கிச்சிலிக் கிழங்கு – Kichili kilangu
பூலாங்கிழங்கு: கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.
வடமாநிலங்களில் இதை ஊறுகாய் போட பயன்படுத்துவார்கள். ஒரு சில வெளிநாடுகளில் மசாலா பொருளாக பயன்படுத்துகிறார்கள்.
தோற்றத்தில் பார்ப்பதற்கு இஞ்சி போலவே ஆரஞ்சு நிறத்தில் இந்த கிழங்கு காணப்படும். இதன் வாசனை மாம்பழம் போலவே இருக்கும். சுவை கசப்புத் தன்மையுடன் இருக்கும்.
முன்பெல்லாம், குழந்தைகளை குளிக்க வைக்க இந்த கிச்சிலி கிழங்கை தான் பயன்படுத்தி உள்ளனர். இப்போதும் கூட நாட்டு மருந்து கடைகளில் இந்த கிழங்கு கிடைக்கிறது.
இதிலுள்ள ‘குர்குமின்’ என்ற பொருளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அடங்கியிருப்பதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துகிறது. அத்துடன், புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கவும் இந்த கிச்சிலி கிழங்கு பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, பெண்களை தாக்கக்கூடிய மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவற்றை நெருங்க விடாமல் காக்கிறது.
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. மிகச்சிறந்த கிருமி நாசினியாக கிச்சிலி கிழங்குகள் பயன்படுகின்றன.
இதைக்கொண்டு டீ தயாரித்து குடிக்கலாம், சூப் செய்தும் குடிக்கலாம். இவ்வாறு செய்வதனால் மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படும் அத்தனை கோளாறுகளும் நீங்குகிறது.
இந்த கிழங்கை காயவைத்து, இடித்து தூள் செய்து, சலித்து எடுத்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
நுரையீரலில் ஏற்படும் கோளாறுகள், ஆஸ்துமா, சளி, இருமல், போன்றவற்றுக்கும், அஜீரணம், மலச்சிக்கல், வாயு தொந்தரவு போன்ற அத்தனை பிரச்சனைக்கும் இந்த கிச்சிலி கிழங்கு பொடி அருமருந்தாகிறது.
அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் கூட தாராளமாக இந்த பொடியை பயன்படுத்தலாம்.
இந்த தூளிலிருந்து சிறிது எடுத்து தேனில் கரைத்து சாப்பிட்டு வர இருமல், தொண்டைக்கட்டு, காய்ச்சல் ஆகியவவை காணாமல் போகும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கிச்சிலி கிழங்கையும், சிறிது மஞ்சளையும் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால் இருமல், சளி, காய்ச்சல் எதுவாக இருந்தாலும் ஓடிவிடும்.
இந்த பொடியில் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து, காயங்கள், வலிகள், வீக்கங்கள், சரும அலர்ஜி, புண்கள் இருக்கும் இடத்தில் தடவினால், அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
அதுமட்டுமல்லாமல் தோல் பிரச்சனை, முகப்பரு, கரும்புள்ளிகளுக்கு தரப்படும் சிகிச்சைகளிலும் இந்த கிழங்கு பயன்படுகிறது. குறிப்பாக, இந்த கிழங்கின் வேர்ப்பகுதிகள் தான் மருந்தில் சேர்க்கப்படுகின்றன.
கிச்சிலி கிழங்கை பயன்படுத்துவதற்கு முன் ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது.
₹65.00 – ₹560.00Price range: ₹65.00 through ₹560.00
General info
| Weight | N/A |
|---|---|
| Size |
100 gms ,250 gms ,50 gms ,500 gms |
