆணியை சரிசெய்யும்.
- அடிப்படையில் உடல் உஷ்ணத்தைப் போக்கி உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.
- சருமத்தில் ஏற்படும் எல்லா வகையான சரும நோய்களையும் சரிசெய்ய உதவி செய்யும்.
- ஜவ்வு விலகல் மற்றும் மூட்டு வலிகளுக்கு இந்த கொடி வேலி தைலம் மிகச்சிறந்த தீர்வைக் கொடுக்கும்.
- இது முற்றிலும் வெளி பயன்பாட்டிற்காக மட்டுமே (Topical use). மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதைக் குடிக்கவோ அல்லது உட்கொள்ளவோ கூடாது.
- கொடிவேலி மூலிகை மிகவும் வீரியமானது என்பதால், உணர்திறன் வாய்ந்த தோல் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தும் முன் ஒவ்வாமை பரிசோதனை (Patch test) செய்து கொள்வது நல்லது. கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
Indications
Veekam (glandular swellings), Puttrunoi Kattigal (cancerous tumours)
கிச்சிலிக் கிழங்கு பவுடர் – Kichali Kizhangu Powder
₹90.00 – ₹340.00Price range: ₹90.00 through ₹340.00கிச்சிலி கிழங்கு, வெள்ளை மஞ்சள் அல்லது பூலாங்கிழங்கு என அழைக்கப்படும் இந்தக் கிழங்கு பல மருத்துவ பயன்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல் போன்றவற்றை குணமாக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும், சுவாச மண்டலத்தை பலப்படுத்தவும் உதவுகிறது.
- வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல்:
கிச்சிலி கிழங்கு தூள் தேனில் கலந்து சாப்பிடலாம். அல்லது கொதிக்க வைத்த நீரில் கிச்சிலி கிழங்கு, மஞ்சள் சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.
- ஜீரண சக்தி:
ஜீரண சக்தியை அதிகரிக்க கிச்சிலி கிழங்கு உதவுகிறது.
- சுவாச மண்டலம்:
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள கிச்சிலி கிழங்கு, சுவாச மண்டலத்தை பலப்படுத்துகிறது.
- வாதவலி:
கிச்சிலி கிழங்கு பொடியை நீரில் கலந்து பற்றுப்போட்டால் வாதவலிகள் குறையும்.
- சருமம்:
காயங்கள் மற்றும் சரும பிரச்சினைகளுக்கு தீர்வாக கிச்சிலி கிழங்கு பயன்படுகிறது.
- உடற் நாற்றம்:
கிச்சிலி கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம் மற்றும் வியர்வை நாற்றம் குறையும்.
- புற்றுநோய்:
சில ஆய்வுகள் கிச்சிலி கிழங்கில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் இருப்பதாக கூறுகின்றன.
- ஆஸ்துமா:
ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு கிச்சிலி கிழங்கு தீர்வாக அமைகிறது.
- சளி, மலச்சிக்கல், வாயு தொந்தரவு:
இந்த கிழங்கு சளி, மலச்சிக்கல், வாயு தொந்தரவு போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது.
கிச்சிலி கிழங்கை பயன்படுத்துவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த கிச்சிலி கிழங்கு பொடியை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
கிச்சிலிக் கிழங்கு – Kichili kilangu
₹70.00 – ₹620.00Price range: ₹70.00 through ₹620.00பூலாங்கிழங்கு: கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.
வடமாநிலங்களில் இதை ஊறுகாய் போட பயன்படுத்துவார்கள். ஒரு சில வெளிநாடுகளில் மசாலா பொருளாக பயன்படுத்துகிறார்கள்.
தோற்றத்தில் பார்ப்பதற்கு இஞ்சி போலவே ஆரஞ்சு நிறத்தில் இந்த கிழங்கு காணப்படும். இதன் வாசனை மாம்பழம் போலவே இருக்கும். சுவை கசப்புத் தன்மையுடன் இருக்கும்.
