ஆவாரம் பட்டை – Aavaram Pattai

பட்டை கஷாயம் சாப்பிட சருமத்திற்கு ஒளி தரும். நீரிழிவுத் தீரும். இதன் பூவைக் கூட்டுச் செய்துச் சாப்பிட மூத்திர சம்பந்தமான நோய்கள் குணமாகும். வெள்ளை வெட்டைத் தீரும். குளிர்ச்சியைத் தரும்.

மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து அதை தண்ணீரில் போட்டு காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.

சருமத்தில் வீக்கம் இருந்தால் பட்டை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கப்பட்டு சுத்தம் செய்து வந்தால் படிப்படியாக வீக்கம் குறைக்கும்.

ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.

ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.

ஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.



இதன் கஷாயம் நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Original price was: ₹40.00.Current price is: ₹35.00.

2 People watching this product now!

General info

Weight 0.120 kg
Size

100 gms