நல்லெண்ணை – Seasame Oil

நல்லெண்ணெய் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நச்சுக்களை வெளியேற்றி, சருமம் மற்றும் கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது. இது உடல் சூட்டைத் தணித்து, மூட்டு வலி மற்றும் தோல் நோய்களைக் குறைக்கிறது. மேலும், ஆயில் புல்லிங் (Oil pulling) மூலம் வாய் சுகாதாரத்தைப் பேணுவதற்கும், செரிமானத்திற்கும் உதவுகிறது.

 

நல்லெண்ணெயின் முக்கிய பயன்கள்:
  • இதய ஆரோக்கியம்: இதில் உள்ள லினோலிக் அமிலம் இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்பை அதிகரித்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு: சருமத்திற்கு ஊட்டமளித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் சோர்வை நீக்கி நச்சுக்களை வெளியேற்றும்.
  • வாய் சுகாதாரம்: ஆயில் புல்லிங் (Oil pulling) மூலம் வாய் கொப்பளிப்பது ஈறுகளை வலுப்படுத்தி, பற்களை வெண்மையாக்கி, பாக்டீரியாக்களைக் குறைக்கிறது.
  • உடல் சூடு தணித்தல்: இது உடலுக்கு குளிர்ச்சியையும், நிம்மதியான உறக்கத்தையும் தருகிறது.
  • மூட்டு வலி: மசாஜ் செய்வதன் மூலம் மூட்டு வலிகள் மற்றும் தசைப்பிடிப்புகளைக் குறைக்க உதவும்.
  • செரிமானம்: வெறும் வயிற்றில் சிறிது நல்லெண்ணெய் குடிப்பது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
பயன்படுத்தும் முறைகள்:
  • சமையல்: தினசரி சமையலில் பயன்படுத்தலாம்.
  • தேய்த்துக் குளித்தல்: குளிப்பதற்கு முன் தலை மற்றும் உடல் முழுவதும் தேய்த்து 15-20 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம்.
  • வாய் கொப்பளித்தல்: 1-2 ஸ்பூன் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி 10-15 நிமிடங்கள் கொப்பளித்து துப்பலாம் (ஆயில் புல்லிங்).

1. ஆரோக்கிய இதயம்

நல்லெண்ணெயில் சீசேமோல் (sesamol) என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

2. நீரிழிவு

நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம் – இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

3. வலுவான எலும்புகள்

நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்து கொள்ளும்.எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

4. மலச்சிக்கல் / செரிமான பிரச்சனை

மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

5. இரத்த அழுத்தம்

நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

6. பளிச் பற்கள்

தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால் (Oil Pulling), பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

7. அழகான சருமம்

நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்நல்லெண்ணெய் எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

8. கெட்ட கொழுப்பைக் கரைக்கும்

நல்லெண்ணெயில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து (LDL), நல்ல கொழுப்பின் (HDL)அளவை அதிகரிக்கும்.

9. உடலுக்கு குளிர்ச்சி

உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெயை சிறிது குடித்தால், உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.

10. இரத்த அழுத்தம்

நல்லெண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். குறிப்பாக நல்லெண்ணெய் குடிப்பதால், இரத்த அழுத்த மருந்துகளை நாளடைவில் குறைத்துவிடலாம்.

11. எலும்புப்புரை

நல்லெண்ணெயில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்தால், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

12. மனநிலையை மேம்படுத்தும்

நல்லெண்ணெய் மன அழுத்தத்தைக் குறைத்து, மனநிலையை மேம்படுத்தும். மேலும் இது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற செய்து கடுமையான சோர்வில் இருந்து விடுபடச் செய்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

13. மூட்டு வலி

மூட்டுகளில் பிரச்சனை உள்ளவர்கள், நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதன் மூலமோ அல்லது குடிப்பதன் மூலமோ குணப்படுத்தலாம்.தினமும் நல்லெண்ணையில் மசாஜ் செய்து வந்தால் அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குணமாக்கும்.

14. பல் வலி மற்றும் ஈறு பிரச்சனைகள்

நல்லெண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், இந்த எண்ணெயைக் தினமும் காலையில் வாயில் சிறிது ஊற்றி, 10 நிமிடம் கொப்பளித்து, வர வேண்டும். இப்படி செய்து வந்தால், பல் வலி, ஈறு பிரச்சனைகள் போன்றவை நீங்கி வாய் ஆரோக்கியம் மேம்படும்.

15. கண்கள் ஆரோக்கியம்

நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும்.

கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், கண்கள் சிவப்பாகி, அதன் ஆரோக்கியம் பாழாகும். எனவே வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்வதன் மூலம், கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.

16. தூக்கமின்மை

தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

17. பொடுகு தொல்லை

பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால், பொடுகுத் தொல்லை காணாமல் போய்விடும்.

 

இந்த நல்லெண்ணெயை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.

India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Price range: ₹75.00 through ₹330.00

🛒 Minimum Order: 1 quantity
QR
நல்லெண்ணை - Seasame Oil QR Code
Scan Me

நல்லெண்ணை - Seasame Oil

நல்லெண்ணை - Seasame Oil

இந்த QR Code-ஐ scan செய்தால் இந்த product-ன் முழுமையான விவரங்கள், படங்கள், பலன்கள், விலை, variation options மற்றும் WhatsApp Order வசதிகள் உள்ள product page திறக்கும்.

💬
WhatsApp மூலமும் Order செய்யலாம்
நேரடியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
நல்லெண்ணை - Seasame Oil
நல்லெண்ணை - Seasame Oil
₹75.00 முதல் கிடைக்கும்
✓ Genuine Products ✓ Courier / India Post ✓ Door Delivery
💬 Buy on WhatsApp Order / Enquiry →
📞 Call Now
19 People watching this product now!

General info

Weight N/A
Size

1 Ltr

,

100 ml

,

200 ml

,

500 ml

Brand