முன்பெல்லாம், குழந்தைகளை குளிக்க வைக்க இந்த கிச்சிலி கிழங்கை தான் பயன்படுத்தி உள்ளனர். இப்போதும் கூட நாட்டு மருந்து கடைகளில் இந்த கிழங்கு கிடைக்கிறது.
இதிலுள்ள ‘குர்குமின்’ என்ற பொருளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அடங்கியிருப்பதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துகிறது. அத்துடன், புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கவும் இந்த கிச்சிலி கிழங்கு பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, பெண்களை தாக்கக்கூடிய மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவற்றை நெருங்க விடாமல் காக்கிறது.
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. மிகச்சிறந்த கிருமி நாசினியாக கிச்சிலி கிழங்குகள் பயன்படுகின்றன.
இதைக்கொண்டு டீ தயாரித்து குடிக்கலாம், சூப் செய்தும் குடிக்கலாம். இவ்வாறு செய்வதனால் மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படும் அத்தனை கோளாறுகளும் நீங்குகிறது.
இந்த கிழங்கை காயவைத்து, இடித்து தூள் செய்து, சலித்து எடுத்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
நுரையீரலில் ஏற்படும் கோளாறுகள், ஆஸ்துமா, சளி, இருமல், போன்றவற்றுக்கும், அஜீரணம், மலச்சிக்கல், வாயு தொந்தரவு போன்ற அத்தனை பிரச்சனைக்கும் இந்த கிச்சிலி கிழங்கு பொடி அருமருந்தாகிறது.
அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் கூட தாராளமாக இந்த பொடியை பயன்படுத்தலாம்.
இந்த தூளிலிருந்து சிறிது எடுத்து தேனில் கரைத்து சாப்பிட்டு வர இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல் ஆகியவவை காணாமல் போகும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கிச்சிலி கிழங்கையும், சிறிது மஞ்சளையும் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால் இருமல், சளி, காய்ச்சல் எதுவாக இருந்தாலும் ஓடிவிடும்.
இந்த பொடியில் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து, காயங்கள், வலிகள், வீக்கங்கள், சரும அலர்ஜி, புண்கள் இருக்கும் இடத்தில் தடவினால், அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
அதுமட்டுமல்லாமல் தோல் பிரச்சனை, முகப்பரு, கரும்புள்ளிகளுக்கு தரப்படும் சிகிச்சைகளிலும் இந்த கிழங்கு பயன்படுகிறது. குறிப்பாக, இந்த கிழங்கின் வேர்ப்பகுதிகள் தான் மருந்தில் சேர்க்கப்படுகின்றன.
கிச்சிலி கிழங்கை பயன்படுத்துவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த கிச்சிலி கிழங்கை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
புங்கம்பட்டை – Pungam Pattai
₹20.00 – ₹40.00Price range: ₹20.00 through ₹40.00புங்கை மரத்தின் பட்டை எண்ணெய் விட்டு காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்ட புண்களின் மீது தடவி வர புண்கள் வெகுவாக ஆறும்.
மத்தன் தைலம் – Maththan Thailam
Urticaria, rash, scabies, fissures, ear pus discharge will decrease.பரங்கி பட்டை சூரணம் – Parangi Pattai Chooranam
நீரிழிவு, தோல் வியாதிகள், வெண்குஷ்டம், கருங்குஷ்டம் குறையும்.
சிறியாநங்கை பொடி – Siriyanangai Powder – 50g
- சர்க்கரை நோய் (Diabetes): சிறியாநங்கை இலைப்பொடியை நெல்லிமுள்ளிப் பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் பொடியுடன் கலந்து கஷாயம் செய்து குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவு (Blood Sugar) கட்டுக்குள் இருக்கும்.
- நஞ்சு முறிவு மற்றும் விஷக்கடி: சித்த மருத்துவத்தில் நஞ்சுமுறிவு மருந்தாகவும், பாம்பு கடி மற்றும் பூச்சிக் கடிக்கு எதிராகவும் இது பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது.
- காய்ச்சல் மற்றும் தொற்று: சாதாரண காய்ச்சல், மலேரியா, உடல் சோர்வு மற்றும் கிருமித்தொற்றுகளுக்குச் சிறப்பான நிவாரணியாகச் செயல்படுகிறது.
