Mouth Ulcer

Showing all 7 resultsSorted by popularity

மருதம் பட்டை – Marudham Pattai

Price range: ₹30.00 through ₹145.00

மருதம் பட்டை சிறிது துவர்ப்பு சுவை உடையது. வைட்டமின் சி மருதம்பட்டையில் மிகுதியாக அடங்கி உள்ளது. மருதம் பட்டையை அரைத்துப் பொடியாகவும், மருதம் பட்டையை தண்ணீரில் ஊறவைத்து குடிநீராகவும் பயன்படுத்தலாம்.

🎀மருதம் பட்டை உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தருகிறது. குடல் தொடர்பான எல்லா நோய்களுக்கும் இது சிறந்த மருந்து என்று சொல்லலாம். மருதம் பட்டை குடிநீர் பயன்படுத்தினால் உடலில் ரத்தக்கொதிப்பு, இதய படபடப்பு, தூக்கமின்மை, நீரிழிவு பிரச்னை, கல்லீரல் பிரச்னை போன்றவைகள் கட்டுக்குள் வரும்.

🎀ஆன்டி ஆக்சிடென்ட் என்ற புத்துணர்வு தரும் சக்தி மருதம்பட்டையில் அதிகமாக இருக்கிறது. கல்லீரல், நுரையீரல், மார்பு, வாயில் ஏற்படும் புற்றுநோய்கள் போன்றவைகளை வராமல் தடுக்கும் திறன் மருதம் பட்டைக்கு உண்டு.

🎀மருதம் பட்டை – 200 கிராம், சீரகம் – 100 கிராம், சோம்பு – 100 கிராம், மஞ்சள் – 100 கிராம் அனைத்தையும் ஒன்றாக எடுத்து, நன்றாகப் பொடித்து தூள் செய்து வைத்திருந்து, தினமும் கொதிக்க வைத்த தண்ணீரில் 5 கிராம் அளவு தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குணமடையும்.

🎀தூக்கமின்மை, மன உளைச்சல், படபடப்பு நீங்க மருதம் பட்டை தூளுடன் சிறிது கசகசா வறுத்து அரைத்து பாலில் கலந்து அருந்தினால் மாற்றத்தை உணர முடியும்.

🎀ஹார்மோன் குறைபாடு, அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் போன்ற பிரச்னைகள் கொண்ட பெண்கள் மருதம் பட்டை கஷாயத்தைப் பயன்படுத்தலாம்.

🎀மருதம் பட்டை – 100 கிராம் அளவிலும், சீரகம் – 25 கிராம் அளவிலும் சேர்த்து கொதிக்கவைத்து ஆறிய நிலையில் குடிநீராக தினமும் குடித்து வந்தால் இதயம் வலுவாகும். மன அழுத்தம் நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும். இதன்மூலம் ரத்த குழாய்களில் கொழுப்பு அதிகமாக படிவதும் தடுக்கப்படும்.

நன்கு உலர்ந்த மருதம்பட்டையை மாவாக அரைத்து, அதை 5 கிராம் அளவு எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல், ஆஸ்துமா  தொந்தரவுகள் குறையும்.

அரை லிட்டர் நல்லெண்ணெய் அடுப்பில் கொதிக்க விட்டு அதில் 100 கிராம் மருதம்பட்டையை போட்டு கொதிக்கவிடவும். 30 நிமிடம் கொதித்த பிறகு ஆற விட்டு  அந்த எண்ணெய்யை முகவாதம், பக்கவாதம் ஏற்பட்ட இடத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். இந்த எண்ணெய்யை மூட்டுவலி,  இடுப்புவலி உள்ளவர்களும் பயன்படுத்தலாம்.

இந்த மருதம்பட்டையை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.

India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

 

Marutham bark helps to relax blood vessels and reduce blood flow resistance. 
This reduces blood pressure. 
Stimulates heart function
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

கடுக்காய் பூ – Kadukai Poo

Price range: ₹30.00 through ₹120.00

கடுக்காய் பூக்கள் பல மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ளன. சித்த மருத்துவத்தில் கடுக்காய் பூக்களைப் பயன்படுத்துவது, குறிப்பாக, செரிமானப் பிரச்சனைகள், முடி உதிர்தல், தோல் புண், மன அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வாக பார்க்கப்படுகிறது. 

