Showing 1–12 of 45 resultsSorted by popularity
அவுரி (நீலி) இலைப்பொடி – Neeli Avuri (Indigo) Powder
அவுரி இலை பொடி (Indigo Powder)
நரைமுடியை இயற்கையாகக் கருப்பாக்கவும், முடி உதிர்வைத் தடுத்து முடி வளர்ச்சியைத் தூண்டவும், உச்சந்தலையைக் குளிர்ச்சியாக வைக்கவும் பெரிதும் உதவுகிறது. இது வேதியியல் சாயங்களுக்குப் பாதுகாப்பான மாற்றாகும். மேலும், இது சருமப் பிரச்சனைகளைத் தீர்க்கவும், கல்லீரல் ஆரோக்கியத்திற்கும், உடலை நச்சுத்தன்மையிலிருந்து நீக்கவும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
- இயற்கை முடி சாயம்: மருதாணியுடன் கலந்து பயன்படுத்தும்போது நரைமுடியை இயற்கையான கறுப்பு அல்லது அடர் பழுப்பு நிறமாக மாற்றுகிறது.
- முடி வளர்ச்சி மற்றும் அடர்த்தி: மயிர்க்கால்களை வலுப்படுத்தி, முடி உதிர்வைக் குறைத்து, முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.
- பொடுகு மற்றும் உச்சந்தலை ஆரோக்கியம்: பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக பொடுகு மற்றும் உச்சந்தலை அரிப்பைக் குறைத்து, குளிர்ச்சியைத் தருகிறது.
- சருமப் பராமரிப்பு: முகப்பரு, தோல் அழற்சி (rashes) மற்றும் அரிப்பு போன்ற சருமப் பிரச்சனைகளுக்குப் பொடியாகப் பயன்படுத்தப்படுகிறது.
- உடல் நலம்: கல்லீரலைப் பாதுகாக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடலின் நச்சுத்தன்மையை நீக்கவும் (detoxify) இது மருத்துவ ரீதியாகப் பயன்படுகிறது.
- இயற்கையான மலமிளக்கியாகும். 18 வித விஷங்களை முறிக்கும்.
- காமாலை, சீதளம், முப்பிணி, கீல்வாதம் இவைகளைப் போக்கும்.
உடல் பொன்னிறம் பெறும் என்கிறது குணபாடம்! - தீப்புண், தீயினால் ஏற்பட்ட கொப்புளங்களை சரியாக்க இந்த அவுரி பயன்படும்.
- நாய்கடி விஷத்தால் ஏற்படும் – ஹைடிரோ போபியாவுக்கு நன்றாக குணம் கிடைக்கச் செய்யும்.
- முடிக்கு: மருதாணி இலை பொடி தடவி காய்ந்த பிறகு, அவுரி பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து பேஸ்ட் போல செய்து, தலைமுடியில் தடவி 1-2 மணி நேரம் கழித்து அலசவும்.
- உடலுக்கு: பொதுவாக 1-3 கிராம் வரை வெதுவெதுப்பான நீரில் கலந்து உணவுக்கு முன் உட்கொள்ளலாம் (மருத்துவர் ஆலோசனைப்படி).
கருப்பு கவுனி அரிசி – Black Rice
கருப்பு கவுனி அரிசி பல நன்மைகளை கொண்டுள்ளது. இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது. மேலும், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இதய நோய்களை தடுக்கவும் உதவுகிறது. கருப்பு கவுனி அரிசி ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது, இது உடலை நச்சுக்களில் இருந்து பாதுகாக்கிறது.
- செரிமானத்தை மேம்படுத்துகிறது:அதிக நார்ச்சத்து இருப்பதால், சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது.
- இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது:நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல உணவாக இது இருக்கிறது.
- இதய நோய்களை தடுக்கிறது:இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மேலும் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
- கொழுப்பை குறைக்கிறது:கெட்ட கொழுப்பை வெளியேற்றி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது:அந்தோசயினின்கள் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலை நச்சுக்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.
- கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:நச்சு நீக்கும் பண்புகள் கல்லீரலை சுத்தப்படுத்தவும், சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன.
- தோல் மற்றும் முடிக்கு நல்லது:கருப்பு கவுனி அரிசியில் உள்ள தாதுக்கள் மற்றும் இரும்புச்சத்தினால், தோல் மற்றும் முடி ஆரோக்கியமாக இருக்கும்.
- Gluten இல்லாதது:Gluten ஒவ்வாமை உள்ளவர்கள் கூட இதை சாப்பிடலாம்.
கருப்பு கவுனி அரிசியை – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
வேம்பாளம் பட்டை – Vembalam Pattai
₹50.00 – ₹90.00Price range: ₹50.00 through ₹90.00வேம்பாளம் பட்டை பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கிறது. தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகள், நரம்பு சுருட்டல், படுக்கைப் புண்கள் மற்றும் சரும வடுக்கள் ஆகியவற்றிற்கு இது ஒரு தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது.