- தோல் வியாதிகள்: தோல் அரிப்பு, ஒவ்வாமை (Allergy) மற்றும் பல்வேறு தோல் பிரச்சனைகளுக்கு இதன் பொடி பயனளிக்கிறது.
- கல்லீரல் பாதுகாப்பு: மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் தொடர்பான கோளாறுகளுக்கு இது சிறந்த மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
- வயிற்றுப் புழுக்கள்: வயிற்றுப் புழுக்களை நீக்கவும், செரிமான மண்டலத்தைச் சீராக்கவும் உதவுகிறது.
மர மஞ்சள் – Mara Manjal
Cures piles and skin diseases.
Reduces internal heat as well as fever.கஸ்தூரி மஞ்சள் தூள் – GN Kasthuri Manjal Powder
₹40.00 – ₹70.00Price range: ₹40.00 through ₹70.00கஸ்தூரி மஞ்சள் எப்படி பயன்படுத்துவது?
கஸ்தூரி மஞ்சளை முகப்பொலிவு பெற கடலை மாவு மற்றும் தயிருடன் கலந்து ஃபேஸ் பேக் ஆகப் பயன்படுத்தலாம். சமையல் மஞ்சள் போல கஸ்தூரி மஞ்சள் சருமத்தில் மஞ்சள் நிற கறைகளை ஏற்படுத்தாது. இதை ரோஸ் வாட்டர், பால் அல்லது தேன் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- பொலிவான சருமத்திற்கு: 1 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள், 2 ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி உலர்ந்த பின் கழுவவும்.
- முகப்பரு மற்றும் தழும்புகளுக்கு: கஸ்தூரி மஞ்சளுடன் சிறிது சந்தனப் பொடி மற்றும் ரோஸ் வாட்டர் அல்லது பால் கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வரலாம்.
- எத்தனை முறை: வாரத்திற்கு 2 முதல் 3 முறை மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். அதிகப்படியான பயன்பாடு சருமத்தை வறண்டு போகச் செய்யும்.
சருமப் பொலிவுக்கு ஓர் அருமருந்தான கஸ்தூரி மஞ்சள், பல்வேறு சருமப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவுகிறது:
- சரும நிறத்தை மேம்படுத்துதல்: தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் இயற்கையான நிறத்தை மெருகூட்டி, பொலிவான தோற்றத்தை அளிக்கும்.
- கரும்புள்ளிகள் மறைய: முகப்பரு வடுக்கள், கருந்திட்டுக்கள் மற்றும் பிற தழும்புகளைக் குறைக்க உதவுகிறது.
- சருமத்தை மென்மையாக்குதல்: சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பட்டுப் போன்றதாகவும் மாற்றும்.
- சரும பாதுகாப்பு: பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் கொண்டிருப்பதால், சருமத்தைப் பாதுகாத்து, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
- சருமத்திற்கு புத்துணர்ச்சி: சரும செல்களைப் புத்துயிர் பெறச் செய்து, புத்துணர்ச்சியூட்டும் உணர்வைத் தரும்.
இந்த கஸ்தூரி மஞ்சள் பொடியை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.
India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
அருகன் தைலம் (மெடிசித்) – Arugan Thailam (Medisiddh)
பயன்கள்:
- சரும நோய்கள்: படை, அரிப்பு, சொறி, பூஞ்சை தொற்றுகள் (scabies, itching, fungal infections) போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கிறது.
- பொடுகு மற்றும் உச்சந்தலை: பொடுகுத் தொல்லைக்கும், உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் உதவுகிறது.
- சரும நிறம்: கரும்புள்ளிகள் மற்றும் சரும நிற மாற்றங்களை சரிசெய்ய உதவுகிறது.
- இது பாரம்பரிய சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து.
- சருமப் பிரச்சனைகளுக்கான இயற்கையான தீர்வாகக் கருதப்படுகிறது.
On external application it reduces Skin diseases, scabies, fungal diseases, irritation, dandruff.