கடுக்காய் பூக்கள் மூலம் கிடைக்கும் நன்மைகள்: 
  • செரிமானப் பிரச்சனைகளுக்கு:கடுக்காய் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், மலச்சிக்கல் மற்றும் செரிமானப் பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன.
  • முடி உதிர்தலுக்கு:கடுக்காய் பொடியை பாலுடன் கலந்து சாப்பிடுவதால் முடி உதிர்தல் தடுக்கப்படுகிறது.
  • தோல் புண்ணுக்கு:கடுக்காய் பொடி தோல் புண்களை குணமாக்க உதவுகிறது.
  • மன அழுத்தத்திற்கு:கடுக்காய் மன அழுத்தத்தை குறைத்து, மன அமைதியை அளிக்கிறது.
  • இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது:கடுக்காய் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • கண்பார்வைக்கு:கடுக்காய் கண்பார்வைக்கு நல்லது.
  • கடுக்காய் பொடியை பாலுடன் கலந்து சாப்பிடுவதால் வாய்ப்புண், வயிற்றுப்புண், இரைப்பை புண் ஆகியவற்றை குணமாக்கலாம்.
  • கடுக்காய் பொடி மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
  • கடுக்காய் எடை குறைக்கவும் உதவுகிறது.

 

இந்த கடுக்காய் பூவை உட்கொள்வதற்கும், பயன்படுத்துவதற்கும், மருத்துவ நிபுணரின் ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த கடுக்காய் பூவை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.

India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

அக்ரகாரம் – Agrakaram

Price range: ₹50.00 through ₹100.00

பல் பிரச்சனைகள் தீரும்

சிறிது அக்கரகாரத்தை அரைத்து, அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இது கால் லிட்டர் அளவு ஆனவுடன், அதை எடுத்து ஆற வைத்து கொள்ள வேண்டும். தினமும் அதில் சிறிதளவு வாயில் போட்டு அதக்கிக் கொண்டு, சிறிது நேரம் கழித்து கொப்பளிக்கவும். இதுபோன்று, தினமும் இரண்டு முறைகள் வீதம், மூன்று நாட்கள் கொப்பளித்து வந்தால் வாய் புண், தொண்டைப் புண், பல் வலி போன்ற பாதிப்புகள் விலகும்.

காய்ச்சலை கட்டுபடுத்தும்

அக்காரகாரம், அதி மதுரம், சுக்கு மற்றும் சித்தரத்தை சேர்த்து அரைத்து, பேரிச்சம் பழ விழுதைக் கலந்து தேன் சேர்த்து கொள்ள வேண்டும். கடும் காய்ச்சல் மற்றும் குளிர் காய்ச்சல் உள்ள நேரங்களில், நம் உடலில் உள்ள நீர்ச்சத்து எல்லாம் ஆவியாகி விடும். இதனால் நா வறட்சி ஏற்படும். அப்போது இந்த அரைத்த விழுதை சிறிதளவு நாக்கில் தடவினால், நாவில் ஏற்பட்ட வறட்சி நீங்கி, உமிழ்நீர் சீராக சுரக்க ஆரம்பிக்கும், காய்ச்சலும் குறைய ஆரம்பிக்கும்.

தொண்டை பிரச்சனைகள் தீர்க்கும்

அக்கரகார சூரணத்துடன் இந்துப்பு கலந்து, புளித்த நீர் அல்லது எலுமிச்சை சாறு விட்டு நன்கு அரைத்து, அதை உள் நாக்கில் தடவி வந்தால், தொண்டைக் கட்டிக்கொண்டு பேச முடியாமல், தண்ணீர் பருக முடியாமல், உணவு உண்ண முடியாமல் இருப்பவர்கள் அந்த பாதிப்புகள் விரைவில் நீங்கி நலம் பெறுவார்கள்.

குரலின் இனிமை கூடும்

அக்கரகாரம், அதி மதுரம் மற்றும் கரிசலாங்கண்ணி ஆகிய இம்மூன்று மருந்துகளையும் தனித்தனியே இடித்துத் தூளாக்கி, பின்னர் அவற்றை சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து காலை நேரங்களில் தினமும் சாப்பிட்டு வந்தால் குரலின் இனிமை கூடும்.

மயக்கத்தை போக்கும்

திடீரென மயங்கி விழுந்து பற்கள் கட்டிக் கொண்டவர்களுக்கு, அக்கிரகார சூரணத்தை, மூக்கில் வழியாக செலுத்தினால், உடனே மயக்கம் விலகி, சுய நினைவை அடைவார்கள். காக்கா வலிப்பு வியாதியும் சரியாகும்.

மலச்சிக்கலை தீர்க்கும்

நா வறட்சி ஏற்படும் சமயங்களில் சிலருக்கு, மலச்சிக்கல் ஏற்படும். அதற்கு மேற்சொன்ன அக்கரகார தேன் மருந்தில், கடுக்காய் சூரணம் சேர்த்து பயன்படுத்தினால் நாவறட்சி நீங்கி மலச்சிக்கல் தீரும்.

