குடம்புளி – Kudam puli (Malabar Tamarind)
குடம்புளி சமையலில் சுவை கூட்டவும், செரிமானத்திற்கும் பயன்படுகிறது. மேலும், இது உடல் எடையைக் குறைக்கவும், இதயத்தை காக்கவும், மூளையின் செயல்பாடுகளைத் தூண்டவும் உதவுகிறது.
குடம்புளியின் பயன்கள்:
-
செரிமானத்திற்கு:குடம்புளி செரிமான உறுப்புகளைத் தூண்டி, அவற்றின் சக்தியை அதிகரிக்கும்.
-
உடல் எடையைக் குறைத்தல்:உடல் எடையைக் குறைக்கும் மருந்து வகைகளில், குடம்புளி ஒரு முக்கிய மூலப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
-
இதயத்திற்கு:இதய சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும் தன்மையும், இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் தன்மையும் குடம்புளிக்கு உள்ளது.
-
மூளைக்கு:மூளையின் செயல்பாடுகளைத் தூண்டவும் குடம்புளி உதவுகிறது.
-
கால்நடைகளுக்கு:கால்நடைகளுக்கு ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கும் குடம்புளி மருந்தாகத் தரப்படுகிறது.
-
சர்க்கரை வியாதி:சர்க்கரை வியாதியை நிவர்த்தி செய்யும் தன்மையும் குடம்புளிக்கு உள்ளது.
-
தசைகளை வலுவாக்குதல்:உடல் தசைகளை வலுவாக்குவதோடு, தசைநார்களையும் உறுதியாக்கி ஆற்றலை அதிகரிக்கும்.
-
அழற்சி எதிர்ப்பு:அழற்சி எதிர்ப்பு செயல்பாட்டை கொண்டுள்ளதால், மூட்டுவலி வராமல் தடுக்கிறது.
-
ஆன்டிஆக்ஸிடன்ட்:ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் சருமத்தை ஃப்ரீ ரேடிகள்ஸிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
-
தூக்கமின்மை:தூக்கமின்மை போக்க உதவுகிறது.
-
நோயெதிர்ப்பு சக்தி:உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.குடம்புளியின் இதர பயன்கள்:
- உலர்ந்த பழத்தின் சதைப்பகுதியானது தங்கம் மற்றும் வெள்ளியைத் துலக்குவதற்கு பயன்படுகிறது.
- ரப்பர் பாலை கெட்டியாக்குவதற்கும் குடம்புளி பயன்படுகிறது.
கால்நடைகளின் வாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் குடம்புளி மருந்தாகப் பயன்படுகிறது.
குடம்புளியை பயன்படுத்துவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.
₹20.00 – ₹90.00
15
People watching this product now!