காட்டுச் சீரகம் – Kaattu Jeeragam
உடல் எடை, புற்றுநோய் தடுக்கும் காட்டு சீரகம்
காட்டுசீரகம் வயிறு உபாதைகள், உடல் பருமன், சயாடிகா என்று கூறப்படும் நரம்புகள் இழுத்து வலிக்கும் பிரச்சனை போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.
உடல் எடை குறைப்பு
உடலில் ஏற்படும் சிறுநீரக பிரச்சனையால் கால்கள் வீக்கத்தை குறைக்க ஒரு தேக்கரண்டி காட்டு சீரக சூரணம் எடுத்து, அதைத் தேனில் குழைத்து சாப்பிடலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள் தேன் சேர்க்காமல், வெந்நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். இது தைராய்டு சீராக சுரக்கவும் உதவுகிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காட்டு சீரகத்தை மருந்தாக சாப்பிட்டு வரலாம். சிலருக்கு வயிறு மட்டும் பானை போல இருக்கும். வாயு தொந்தரவுகள் அதிகம் இருக்கும். இதுபோன்ற பிரச்னையை எதிர்கொள்ளும் மக்கள், காட்டு சீரகம் சூரணம் ஒரு சிட்டிகை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை பருகி வந்தாலே வயிறு குறைய ஆரம்பித்து வாயு பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அதோடு உடல் எடையும் குறையும்.
புற்றுநோய் தடுப்பு மருந்து
காட்டு சீரகத்துக்கு புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி உண்டு. ரத்த குழாய் சுருக்கம், ரத்த குழாய் அடைப்பு, வெரிகோஸ் வெயின் பிரச்சனைகள் என்று எல்லாவற்றுக்கும் இது தீர்வு தரக்கூடியதாக இருக்கிறது.
மூட்டு வலி கால்களில் வீக்கம் என்றால் காட்டு சீரகத்தை மருந்தாக எடுத்துக்கொள்ளும்போது ரத்த குழாய் மண்டலத்தின் ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தி, ரத்த குழாயின் பிரச்சனைகளைத் தீர்க்கிறது.
காட்டு சீரகத்தை தகுந்த மருத்துவ ஆலோசனை இல்லாமல் மருந்தாக எடுத்துக்கொள்வது தவறு. எனவே, உங்களுக்கு தெரிந்த ஆயுர்வேத மருத்துவரிடம் இதுபற்றிய ஆலோசனைகளை பெறுவது நல்லது.
இந்த காட்டு சீரகத்தை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.
₹50.00 – ₹180.00Price range: ₹50.00 through ₹180.00
General info
| Weight | N/A |
|---|---|
| Size |
100 gms ,250 gms ,50 gms |





