பற்படாகம் – Parpadagam

பற்பாடகம் (அ) பற்படாகம் முழுத் தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. மலமிளக்கும்; பசியைத் தூண்டும்; வியர்வையைப் பெருக்கும்.

உடலைத் தேற்றும்; காய்ச்சல் தணிக்கும்; உடல் வெப்பத்தைக் குறைக்கும்; அழுகலகற்றும்; தாகம், பித்த நோய்களை போக்கி கண்களுக்கு குளிர்ச்சி உண்டாக்கும்.

காடுகள் அழிக்கப்பட்ட சமவெளிப் பகுதிகளில் அபரிதமாக வளர்கின்றது. முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. இது காய்ந்த நிலையில் எமது பாண்டி ஹெர்பல்ஸ் – நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சுரத்துடன் கூடிய பேதி குணமாக 2கிராம் பற்பாடகத்தைப் பசுமையானதாகச் சேகரித்துக் கொள்ள வேண்டும். அதனைத் தண்ணீரில் நன்றாகக் கழுவி அம்மியில் அரைத்து 200 மிலி மோரில் கலக்கி உள்ளுக்கு கொடுக்க வேண்டும். தினமும் காலை, மாலை வேளைகளில் 3 நாள்களுக்கு இவ்வாறு கொடுத்து வரவேண்டும்.

காய்ச்சல் குணமாக பற்பாடகம் முழுத் தாவரம், கண்டங்கத்திரி இலைகள், ஆடாதோடை இலைகள், தோல் நீக்கிய சுக்கு, விஷ்ணுகிரந்தி முழுத் தாவரம், வகைக்கு 10 கிராம் சுத்தம் செய்து நன்றாக நசுக்கி ஒரு லிட்டர் நீரில் போட்டு ¼ லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு வேளைக்கு 50 மிலி வீதம் நான்கு வேளைகள் குடிக்க வேண்டும்.

கீல் வாயு குணமாக காய்ந்த பற்படாகம் வேர் 100 கிராம் நசுக்கி ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வரவேண்டும்.

கண் எரிச்சல் குணமாக முழுத் தாவரத்தையும் அரைத்து பசையாக்கி பாலில் கலந்து தலை, உடலில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.

 

 

  • காய்ச்சலுக்கு சிறந்த சிகிச்சை.
  • தைராய்டு நோய்க்கு சிகிச்சை அளிக்கிறது.
  • இதயத் துடிப்பைக் குறைக்கிறது.
  • PMS அறிகுறிகளை விடுவிக்கிறது.
  • ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது.
  • மூக்கில் இரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  • இருமல் மற்றும் நெரிசலைக் குறைக்கிறது. 
  • தூக்கமின்மையை நீக்குகிறது.

இந்த மூலிகையை தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம். Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Price range: ₹25.00 through ₹45.00

🛒 Minimum Order: 1 quantity
QR
பற்படாகம் - Parpadagam QR Code
Scan Me

பற்படாகம் - Parpadagam

பற்படாகம் - Parpadagam

இந்த QR Code-ஐ scan செய்தால் இந்த product-ன் முழுமையான விவரங்கள், படங்கள், பலன்கள், விலை, variation options மற்றும் WhatsApp Order வசதிகள் உள்ள product page திறக்கும்.

💬
WhatsApp மூலமும் Order செய்யலாம்
நேரடியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
பற்படாகம் - Parpadagam
பற்படாகம் - Parpadagam
₹25.00 முதல் கிடைக்கும்
✓ Genuine Products ✓ Courier / India Post ✓ Door Delivery
💬 Buy on WhatsApp Order / Enquiry →
📞 Call Now
4 People watching this product now!

General info

Weight N/A
Size

100 gm

,

50 gms