- முடி உதிர்தல், உடைதல், இளநரை, பொடுகு, பேன் தொல்லை மற்றும் அரிப்பு போன்ற கூந்தல் பிரச்சனைகளுக்கு வேம்பாளம் பட்டை உதவுகிறது.
- வேம்பாளம் பட்டை எண்ணெயை தலைமுடிக்கு தடவுவதால், கூந்தல் நீளமாக, அடர்த்தியாக வளர உதவுகிறது.
- முடி உதிர்தல், உடைதல், இளநரை, பொடுகு, பேன் தொல்லை மற்றும் அரிப்பு போன்ற கூந்தல் பிரச்சனைகளுக்கு வேம்பாளம் பட்டை உதவுகிறது.
- முடி உதிர்தல் மற்றும் உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ந்து வைத்திருக்கவும் உதவுகிறது.
- வேம்பாளம் பட்டை எண்ணெயை தலை மற்றும் மூக்கின் மீது தடவுவதால் மன அமைதி கிடைக்கிறது.
- சரும வடுக்கள், தீக்காயங்கள், சரும தொற்றுகள் மற்றும் அழற்சி போன்ற சரும பிரச்சனைகளுக்கு வேம்பாளம் பட்டை ஒரு மருந்தாகப் பயன்படுகிறது.
- ‘வெரிகோஸ் வெயின்’ எனப்படும் நரம்பு சுருட்டல் பாதிப்பு மற்றும் படுக்கைப் புண்களுக்கும் வேம்பாளம் பட்டையை பயன்படுத்தலாம்.
- வேம்பாளம் பட்டை எண்ணெய் தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு அளிக்கும். தலை மற்றும் மூக்கின் மீது எண்ணெயை தடவுவதால் மன அமைதி கிடைக்கும், நிம்மதியான தூக்கம் வரும்.
முடி சார்ந்த பிரச்சனைகளான முடி உதிர்தல், உடைதல், இளநரை, பொடுகு, பேன் தொல்லை மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வேம்பாளம் பட்டை சிறந்த தீர்வாகும். இது தவிர, ‘வெரிகோஸ் வெயின்’ எனப்படும் நரம்பு சுருட்டல் பாதிப்பு, படுக்கைப் புண்கள் மற்றும் சரும வடுக்கள் போன்றவற்றிற்கும் வேம்பாளம் பட்டை சிறந்த தீர்வாகும்.
வேம்பாளம் பட்டை சிவப்பு வண்ண இயற்கை நிறமூட்டியாக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
இதை இயற்கை அழகுப் பொருட்கள் தயாரிப்பில் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்தப் பட்டை சரும தொற்றுகள் வராமல் தடுக்கக் கூடியது. இதன் அழற்சி எதிர்ப்புத் தன்மை, தீக்காயங்களை விரைவாக ஆற்றும். சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்புகளையும் குணப்படுத்தும்.
வேம்பாளம் பட்டைப் பொடியை, வெண்ணெய்யுடன் கலந்து அழற்சி மற்றும் தீக்காயங்கள் உள்ள இடங்களில் பூசிவந்தால் விரைவாக குணமடையும். வேம்பாளம் பட்டை, பெருங்காயம் கருஞ்சீரகம் ஆகியவற்றை பொடித்து, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து காயங்களின் மேல் பற்று போட்டு வந்தால் அவை விரைவாக ஆறும்.
வேம்பாளம் பட்டையை – Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
மூலிகை கூந்தல் தைலம் – Herbal Hair Oil
Prevents hair loss and helps hair grow longer and thicker.அரப்பு இலை பொடி – Arapu Ilai Powder
- உச்சந்தலை முதல் பாதம் வரை உடலின் உஷ்ணம் குறைக்க உதவுகிறது. தலைமுடி உதிர்வதை குறைத்து முடி நன்கு வளர உதவுகிறது.
- அரப்பு குளியல் பொடியை தினசரி பயன்படுத்த சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் பெற உதவுகிறது.
- எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது தலைமுடியில் ஏற்படும் எண்ணெய்ப்பசை தன்மை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது.
- எண்ணெய்பசை தன்மை உள்ள முகத்திற்கு, பேஸ்ட் போல செய்து முகத்தில் பேஸ் பேக் செய்து 10 நிமிடம் ஊறவைக்க முகம் பொலிவு பெற உதவுகிறது.
அஞ்சன கல் – Anjana Kal
₹50.00 – ₹250.00Price range: ₹50.00 through ₹250.00அஞ்சனக்கல் – லை, ‘சுர்மா கல்’ என்றும் அழைப்பார்கள். இந்தக் கல் பஞ்சாப், ஆந்திரா, தென் தமிழகத்திலும் கிடைக்கிறது. இவை இலகுவாக உடையும் தன்மையை உடையது. ஆனால், தண்ணீரில் கரையாது.
அஞ்சனக் கல்லை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்கி வந்தீர்கள் என்று சொன்னால் எந்த விதமான துர்சக்திகள் உங்கள் வீட்டிற்குள் அண்டாது.