வாய் பிரச்சனைகளை தீர்க்கும்

சிலருக்கு உள்நாக்கு வளர்ந்து, பேச முடியாமல் தொண்டை கட்டிக்கொண்டு வலிக்கும். அப்படிப்பட்டவர்கள் சிறு அக்கரகார வேர்த் துண்டை, வாயில் போட்டுக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கி வந்தால், தொண்டை உள்நாக்கு பாதிப்பு, குரல் கம்முவது, அதீத தாகம் போன்றவை சரியாகும்.

மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்

உடலின் சீரான இயக்கத்துக்கும், மனதின் ஆற்றலுக்கும் கட்டுப்பாட்டு மையமாக விளங்கும் மூளையானது சரியாக இயங்காவிட்டால், சரியாக சிந்திக்க முடியாது, ஞாபக மறதி அதிகரிக்கும், மேலும் உடலில் சோர்வு உண்டாகும். இதற்கு அக்கரகார வல்லாரை மருந்து உதவி புரியும். அக்கரகாரம், வல்லாரை மற்றும் பூனைகாலி இவை மூன்றையும் சமமாக கலந்து தினமும், இருவேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், மூளையின் செயல்பாடு சீராகும். மேலும் உடலின் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து, சிந்திக்கும் திறனை மேம்படும்.

 

Disclaimer:

The content provided here is for informational purposes only. Pondy Herbals is not intended to substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of a qualified healthcare provider for any questions or concerns you may have regarding a medical condition. Pondy Herbals does not endorse or recommend any specific tests, physicians, procedures, opinions, or other information mentioned on the site.

Tags: Akarkara enhances fertility, and improves libido in men, Benefits Akrakaram Root, Buy Agrakaram root online, Buy Akarkara root online, Buy akkaragaram ver online, Buy Ayurvedic medicine for impotency, buy herbal dried online, Buy herbal medicine for men, Buy nattumarunthu online, Buy pure Akrakaram ver online, Buy Spanish Chamomile online, Common name of akrakara, Health benefits of akrakaram ver online, increase spermatozoa count, Treats Impotency & Erectile Dysfunction, uses of akrakara ver online, Where to buy Akarkara root online

Select options This product has multiple variants. The options may be chosen on the product page

மாசிக்காய் எண்ணை – Maasikkai Oil

Original price was: ₹275.00.Current price is: ₹250.00.

மாசிக்காய் எண்ணெய் மருத்துவ குணங்கள் நிறைந்தது, வாய்ப்புண், தொண்டைப்புண் மற்றும் குடல்புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. மேலும், நீரிழிவு நோயால் ஏற்பட்ட புண்களையும் ஆற்றும். மூல நோய், ரத்தப்போக்கு, வயிற்று கோளாறுகள் போன்றவற்றுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று இணையதளம் ஒன்று கூறுகிறது. 

மாசிக்காய் எண்ணெயின் முக்கிய பயன்கள்:
    • புண்களை ஆற்றும்:
      வாய்ப்புண், தொண்டைப்புண் மற்றும் குடல்புண்களை குணமாக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது.
    • ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும்:
      மூல நோய் மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் இரத்தப்போக்கை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • வயிற்று கோளாறுகள்:
    வயிற்றுப்போக்கு மற்றும் பிற வயிற்று பிரச்சனைகளை குணமாக்கும்.
  • துவர்ப்பு தன்மை:

    சிறந்த துவர்ப்புப் பொருளாகவும் செயல்படுகிறது. 

மாசிக்காய் எண்ணெயை பயன்படுத்துவது எப்படி?
  • வாய்ப்புண் மற்றும் தொண்டை வலிக்கு:

    மாசிக்காய் எண்ணெயை தேனுடன் கலந்து குடிக்கலாம் அல்லது துணியில் நனைத்து புண்கள் உள்ள இடத்தில் வைக்கலாம். 

  • உள்ளுக்குள்:

    மாசிக்காய் எண்ணெயை மருத்துவரின் ஆலோசனைப்படி, குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்ளலாம். 

எச்சரிக்கை: ஏதேனும் உடல்நல பிரச்சனைகளுக்கு பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது.
மாசிக்காய் எண்ணெயை – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
Select options This product has multiple variants. The options may be chosen on the product page

மாசிக்காய் பவுடர் – Maasikkai Powder

Original price was: ₹50.00.Current price is: ₹45.00.

Mouth Ulcer, Internal heat and urinary tract infection will be reduced.

Add to cart

மாசிக்காய் – Maasikkai

Original price was: ₹100.00.Current price is: ₹90.00.
Mouth Ulcer, Internal heat and urinary tract infection will be reduced
Add to cart

வல்லாரை மாத்திரை – Vallarai Tablet

Original price was: ₹120.00.Current price is: ₹114.00.
Memory will increase

The fever will subside

Astringent is good for elephantiasis.
Add to cart