கொள்ளு – Kollu (HorseGram)

கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு – ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு  அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு.

கொள்ளை ரசமாக வைத்து சாப்பிட்டால் மிகுந்த நன்மை அளிக்கும் என சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது. உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையும்.

கொள்ளை நாம் தொடர்ந்து எடுத்து கொண்டால் நம் ரத்த அழுத்தம் சீரான அழுத்தத்தில் இருக்கும். மேலும் சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும். ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடுமையான உடல் உழைப்பிற்க்கு பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் குறைக்கும்.

கொள்ளுப் பருப்பை நீரில் ஊற வைத்து, அந்த நீரை குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம், வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளில் அடங்கியுள்ள ஊட்டசத்துக்கள்

கொள்ளில் புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து, மாவுசத்து, தாதுபொருள்கள், வைட்டமின்கள் போன்றவை மிகுதியாக நிறைந்துள்ளது.

கொள்ளை அரைத்து பொடி செய்து, ரசத்தில் பயன்படுத்தி வரலாம். சிலருக்கு வாயு பிரச்சனையால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். அவர்கள் கொள்ளை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால் நன்கு பசி ஏற்படும்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. சிறுநீரக கற்களை குணப்படுத்துகிறது.

இதில் வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன.

ஆரோக்கியப் பலன்கள்

புரதம் நிறைந்தது
அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது.

உடல் எடை குறைக்கும்!
சாப்பாட்டில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும்.

சளி, காய்ச்சல்
இதை தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து அந்த நீரை அருந்தினால், ஜலதோஷம் குணமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன.

சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்!
இதை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், சிறிய அளவிலான சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும்.

விந்தணுக்கள் அதிகரிக்கும்!
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள் உள்ளன. இவை ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மலட்டுத்தன்மையை நீக்க உதவுபவை.

சர்க்கரைநோய் தடுக்கும்!

சர்க்கரையின்அளவீடு அதிகமாகும்போது, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும்.ஆனால், கொள்ளு ஆன்டி- ஹைப்பர்கிளைசெமிக் (Antihyperglycemic) உணவு வகையை சேர்ந்தது. எனவே, இது சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்தது.

மாதவிடாய்ப் பிரச்னைகளைச் சரிசெய்யும்
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்; மாதவிடாய் பிரச்னைகளை சரிப்படுத்தும்.

இந்த கொள்ளு – தற்பொழுது Pondy Herbals மற்றும் ssvs divyam போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கூட வாங்கலாம்.

India Post மற்றும் Courier – டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

Price range: ₹35.00 through ₹120.00

🛒 Minimum Order: 1 quantity
QR
கொள்ளு - Kollu (HorseGram) QR Code
Scan Me

கொள்ளு - Kollu (HorseGram)

கொள்ளு - Kollu (HorseGram)

இந்த QR Code-ஐ scan செய்தால் இந்த product-ன் முழுமையான விவரங்கள், படங்கள், பலன்கள், விலை, variation options மற்றும் WhatsApp Order வசதிகள் உள்ள product page திறக்கும்.

💬
WhatsApp மூலமும் Order செய்யலாம்
நேரடியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
கொள்ளு - Kollu (HorseGram)
கொள்ளு - Kollu (HorseGram)
₹35.00 முதல் கிடைக்கும்
✓ Genuine Products ✓ Courier / India Post ✓ Door Delivery
💬 Buy on WhatsApp Order / Enquiry →
📞 Call Now
4 People watching this product now!

General info

Weight 0.25 kg
Size

1 Kg

,

250 gms

,

500 gms