அஞ்சனக்கல் பன்னீர் விட்டு இழைத்து கண்புருவங்கள் ,கண் பட்டை, லாட மத்தி என்று அழைக்கப்படும் நடு நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ள நெற்றிக்கண் எனப்படும் புருவப்பூட்டு 90 நாட்களில் திறக்கும்.
கண்களிலும், புருவத்திலும் ஆண்கள், பெண்கள் இருவருமே இதை பயன்படுத்துகிறார்கள். அழகுக்காக மட்டுமில்லாமல், இந்த அஞ்சனக்கல்லை பயன்படுத்துவது கண்களுக்கு குளிர்ச்சியை கொடுப்பதாகும். அதுமட்டுமின்றி, வசீகரத்தை ஏற்படுத்தக்கூடியது. இமைகளும், புருவங்களும் நீளமாக வளர்வது மட்டுமில்லாமல், கருமையாகவும் இருக்கும்.
ஹெர்பல் ஹேர் டை – Herbal Hair Dye
கொள்ளு குடம்புளிச் சாறு – Horsegram Malabar Tamarind Extract
Kollu Kodampuli Juice Benefits
- Help lower cholesterol levels
- May help with weight loss.
- May reduce blood sugar level.
- Weight Loss supplement
இதன் பயன்கள்:
- சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.
- உடல் எடை மற்றும் தொப்பை குறைய உதவுகிறது.
- இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.
- கை, கால், மூட்டு ,முழங்கால் ,தோள்பட்டை ,முதுகெலும்பு, தேய்மானம் மற்றும் வீக்கத்தைபோக்க உதவும்.
- குடலுக்கு நன்மைகள் ஏராளம்.
- மலச்சிக்கலுக்கு மருந்து.
- நீரிழிவு நோய் வகைகளை தீவிரமாகாமல் தடுத்து, கட்டுப்படுத்த செய்கிறது.
- நோய் எதிர்ப்பு சக்திக்கு குடம்புளி பயன்படுத்தலாம்.
- சருமப் பொலிவுக்கும் குடம்புளி உதவுகிறது. கேச பளபளப்பிற்கும் குடம்புளி உதவுகிறது.
- உதட்டு வெடிப்பு நீங்க குடம்புளி வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
உடல் எடை குறைய வேண்டும் என விரும்புபவர்கள் சிறு நெல்லி அளவு குடம்புளியை எடுத்து நீரில் ஊறவைக்க வேண்டும். அதில் மூன்று பங்கு நீர் எடுத்து கொதிக்கவிட்டு, பிறகு அதை குளிரவைத்து உணவுக்கு முன்பு அரை டம்ளர் வீதம் என மூன்று வேளையும் குடித்து வர எடை குறையும். ஆனால், ஆயுர்வேதமாகட்டும் இல்லை வேறு எந்த மருத்துவமும் ஆகட்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துகொள்ள வேண்டாம்.
கொள்ளு குடம்புளிச் சாறு – தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
வெட்பாலைத் தைலம் – Vetpalai Thailam
காளாஞ்சகப்படை, தோல் தடிமண், பொடுகு.
வசம்பு – Vasambu
Eliminates stomach ailments. Applying it on the head will cure lice/dandruff. Useful in speech therapy
மருதாணி பவுடர் – Marudhani (Henna) Powder
₹30.00 – ₹330.00Price range: ₹30.00 through ₹330.00செம்பருத்தி பூ உலர்ந்தது – Hibiscus Flower Dried
₹40.00 – ₹330.00Price range: ₹40.00 through ₹330.00சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களூம் மருத்துவ பயன்கள் கொண்டது. இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது.
கூந்தல் வளர்ச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது. செம்பருத்திப் பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.
செம்பருத்தி பூவின் சத்துக்கள்:
❖ இயற்கையான அமிலங்கள்
❖ இரும்பு
❖ பாஸ்பரஸ்
❖ கால்சியம்
❖ வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்
செம்பருத்தி இலைகளின் சத்துக்கள்:
❖ 2-3% புரதங்கள்
❖ இரும்பு
❖ கால்சியம்
❖ பாஸ்பரஸ்
செம்பருத்தி பயன்கள்:
❖ அழகு: தலைமுடி பராமரிப்பு, சரும பராமரிப்பு
❖ உணவு: தேநீர், சூப்கள், ஜெல்லி, சாலடுகள்
❖ மருத்துவம்: இரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு, காய்ச்சல் குணமாகும்.
செம்பருத்தி இதழ்கள் மற்றும் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் அரை டம்ளர் ஆக சுண்டும் வரை கொதிக்க வைத்து குடித்து வர இதயம் பலம் பெறுவதோடு மிகை ரத்த அழுத்தத்திற்கும் மிகச் சிறந்த மூலிகையாக உள்ளது.
உலர் செம்பருத்தி பூக்கள் – தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். டோர் டெலிவரி வசதியும் உள்ளது.